காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ.கே. சிவமலரின் 14 கோடி ஊழல்! கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் நடவடிக்கை எடுப்பாரா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜனவரி 25, 2025 • Makkal Adhikaram

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ .கே. சிவமலர் 15.3. 2024 முதல் 30.11.2024 வரை பணியில் சேர்ந்த நாள் முதல் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஏற்படுத்திய நிதி இழப்பு குறித்து அதே வங்கியில் மேலாளராக பணியாற்றிய வந்த கோ வரலட்சுமி அவர் மீது புகார் அளித்துள்ளார். 

A. K. SIVA MALAR

அந்தப் புகாரை கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க என்ன காரணம்? அரசியலா? மேலும், வங்கியின் மேலாளர் கோ. வரலட்சுமியை லோன் வசூலாகவில்லை என்று அவரை பணியிடம் நீக்கம் செய்துள்ளார். ஒரு வங்கி மேலாளரை தவணை தேதி படி கொடுத்த லோன் வசூலாகவில்லை என்று பணியிடை நீக்கம் செய்ய முடியுமா? மேலும், இவர் கொடுக்கப்பட்ட கடன்களின் கடன் பத்திரம் எதுவும் காலாவதியாகவில்லை.

 ஒரு வங்கி மேலாளர் அடுத்து வரக்கூடிய வங்கி மேலாளர் தான் அந்தக் கடனை வசூல் செய்ய வேண்டும். இவர் காலத்தில் கொடுக்கப்பட்ட வங்கி கடன்கள் வசூலாகவில்லை என்றால் இவர் மட்டுமே பொறுப்பா? அடுத்து வந்துள்ள மேனேஜர் பொறுப்பல்லவா? எதுவுமே தெரியாமல், வங்கியின் எந்த சட்ட திட்டமும் தெரியாமல், அதிகார வரம்பு மீறி ஒருவரை பணியிடை நீக்கம் செய்யலாமா? 

மேலும், அவ்வாறு செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஏ கே சிவமலர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? மேலும், மேலாண்மை இயக்குனர் ஏ. கே. சிவமலர் இதைவிட வங்கிக்கு கோடிக்கணக்கில் நிதி இழப்பு ஏற்படுத்தி உள்ளது பற்றி கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? அதாவது 4.7. 2024 தேதியில்  வங்கிக்கு தளவாட சாமான்கள் கொள்முதல் செய்த வகையில் 12,77,25,171.77 செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

 அதாவது 4.7.2024, தேதியில் Furniture fixtiure and fitting கொள்முதல் செய்த தளவாட சாமான்கள். மேலும், தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து கிளைகளிலும் உள்ள இந்த தலைவருடைய சாமான்கள் மதிப்பு  31.3.2024 க்கு ரூ 2,74,62,422.99 ஆக உள்ளது( தேய்மானம் நீங்களாக) மேலும், இந்த தளவாடை சாமான்கள் ஒரே ஆண்டில் ஒரே நாளில் எப்படி 12.77 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது? இதில் கண்டிப்பாக மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிய வருகிறது. 

இது தவிர, இதே தேதியில்  வங்கிக்கு வாகனங்கள் கொள்முதல் செய்ததில்,1,36,16009 செலவு கணக்கு வங்கியில் செய்யப்பட்டுள்ளதாக கணக்கு எழுதப்பட்டுள்ளது. இப்படி ஒரே தேதியில் 14 கோடி அளவுக்கு வங்கிக்கு தளவாட சாமான்கள் வாங்கியது கணக்கு காட்ட முடியுமா? கூட்டுறவுத் துறையில் எந்த ஆண்டிலாவது மேலாண்மை இயக்குனர்கள் வாங்கியிருக்கிறார்களா? அல்லது இவ்வளவு பெரிய தொகை செலவு கணக்கு எழுதி இருக்கிறார்களா? அடுத்த ஒரு பெரிய சட்ட மோசடி அரங்கேற்றியுள்ளார் அது என்ன என்றால்

கிருஷ்ணகுமார் (Internal auditor)

 இந்த தளவாட சாமான்கள் வாங்கியது குறித்து எந்த தேதியில் இவர் தீர்மானம் போட்டு உள்ளார்? தீர்மானம் போடாமலே பணத்தை தளவாட சாமான்கள் வாங்கிய கம்பெனிக்கோ அல்லது கடைக்கோ அனுப்பி உள்ளாரா? அதேபோல் வங்கிக்கு வாகனங்கள் வாங்கியதில் எந்த கம்பெனி வாகனம் வாங்கப்பட்டுள்ளது? வண்டியின் போட்டோக்கள்? வண்டியின் பதிவு எண்கள்? குறித்த விபரங்களை தணிக்கை அதிகாரி கிருஷ்ணகுமார் (Internal auditor) ஆய்வு செய்தார்களா? எந்தெந்த தேதியில் ஆய்வு செய்யப்பட்டது? இப்படி பல கேள்விகளுக்கு வங்கியின் கூட்டுறவு பதிவாளர் டாக்டர் சுப்பையன் வங்கியின் நிதி இழப்பு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்…….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *