நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

பிப்ரவரி 09, 2025 • Makkal Adhikaram

நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும்.

மக்களுக்காக தான் அரசியல்! மக்களுக்காக தான் அரசியல் கட்சிகள்! இப்படிபட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலும், அரசியல் கட்சியும் இன்று வியாபாரம் ஆக்கப்பட்டது எப்படி? அதற்கு யார் காரணம்? அரசியலும், அரசியல் கட்சியும் மக்களுக்கு சேவை நோக்கம் கொண்டது. அது இன்று வியாபாரமும் தாண்டி கொள்ளையாக மாறிவிட்டது. இதற்கு யார் காரணம் மக்களா? இல்லை அரசியல் கட்சிகளா? மக்களின் அலட்சியம் இதில் 100% இருக்கிறது. 

தவறுக்கு காரணமானவர்கள் மக்கள் தான் முதல் குற்றவாளிகள். மக்களுக்கு பொதுநலம் எது? சுயநலம் எது? தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே தவறு, தனக்கு அதனால் என்ன ஆதாயம்? இந்த அரசியல் கட்சியால் நமக்கு என்ன நன்மை? அரசியலையும், அரசியல் கட்சியும் சுயநலமாக்கிக் கொண்டதன் விளைவு என்று சுயநலவாதிகளே, அரசியலில் இவர்களுக்கு பொதுநலவாதியாகவே ஆகிவிட்டார்கள். 

யார் வந்தால் என்ன? எப்படிப்பட்டவர்கள் வந்தால் என்ன? அவனவன் சுருட்டிக் கொண்டு போவதற்கு தான் வருகிறான். இப்படி ஒரு தவறான எண்ணங்கள் மக்கள் மனதில் பதிந்து விட்டது. 1965 க்கு முன்னால் அரசியல் பொதுநலத்திற்காகவும், கௌரவத்திற்காகவும் இருந்தது. அப்போது வாழ்ந்த மக்கள் ஊருக்கு யாரோ ஒருவர் டிகிரி படித்திருப்பார்கள். பட்டம் வாங்கி இருப்பார்கள் .இப்போது ஊருக்கு 75 சதவீதம் பட்டம் வாங்குகிறார்கள் .ஆனால் அரசியல் எப்படி இருக்க வேண்டும்? அரசியல் கட்சி நோக்கம் என்ன? எதுவும் தெரியாது.

இன்றைய இளைஞர்களுக்கு நடிகர் ,நடிகைகளின் படத்தை 100 தடவை சமூக ஊடகங்களில் பார்ப்பார்களே ஒழிய, இவர்களுடைய சொந்த வாழ்க்கை நலனுக்காக, அரசியல் எப்படி இருக்க வேண்டும்? அரசியல் கட்சிகள் எப்படி இருக்க வேண்டும்? எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை. இதைப் பற்றி எந்த ஊடகங்களும், மக்களிடம் தெளிவுபடுத்தியது இல்லை. அவர்களும் வியாபாரத்தின் அடிப்படையில் இந்த ஊடகங்கள் செய்திகளையும், தொலைக்காட்சிகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .

அரசியல் கட்சியினரும், அரசியல் கட்சிகளும் எப்படி சுயநலமாக இருக்கிறார்களோ அதே போல் தான், இந்த பத்திரிகை ஊடகங்களும் சுயநலமாக இருக்கிறது .இந்த ஊடகங்களுக்கு தான் செய்தித் துறை அதிகாரிகள் சர்குலேஷன் என்ற ஒரு சட்டத்தை வைத்து, கொள்கை முடிவு என்ற ஒரு தவறான சட்டத்தை வைத்துக்கொண்டு, இந்த பத்திரிகை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .இதனால் சமூக நலனுக்காக பாடுபடக்கூடிய ஒரு சில பத்திரிகைகள் கூட அது வளர்ச்சி பெற்று, இந்த சமூக நன்மைக்கே பெரிதும் பயனளிக்க முடியாமல், எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த உண்மைகள் அவ்வளவு எளிதில் மக்கள் புரிந்து கொள்ள முடியாது. 

காரணம் நான் 30 ஆண்டுகள் பத்திரிக்கை துறையில் பணியாற்றியிருக்கிறேன். 10 ஆண்டுகளாக பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறேன் .எனக்கே இந்த உண்மைகள் புரிந்து கொள்ள இவ்வளவு காலமாகிறது என்றால்,சாமானிய மக்கள் புரிந்து கொள்வது கஷ்டம். ஆனால் படித்த இளைஞர்கள் இதை ஆர்வத்துடன் படித்து, இந்த உண்மையை உங்கள் வாழ்க்கை நலனுக்காக, புரிந்து கொள்ள வேண்டும் .

நீங்கள் தான் வருங்காலத்தில் இந்த அரசியலை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் இருக்கப் போகிறீர்கள். நீங்கள் தான் உங்கள் நலனுக்காக பாடுபடக்கூடிய அரசியல் கட்சியும், அரசியலும் எப்படி இருக்க வேண்டும்? என்பதை தீர்மானிக்க போகிறீர்கள். சுமார் 40 -50 வயது தாண்டியவர்கள் எல்லாம் பணத்திற்காக, எந்த அரசியல் கட்சி அதிகமாக கொடுக்கிறதோ, அதற்காக வாக்களிப்பவர்கள் .அவர்களுக்கு இந்த அரசியல் எப்படி இருக்க வேண்டும்? என்ற ஒரு சிந்தனை இல்லாமல் வாழ்பவர்கள். இவர்களால்தான் இன்றைய அரசியலில் ஊழலும், கொள்ளையும் அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் இவர்களுக்கு எந்த உண்மை சொன்னாலும் புரியாது. பணம் மட்டும்தான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் .

இதனால் தகுதியற்ற அரசியல் கட்சியில் இருக்கக்கூடிய ரவுடிகள், பொறுக்கிகள், கிரிமினல்கள் இவர்களெல்லாம் பதவிக்கு வந்திருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு, மக்களின் சமூக அமைதிக்கு ஆபத்தானது. எப்போது இந்த மக்கள் பணத்திற்காக நல்லதும், கெட்டதும் தெரியாமல் வாழ்கிறார்களோ, அவர்களுடைய சந்ததிகள் கூட அதையே பின்பற்றுகிறது. அரசியல் கட்சி என்பது இவர்களுக்கு சம்பாதிப்பதற்கும், இவர்கள் கோடிகளில் கொள்ளையடிப்பதற்கும், கொடி பிடித்து கோஷம் போட்டு, தன்னை பெரிய ஆளாக சமூகத்தில் காட்டிக் கொள்வதற்கும், காரில் கொடி கட்டி மற்றவர்களுக்கு காட்டி பயமுறுத்துவதற்கும், பந்தா காட்டுவதற்கும் இதுதான் அரசியல் கட்சி என்று இவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.மேலும்,

 ஒரு தேர்தல் என்று வந்து விட்டால், அங்கே ஒரு 50 இன்னோவா கார் ,ஒரு 100 பேர் கூட்டமாக வந்து ஒயிட் அண்ட் வெய்ட்டில் வெள்ளை சர்ட் ,வேலை வேட்டிகளை காட்டிக் கொண்டிருப்பார்கள் .கையெடுத்து கும்பிட்டு வாக்களியுங்கள் என்று பிச்சை கேட்டு கொண்டு இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களித்து அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிற கூட்டம், இந்த மக்கள் மைக்கில் பேசி, தொலைக்காட்சி மைக்குகளில் பேசி, நான் வெற்றி பெற்றால் செய்ய முடியாததை எல்லாம் செய்து காட்டுவேன், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ ,அதை செய்வேன் .எல்லாம் தேர்தல் நேரத்தில் பேசுகின்ற ஒரு பித்தலாட்ட கூட்டம் தான் இன்றைய அரசியல் கட்சிகள். 

மக்கள் அரசியலை பற்றி புரியாத இருக்கும் வரை, இவர்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் அரசியலை புரிந்து கொண்டால், அவர்கள் உங்கள் காலடியில் வந்து நிற்பார்கள் .இதுதான் அரசியல் கட்சியினர். மேலும்,காலடியில் வந்து நின்றாலும், தகுதியானவர்கள் அதற்கு தேர்வு செய்வது மக்களின் முக்கிய கடமை. பணத்தைப் பார்த்து தேர்வு செய்தால் அங்கே கொள்ளையடிப்பவன் தான் வருவான். அங்கே ஊழல் செய்பவன் தான் வருவான். ஒருவேளை நீங்கள் ஏழையாக இருக்கிறான், நன்றாக பேசுகிறான், கையிலும், காலிலும் விழுகிறான் என்று ஏமாந்தால் ,அவனும் கொள்ளை அடிப்பான். அவனுடைய தகுதி என்ன? அவனுடைய குடும்ப வரலாறு என்ன? அவனுடைய மக்கள் சேவை என்ன? அரசியலில் அவனுடைய நேர்மை என்ன? இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளாத வரை, உங்களை அரசியலில் அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். 

கட்சி முக்கியமல்ல, நமக்கு சேவை தான் முக்கியம். ஊழல் செய்பவன் அல்ல, வாயிலே பேசிவிட்டு போபவன் அல்ல, மக்களுக்காக களத்தில் நின்று பணியாற்றக்கூடிய அரசியல்வாதி தான் நமக்கு தேவை. அப்படி சிந்தித்து, சிந்தித்து ,புடம் போட்டு ஒவ்வொருவரையும் தேர்வு செய்யுங்கள். பணமில்லாமல் ஒரு சுயாட்சி வேட்பாளர் நின்றால் கூட, அவனுக்கும் வாக்களியுங்கள். அவனுடைய அரசியல் நேர்மை? அவனுடைய தியாகம் ?அவனுடைய குடும்பம் எப்படிப்பட்டது? என்பதை தேர்வு செய்து வாக்களித்து பாருங்கள். 

அப்போதுதான் மக்களுக்கான அரசியல் !அப்போதுதான் மக்களின் ஆட்சி! அதுவரை அரசியல், கட்சியினருக்கும், கட்சிகளுக்கும் ஊழல் செய்து சம்பாதிக்க கூடிய ஆட்சியை தான் உங்களால் தேர்வு செய்ய முடியும். இங்கே தேர்வு என்பது ஒரு சாதாரண வார்டு உறுப்பினரில் இருந்து எம்எல்ஏ, எம்பி பதவி வரைக்கும் மக்கள் இந்த உண்மையை படித்து, ஒரு முறைக்கு, இருமுறை படித்து அதை சிந்தியுங்கள் .அப்போதுதான் இந்த அரசியலை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.

 ஒரு பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் கூட இந்த உண்மையை இதுவரை சொன்னதில்லை. நாட்டில் மூன்று லட்சம் பத்திரிகைகள் இருக்கிறது. ஆனால் இந்த உண்மையை சொல்லக்கூடிய ஒரே பத்திரிக்கை மக்கள் அதிகாரம் மட்டும்தான் .இதை உங்கள் நலனுக்காக, மக்கள் நலனுக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களுடைய பணி செய்து கொண்டிருக்கிறோம். இருப்பினும், இந்த அரசு செய்தி துறை அதிகாரிகளும், எந்த பத்திரிகைகளுக்கு அரசு அடையாள அட்டை கொடுக்க வேண்டும்? எந்த பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்? அது கூட தெரியாமல் பத்திரிக்கை துறையை  ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

மக்களுக்கு எப்படி உண்மைகளை புரிய வைக்கிறேன்னோ, அதே போல் தான் இந்த அரசு செய்தித் துறை அதிகாரிகளுக்கும், ஆட்சியில் இருப்பவர்களுக்கும் புரிய வைத்துக் கொண்டிருக்கிறோம். எப்போது இதற்கு சட்டப் போராட்டம் கொண்டு வருவோம் என்பது தெரியவில்லை. அதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். சட்டத்தின் முன் நிறுத்தினால், அதற்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது. எங்களுடைய பணி சமூக நோக்கத்திற்கான பணி தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *