நாட்டின் பல நல்ல விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட மொழி, இனம் இவை அனைத்தையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த தேசத்தை ஆள்வது ,காப்பாற்றுவது ,ஒரு கடினமான வேலை .அதற்கு எவ்வளவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, போராட்டம், சுயநலம், அவதூறு பரப்புதல், இத்தனையும் சமாளித்து பிரதமர் மோடி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் .

அதற்கு மனசாட்சி உள்ள நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல சிக்கலான வழக்குகளை சரியான முறையில் தீர்ப்பளித்து, இந்தியாவின் ஒற்றுமைக்கு, ,ஒருமைப்பாட்டுக்கு, இந்த தேச நலனுக்கு, நீதித்துறையில் அவர் செய்த சேவை வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒன்று.. மேலும்,

அத்தனையும் இந்த தேசத்திற்கு எதிரான ஒரு கூட்டம் மறைமுகமாக மதம், அந்நிய சக்திகள் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பல்வேறு வழக்குகள் தொடுப்பது, தவறான கருத்துக்களை பரப்புவது, பத்திரிகை ,தொலைக்காட்சிகள் , மூலம் பரப்புவது, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் இந்த வழக்குகளை எல்லாம் விசாரித்து நடுநிலையான ,உண்மையான நேர்மையான, தீர்ப்பை வழங்கி உள்ளார்.

அவை ஒவ்வொன்றும் இந்திய வரலாற்றின் சரித்திரம் . முதலில் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய மக்கள் அவர்களுக்கு சிக்ஸ் எ என்ற சட்டம் கொண்டு வரக்கூடாது என்று காங்கிரஸ் கட்சி மற்றும் மதவாதிகள் இதை தொடர்ந்து போராடியும் தேவையில்லாமல், நீதிமன்றத்தை நாடி பல்வேறு வழக்குகளை போட்டும் ,அதில் சரியான தீர்ப்பளித்து இந்த தேச நலனில் அக்கறை உள்ள ஒரு மாமனிதர் என்றுதான் சொல்ல வேண்டும் . மேலும்,

அதாவது வெளிநாட்டில் இருந்து முஸ்லிம்களாக இருக்கட்டும் அல்லது வேறு மதத்தினராக இருக்கட்டும் 19 66 மற்றும் 1971 இந்த காலகட்டங்களில் வந்த வெளிநாட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை உண்டு.தவிர, யார் வந்தாலும் ,

எப்போது வந்தாலும், அவர்களுக்கு குடியுரிமை ஓட்டுக்காக கொடுத்து ,நாட்டை பலவீனப்படுத்த எதிர்கட்சிகள் மற்றும் அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் ,ஒன்றிணைந்து தான் அவ்வப்போது நாட்டில் போராட்டங்களை ,தவறான பிரச்சாரங்களை, ஊடக வாடகை வாய்களால் ,யூடியூபர்கள் ,பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் வாயிலாக சிலர் அரசியல் தெரியாத மக்களிடம் பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சிக்ஸ் ஏ என்ற சிஏஏ (CAA ) சட்டம் நாட்டில் கொண்டுவரக் கூடாது என்பதில் காங்கிரஸ் மற்றும் அந்நிய சக்திகள் மக்களிடம் அரசியல் செய்து கொண்டிருந்தார்கள் . இதில்

இவர்களுடைய சூழ்ச்சி என்னவென்றால் ?இப்படி வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய முஸ்லிம்களை வைத்து, இந்தியாவில் தனக்கு சாதகமாக ஓட்டு வங்கியாக அவர்களை மாற்றலாம்.அதை வைத்து ஆட்சி பிடிக்கலாம் என்பது காங்கிரஸின் கனவு .அது பலிக்கவில்லை .

அடுத்தது அந்நிய சக்திகள் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் ,நாட்டு மக்களிடம் குழப்பம் விளைவித்தல் ,போராட்டங்களை ஏற்படுத்துதல் ,தேச துரோக வேலைகளை உருவாக்குதல், மறைமுக தீவிரவாத அமைப்புகள் , பயங்கரவாத அமைப்புகள் ,இங்குள்ள சிறிய அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்து அவர்களை இந்த நாட்டுக்கு எதிராக பேசி ,மக்களை முட்டாளாக்கி இந்த தேசத்திற்கு எதிரான துரோக வேலைகளில், தமிழ்நாட்டிலும் சில கட்சிகள் அந்த வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது தவிர, பல்வேறு youtube பேச்சாளர்கள் ,தொலைக்காட்சிகள் ,பத்திரிகைகள் , பணத்திற்காக விலை போனவர்கள் இதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

இதைத்தவிர , கபில் சிபில் போன்ற வழக்கறிஞர்கள், கம்யூனிஸ்ட் வழக்கறிஞர்கள் ,கம்யூனிஸ்ட் கட்சி ,திமுக, திருமாவளவன் இவர்களெல்லாம் தேச துரோக மறைமுக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் . இதையெல்லாம் மறைப்பதற்கு ஜாதியும், மதமும் கொண்டு வந்து அரசியலில் உள்ளே புகுத்துவார்கள் . இது எல்லாம் ஊரை ஏமாற்றும் கும்பலுக்கு இந்த அரசியல் தெரியுமா? படித்த , படிக்காத மக்களிடம் பெரியாரிசம் ,சனாதனம் இதையெல்லாம் பேசி அரசியல் தெரியாத மக்களுக்கு இவர்கள் சேவை செய்ய வந்தது போல் காட்டிக் கொள்வார்கள் போலி அரசியல்வாதிகள்.

உழைக்காமல் ஊரை ஏமாற்றி ,ரௌடியிசம் செய்து பதவி, அதிகாரத்திற்கு அலையும் கூட்டத்திடம் மக்கள் அரசியல் பேச்சுக்களில் ஏமாறாமல் இருந்தால் இந்தியாவில் உழைக்கும் மக்களின் வளர்ச்சி உயரும்.

மேலும் ,ராமஜென்ம பூமி அதாவது தற்போதைய ராமர் கோயில் கட்டப்பட்ட இடம் வெகு நாளாக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நடந்து வந்த ஒரு வழக்கு! அதற்கும் சரியான முறையில் நேர்மையான தீர்ப்பை அளித்துள்ளார் .அதையும் அசிங்கமாக சொல்லிவிடலாம் . ஆனால் பத்திரிக்கை என்று பார்க்கிறேன் .ஒரு முஸ்லிம் அவர் தான் தொல்லியல் துறையில் முக்கிய அதிகாரியாக வேலை பார்த்து வந்தவர் தான் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்ட இடம் ,அதற்கான ஆதாரங்கள், கல்வெட்டுகள் ,அத்தனையும் நீதிமன்றத்தில் அவர்தான் சமர்ப்பித்து இருக்கிறார் .அதை எல்லாம் விட்டு விட்டார்கள் .நீதிபதி சந்திர சூட் சட்டப்படி அதில் தீர்ப்பு வழங்கவில்லை .அவர் இந்த மாதிரி இக்கட்டான வழக்குகளில் நான் கடவுளை வேண்டி தீர்ப்பு வழங்குவது , மனசாட்சி உள்ள நீதிபதிகள் நிச்சயம் இப்படித்தான் இருப்பார்கள் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை . அவர் சட்ட படி தீர்ப்பு வழங்கினாரா ? அல்லது கடவுளை கேட்டு தீர்ப்பு வழங்கினாரா? இப்படி மனசாட்சி இல்லாத கூட்டம் தங்களை உத்தமர்களாக பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து மக்கள் ஏமாறக் கூடாது.மேலும்,சட்டத்தை மட்டுமே ஒரு நீதிபதி பார்க்கக் கூடாது .மனசாட்சி படியும், அதற்கும் மேலே கடவுளையும் வேண்டி தீர்ப்புகள் வழங்குவதில் தவறில்லை . அவர் சொன்ன ஒரு கருத்தை தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்களா ? அல்லது மக்களை முட்டாள் ஆக்க பேசுகிறார்களா ?

ஆனால் , இவர்களும் அறிவு மேதைகள் போல ,யூடியூப் ஊடக வாடகை வாயர்கள், இதில் ஏதோ ஒரு பெரிய தவறு செய்து விட்டது போல ,குற்றம் கண்டுபிடித்து குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் திருட்டு கூட்டங்களுக்கும் ,மோசடி கூட்டங்களுக்கும், ஊழல் வாதிகளுக்கும் , ஜாதி அரசியல் மற்ற ஜாதிகளை ஏமாற்ற தேவைப்படுகிறதா? அரசியல் என்பது உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கு கொள்ளை அடிக்க கொள்கை தேவைப்படுகிறதா ?

தமிழ்நாட்டில் இப்படிபட்டவர்களுக்காக பத்திரிக்கை நடத்தும் கூட்டமும் ,தொலைக்காட்சிகள் நடத்தும் கூட்டமும், தங்களை நியாயப்படுத்திக் கொள்வதிலும், சட்டப்படி செயல்படுவதிலும், அணுவளவு கூட பிசாதவர்கள் போல காட்டிக் கொள்வதில் இவர்களை மிஞ்ச யாரும் இல்லை என்று இவர்களுடைய ஒரு கற்பனை.இப்படி பட்ட பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு கூட மக்களின் வரி பணம் கோடி கணக்கில் வீண் அடிக்கப் படுகிறது.மத்திய மாநில அரசின் செய்தித்துறை.

இந்த அளவுக்கு இவர்களுடைய பித்தலாட்டங்கள் தெரிந்த சமூகநலன் பத்திரிகைகள் கூட மிக மிகக் குறைவு .இதற்கு நிறைய படிக்க வேண்டும் .ஆய்வு செய்ய வேண்டும் .அப்போதுதான் இந்த போலிகளை அடையாளம் காண முடியும் .
மேலும், இதை தவிர்த்து கிறிஸ்தவ ,முஸ்லிம் பள்ளிகளில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்கள் அவர்களுடைய சம்பளத்தில் வருமான வரி கட்டத் தேவையில்லை என்ற ஒரு கடுமையான சட்டத்தை உடைத்தெறிந்து அவர்களையும் வருமான வரி சட்டத்திற்குள் கொண்டு வந்து சேர்த்த பெருமை தலைமை நீதிபதி சந்திர சூட் க்கு உண்டு . அதாவது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள், கிருத்துவ ,முஸ்லிம் பள்ளிகளில் பணியாற்றியவர்கள் ,இதுவரையில் வருமான வரி கட்டியதே இல்லை .இந்த சட்டம் கொண்டு வந்த பிறகுதான், அவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படுகிறது.

இன்னும் கொஞ்ச காலம் அவர் இருந்திருந்தால்! நாட்டில் மேலும் பல சட்டங்கள் திருத்தப்பட வேண்டி உள்ளது. அதில் இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகள் சட்டமும் ஒன்று .இது 50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சட்டம் அப்படியே உள்ளது. காலத்திற்கு ஏற்றவாறு சட்டங்கள் மாற்றியமைக்க வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு சட்டங்கள் மாற்றி அமைக்க வேண்டும். எவ்வளவோ இது பற்றிய செய்திகள் மத்திய ,மாநில அரசுக்கு தெரிவித்தும் ,அதைப்பற்றி துளிகூட காதில் வாங்கவில்லை .அதனால் ,இது போன்ற சட்டங்கள் இப்படிப்பட்ட மனசாட்சி உள்ள நீதிபதிகளால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த முடியும் என்பது எங்களை போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்கள் நம்பிக்கை .அவருடைய ஓய்வு என்பது இல்லாமல் நாட்டு மக்களுக்கு மீண்டும் தேவை .

Editor.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *