மார்ச் 19, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டின் அரசியல்!அரசியல் கட்சி மற்றும் கட்சியினரிடமிருந்து பொதுமக்களை இனி கடவுளைத் தவிர, வேறு யாரலும் காப்பாற்ற முடியாது.
அந்த அளவிற்கு அரசியல்! மிக மோசமான தரம், தாழ்ந்த அரசியல் ஆகிவிட்டது. அதற்கு என்ன காரணம்? ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தால் கூட, அவர்களும் இந்த கேவலமான அரசியலை தான் செய்கிறார்கள். மாடு, மேய்ப்பவனும், ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்து விட்டு வந்த அரசியல்வாதியும், இரண்டு பேரும் ஒரே சமமாக தான் இருக்கிறார்கள்.

என்ன அவர்களுடைய பேச்சு தரம் தாழ்ந்த பேச்சு. இவர்களுடைய பேச்சு தரம் தாழ்ந்த பேச்சு இல்லை.இந்த இரண்டு பேச்சும் மக்களுக்காக இல்லை, தவிர, இது மக்களுக்காக அரசியல் கட்சிகள் இல்லை, அவர்கள் சொந்த சுயநலத்திற்காக அரசியல் கட்சிகளும், கட்சியினரும் மிக, மிக தரம் தாழ்ந்து கேவலமாக மாறிவிட்டார்கள்.இதைப் பற்றி புகழ்ந்து, பெருமையோடு உண்மை செய்திகளாக கார்ப்பரேட் கம்பெனி அதாவது

பிளாக் மணியில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அல்லது அரசியலில், சாராய பணத்தில், மணல் கொள்ளையில், வந்த கருப்பு பணத்தில் நடத்திக் கொண்டிருக்க கூடிய ஊடகங்கள் இவை அனைத்தும் பணத்திற்காக, விலை போய் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலை ஆகிவிட்டது. அதனால், இப்படிப்பட்ட ஊடகங்களுக்கு மத்திய,மாநில அரசுகள் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பார்கள் .மேலும்,
செய்தியாளர்களில் 90 சதவீதத்திற்கு மேல், தினமும் மது குடிக்காமல் இருப்பவர்கள் மிக ,மிக குறைவு. இவர்களில் 90% ஜாதியை கையில் பிடித்துக் கொண்டு, கரை வேஷ்டி ஒன்றுதான் கட்டவில்லை. கட்சிக்காரர்களுக்கும், இவர்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் அதுதான் .இவர்கள் எப்படி சமூக நலனுக்காக, மக்கள் நலனுக்காக போராடுவார்கள்? அது ஒரு காலமும் முடியாது. கவருக்காக தான் போராடுவார்களே ஒழிய, சமூகப் பிரச்சனைக்காக போராட மாட்டார்கள். அதில் ஏதோ ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். அதை மறுப்பதற்கு இல்லை. இதுதான் தற்போதய இந்த ஊடகங்களின் நிலைமை.

இது எப்படி நான்காவது தூண் ஆகும் ? இதற்கு கோடிக்கணக்கில் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை,சலுகை, விளம்பரங்களாக கொடுத்து, தங்களுடைய சுயநலத்திற்காக, மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது.எனவே,
.jpg)
இனி மக்கள் இந்த அரசியல் கட்சிகளிடமும், இந்த ஊடகங்களிடமும், சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால், உங்கள் வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக்குறியாகும். எங்கு தொட்டாலும் ஊழல்! ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஓட்டுரிமை கொடுத்ததே தவறு. ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு, அவரவர் பிறந்த சமூகத்தை அவரவர்களே ஏமாற்றும் இழிவான நிலை, பணம் போதை,அதிகாரம், இவை அனைத்தும், மனித வாழ்க்கையின் தரத்தை, தகுதியை சீர்குலைத்து விட்டது.நாட்டில் எல்லாமே இந்த பணத்திற்காக, கௌரவம், மனசாட்சி எல்லாவற்றையும் விற்று விட்டார்கள்.மேலும்,
நேற்று கூட ஓய்வு பெற்ற நண்பர் ஜெயராமன் ஐஏஎஸ் அதிகாரி பேசும்போது, (இப்போதும் அவர் ஒரு சமுதாயத்தின் அறக்கட்டளை சேர்மேனாக இருக்கிறார்) அப்போதெல்லாம் இவரை போல் இருக்க வேண்டும், அவரைப் போல் வர வேண்டும் என்றெல்லாம், அரசியலில் உள்ள முக்கிய தலைவர்களின் பெயர்களை மக்கள் பெருமையாக பேசிய காலம் .

ஆனால், இப்போது அவர்களைப் போல் யாருமே வரக்கூடாது, அப்படி ஒரு கேவலமாக பேசக்கூடிய நிலைமைக்கு இன்றைய அரசியல் கட்சியினரின் தலைவர்களும், கட்சியினரும் மக்கள் நலனுக்கு எதிராக மாறிவிட்டார்கள். என்று நான் அவரிடம் தெரிவித்தேன்.மேலும்,

எப்போது இவர்கள் பணத்திற்காக, மக்கள் உடைய நம்பிக்கையை சிதைத்து விட்டார்களோ, அப்போதே இவர்களுடைய தகுதி, தரம் எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். ஒரு மனிதன் வாழும்போது தேவைகள் இருக்கிறது. அல்லது ஒரு கட்சியை நிர்வாகிக்க தேவை இருக்கிறது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், தேவைக்கும் மீறி, அது கொள்ளையாக மாறும்போது, அங்கே தரம், தகுதி எதுவுமே இருக்காது .மக்களுக்காக பத்திரிகை இருக்க வேண்டுமே ஒழிய, இன்று பத்திரிகைக்காக ,பத்திரிக்கையே இருக்கிறது. அதாவது என்னுடைய தேவைக்காக,பணத்திற்காக அதை வியாபாரமாக, நான் பத்திரிக்கை நடத்திக் கொள்கிறேன்.

என்னுடைய தேவைக்காக, நான் அரசியல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன். பேசுவதெல்லாம் ராமாயணம். செய்வதெல்லாம் மோசடி,பித்தலாட்டம். இப்படி எல்லாமே சுயநலமாக மாறிவிட்டால், மனித வாழ்க்கையில் சந்தோஷம் என்பது கேள்விக்குறியாகி விடும். என்னை விட ஒருவன், பணக்காரனாக இருப்பான் .அந்தப் பணக்காரனை விட, இன்னொருவன் பணக்காரன் ஆக இருப்பான்.
ஒருவன் ஏழையாக இருப்பான். அவனைவிட இன்னொருவன் ஏழையாக இருப்பான். ஆனால், கடவுள் இங்கே தான் எல்லோரையும், சமமாக வைக்கிறார். பணக்காரன் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு போகிறான். அங்கே அவனுடைய சந்தோஷம் .
ஏழை ,நடுத்தர மக்கள் சாதாரண ஹோட்டலுக்கு போகிறார்கள். அங்கு கிடைக்கும் உணவை சாப்பிட்டு, அவனும் சந்தோஷத்தையும் அடைகிறான். இரண்டு பேருக்கும் ஒரே சந்தோஷம்தான். ஆனால், இடம் தான் வேறு,பணம் தான் வித்தியாசம். அதேபோல், துக்கமும் அப்படிதான். ஒரு வீட்டில் ஏழை, நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள், அவர்களுடைய தாய்க்கோ ,தந்தைக்கும் உடல்நிலை சரியில்லை என்றால், அரசு மருத்துவமனைக்கோ, அல்லது சாதாரண தனியார் மருத்துவமனைக்கோ, எடுத்துச் செல்வார்கள். ஆனால்
பணக்காரனுக்கு அதே தாய் தந்தையின் உடல்நிலை சரியில்லை என்றால், பல லட்சங்களை செலவு செய்யக்கூடிய கார்ப்பரேட் மருத்துவமனைக்கு எடுத்துச் சொல்வார்கள். நோயின் தாக்கம் பணக்காரனுக்கு ஒரு விதமாகவும், ஏழைக்கு ஒரு விதமாகவும் இருக்காது. இரண்டு பேருக்கும் ஒரே வலி தான். இரண்டு குடும்பத்திலும் ஒரே வேதனை தான். இதுதான் கடவுளின் படைப்பு. இங்கே ஜாதியை வைத்துக்கொண்டு, இதில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இந்த ஏழை ,பணக்காரன் வித்தியாசம் இருந்து கொண்டு தான் இருக்கும். உலக வாழ்க்கை ஏற்றத்தாழ்வு இல்லாமல் இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன் இது எல்லாமே கடவுளின் படைப்பு.
ஒரு மனிதனைப் படைக்கும் போதே அல்லது அவன் பிறக்கும்போதே, சில கெட்ட குணங்களோடு பிறக்கிறான் .சில நல்ல குணங்களோடு பிறக்கிறான். இதுதான் கர்மாவின் வினை. இந்த வினைக்குள் நல்லதும், கெட்டதும் அதாவது நல்வினை, தீவினை செயலுக்குள் வாழ்க்கை வந்து விடுகிறது.

இதில் நல்ல கர்மாக்களுக்காக பிறந்தவர்கள், அவர்களால் மக்களுக்கு தன்னால் முடிந்த ஒரு நன்மையை செய்கிறார்கள். கெட்ட கர்மாக்களுக்காக பிறந்தவர்கள், கேட்டதை செய்து கொண்டு ,அவர்களுடைய வாழ்க்கையில் தகுதி ,தரம் என்பதை எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகார பதவியில் இருந்தாலும், இந்த கர்மா அவர்களை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறது.
இப்படிதான் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள். அதை விட கேவலமாக இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள், அவர்கள் கொடுக்கின்ற பணத்திற்காக ,பொய்யை உண்மையாக திரிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. மற்ற மாநிலங்களில் பிஜேபி எப்படி இருக்கிறது? என்பது நமக்கு தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான கட்சியாக காட்டிக் கொண்டு, இதுவும் 10 ல் பதினொன்றாக இருக்கிறது.
இது தவிர, விஜயின் தமிழக வெற்றி கழகம் இதுவரை எந்த ஊழலை பற்றி பேசியோ அல்லது எதிர்த்து போராடியோ களத்தில் நிற்கவில்லை. இங்கே என்ன ஒரு பெரிய முக்கிய ஒரு உண்மை என்றால், எல்லா அரசியல் கட்சிகளும் பணம் வாங்குகிறது .அதாவது சட்டத்திற்கு புறம்பான வழிகளில் வரக்கூடிய பணத்தை கோடிக்கணக்கில் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் .இங்கே ஆளும் கட்சி ,எதிர்க்கட்சி அல்லது மற்ற துணை கட்சிகள் எதுவுமே பேதம் இல்லை. மணலா? அங்கேயும் பணம் வாங்குகிறார்கள். மதுபானமா ?அங்கேயும் பணம் வாங்குகிறார்கள்.
.jpeg)
இங்கே என்ன ஒரு வித்தியாசம் என்றால்! மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பணம் வாங்கினாலும், அவர்களை எதிர்த்து போராட மாட்டார்கள். இங்கே என்னவென்றால், பணத்தையும் வாங்கிக் கொள்வார்கள், போராட்டமும் நடத்துவார்கள். அதைவிட ஒரு படி மேலே போய் வைகோ போன்ற ஆசாமிகள், மிகச் சிறந்த அறிவாளிகளாகவும், உத்தமர்களாகவும் நடித்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
அதேபோல், சினிமா இதனுடைய கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டது. இன்று நாட்டில் வன்முறைகளுக்கு முக்கிய தூண்டுதலாக இளைஞர்களிடம் இந்த சினிமா இருக்கிறது. பழைய எம்ஜிஆர், சிவாஜி படங்களை பாருங்கள். அப்போதெல்லாம் சமூக நலனுக்காக, மக்களுக்காக சினிமா படம் இருந்தது. அதில் நல்ல பாட்டு, கதை ,சமுதாயத்தை திருத்துவதற்காக இருந்தது. பணம் என்பது இரண்டாவது, அப்படித்தான் நடிகர்களும் இருந்தார்கள்.

இப்போதுள்ள நடிகர்கள் கதையைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ, சமூக நலனை பற்றியோ, எதுவுமே இல்லாமல், பணத்திற்காக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதையும் பார்த்து இன்றைய இளைஞர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஆக கூடி முடிவில் என்ன ?என்ற ஒரு கடைசி கட்டம் சொல்வார்கள். அது எல்லோருக்குமே ஏமாற்றமாகத்தான் இருக்கப் போகிறது. ஏனென்றால் இந்த ஏமாற்றத்திற்கு மக்களும் முக்கிய காரணம் .

யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் என்ன? வராமல் போனால் என்ன? எனக்கு மட்டும் இது கிடைத்து விட்டது. நான் பிழைத்துக் கொள்வேன். எனக்கு இது இருக்கிறது. நான் பிழைத்துக் கொள்வேன். இப்படி ஒவ்வொருவரும், தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்களே ஒழிய, ஒரு பொது நலனை, மனசாட்சியை யாருமே சிந்திக்கவில்லை.
இது எங்கே போய் முடியும் என்றால்! ஒவ்வொருவரும் இதனுடைய பலன் அவரவர் குடும்பத்தில் விழும்போது, அப்போதுதான் அதை பற்றி சிந்திப்பார்கள். கதறுவார்கள் .அந்த நிலைமைக்கு தமிழக அரசியல் போய்விட்டது. அரசியல் கட்சிகள், கட்சியினர் போய்விட்டார்கள். இவர்கள் பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும், மக்களிடம் பொய்யைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த பொய்யையெல்லாம் இந்த ஊடகங்கள் செய்தி என்று பரப்பிக் கொண்டிருக்கிறது. அதனால், தமிழ்நாட்டை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். அதனால்,

இந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் முட்டாள்களை மேலும் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். முடிந்தவரை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் அறிவார்ந்த சமுதாயத்திற்கு இன்று உண்மையான பல்வேறு பத்திரிக்கை செய்திகளை வெளியிட்டு ,மேலும் பல, உண்மைத் தகவல்களை அவர்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
தவிர ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு அரசு விளம்பரங்கள் இல்லை. அரசு கொடுக்கக்கூடிய சலுகைகள் எதுவும் இல்லை. இருப்பினும், பத்திரிக்கை என்ற ஒரு கடமையை முடிந்தவரை சரியாக செய்து விட்டோம் என்ற ஒரு திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.ஆனால்,
கோடிக்கணக்கில் சலுகை ,விளம்பரங்கள் அனுபவிக்க கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் கூட இந்த உண்மையை மக்களிடம் சொல்லவில்லை. இருப்பினும்,சொல்ல வேண்டிய உண்மைகளை சொல்லிவிட்டோம் உண்மையை படித்து கொள்பவர்கள் புத்திசாலி, படிக்காதவர்கள் ஏமாளி.
அதனால், எது தேவை? எது தேவையற்றது? என்பதை முடிவு செய்வது மக்களே.