நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்

சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு நீதிமன்ற-செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram

நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் இணைய வழி முகவரி வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவிக்கு, ‘15100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இணைய வழி முகவரி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. 

நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குருமூர்த்தி வெளியிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், விளம்பர பலகை வைத்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி வேலுமயில், நாமக்கல் மகிளா நீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி பிரபா சந்திரன், குடும்ப நலநீதிபதி பாலகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார், முதன்மை சார்பு நீதிபதி விஜய் கார்த்திக், கூடுதல் சார்பு நீதிபதி கண்ணன், மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி தங்கமணி, மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மது ஆகியோர், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு செய்தனர். 

மேலும், மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்களான, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சந்தை, கலெக்டர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், தாலுகா அலுவலகம், நீதிமன்றங்களின் சட்ட உதவி மையங்கள், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் வக்கீல்கள், நாமக்கல் அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள், சட்ட தன்னார்வலர்கள் மூலம் துண்டு பிரசுங்கள் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *