ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram
காஷ்மீரில் சுற்றுலா சென்ற பயணிகளை பஹல்காம் பள்ளத்தாக்கில் 27 பேர் சம்பவ இடத்திலேயே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் தமிழ்நாடு ,கர்நாடகாவை சேர்ந்தவர்கள்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதற்காக ரஷ்யா, அமெரிக்கா, சவுதி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தீவிரவாதம் அல்ல மிருகத்தனமான செயல்.

அப்பாவி மக்களை கொள்வதால் இவர்களுக்கு என்ன லாபம்? அவர்களுடைய ஒரு உயிரை கொன்று, அந்த மக்கள் வேதனையுடன் கதறும் போது, இந்த மிருகத்தனமானவர்கள் என்ன சந்தோஷம் அனுபவித்து விடப் போகிறார்கள்? ஒரு உயிர் வேதனைப்படுவதை பார்த்து இறக்கப்படுபவன் தான் மனிதன். அதைப் பார்த்து மகிழ்ச்சி கொள்பவன் மனிதன் அல்ல மிருகம்.

அதனால், இந்த மிருகங்கள் மனிதன் என்ற போர்வையில் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷா காஷ்மீர் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டு அதற்கான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்து வருகிறார்.