விடையூர் கிராமத்தில் மிகப்பெரிய மோசடி வேலை செய்த நீர்வளத்துறை பொறியாளர் ரமேஷ் இன்று திருத்தணி டிவிஷனில் லஞ்சம் வாங்கி மாட்டியுள்ளார்- கடவுள் மிகப்பெரியவன்!

அரசியல் ஆன்மீகம் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram

எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம், ரவுடிசம், ஆள் பலம் ,பண பலம், அதிகார பலம் இத்தனைக்கும் மீறி ஒரே சக்தி இறைவன் ஒருவன் தான். அதை ரமேஷ் விஷயத்தில் நிரூபித்து விட்டார் . சாதாரண விடையூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில் கருவேல மரம் ஐந்து கோடி மதிப்புள்ள மரங்களை ,வெறும் 50 ஆயிரத்திற்கு ஏலம் விட்டார். ஏலம் விட்ட இந்த மரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 50 குடும்பங்கள் தினமும் வெட்டி அந்த மரத்தின் கரி சார்கோல் வியாபாரிகளுக்கு சென்றது . அந்த ஏலம் விட்டு தொகை ஒரு நாள் வெட்டுக் கூலிக்கு கூட வராது .இதைப் பற்றி ஒரு அதிகாரியிடம் சொன்னால் அவர் சிரித்தார் . அப்படி என்றால், எந்த அளவிற்கு இதில் சட்டம் ஏமாற்றப்பட்டுள்ளது.

இதற்கு பின்னால் அரசியல் சப்போர்ட் எவ்வளவு இருந்தது ?அந்த கிராம மக்கள் கொடுத்த புகார் நடவடிக்கை இல்லாமல் போனது? இவ்வளவுக்கும் பணம் .அந்த பணத்தால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்று நம்பிய ரமேஷ் கடவுளிடம் பணத்தை வைத்து சாதிக்க முடியாது .மேலும், இயற்கை யாராக இருந்தாலும் அது தண்டித்தே தீரும். நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அதனுடைய தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதுதான் ரமேஷ் இப்போது அனுபவிக்கிறார். ஏனென்றால், இந்த கிராமத்தில் நடந்த ஊழலை ஒரு பத்திரிகை நடத்தக்கூடிய எங்களாலே இதை பொறுத்துக் கொள்ள முடியாது. ஏற்க முடியாது.

 இதை பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை மற்றும் நிர்வாகிகள் கூட்டணியில் இவர் இந்த மரத்தை ஏலம் விட்டுள்ளார் .விட்ட அந்த மரத்தை ஊரில் பஞ்சாயத்து தலைவர் மற்றும் சிலர் கூடி 60 லட்சத்துக்கு ஏலம் எடுத்து அந்தப் பணத்தையும் கிராமத்தில் கணக்கு காட்டாமல் மோசடி செய்து விட்டார்கள் . கேட்டால் யார் கேட்கிறார்களோ, அவர்கள் மீது சண்டைக்கு வருவார்கள். அப்படி கேட்டு சிலர் மீது போலீஸ் ஸ்டேஷனில் பொய் வழக்கும் போட்டு உள்ளே போட்டார்கள் . 

அது என்ன என்றால், அவர்கள் எல்லாம் ஒரு 16 இல் இருந்து 20 வயதுக்கு உள்ளவர்கள். அவர்களுக்கு என்ன  பேசுவது என்று தெரியாது . கிராமத்தில் போய் தலைவர் ஏழுமலை இடமே கேட்டு இருக்கிறார்கள். சரியான பதில் இல்லை என்று வாக்குவாதம் ஆகி, கம்பளைண்ட் காவல் நிலையத்தில் கொடுத்து அவர்களை ரிமாண்ட் செய்து விட்டார்கள். இவ்வளவு பிரச்சனைக்கும் யார் காரணம்? என்றால் ரமேஷ் தான். ஊரில் ஒருவருக்கு ஒருவர் மோதல், சண்டை, வம்பு ,வழக்கு இவ்வளவு செய்த பலன் கடவுள் என்ற ஒரு சக்தி சரியான தண்டனை கொடுத்திருக்கிறது .மேலும்,

இந்த ஏலத்தை எடுத்தவர் யார்? என்றால், தலைவருடைய சித்தப்பா கணேசன். இது சம்பந்தமாக கிராமத்தில் பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் ஜான்வர்கீஸை சரிகட்டி விட்டார்கள் . எங்கிருந்து எவ்வளவு புகார் அனுப்பினாலும், அத்தனையும் குப்பையிலே போய் விழுந்து விட்டது. சரி இதுதான் இப்படி என்றால், லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொடுத்தோம். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்ததால், இரண்டு மாதங்கள் மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டது. பிறகு அதையும் சரிகட்டி விட்டார்கள்.

 அதன் பிறகு இந்த வழக்கு, இந்த பிரச்சனை ஹை கோர்ட் வரை சென்றது. அங்கேயும் சரி கட்டுகிறார்கள் .போலி ஆவணங்கள் எல்லாவற்றையும் தயார் செய்து டப் கொடுக்கிறார்கள். நாங்கள் எந்தெந்த இடத்தில் புகார் செய்கிறோமோ, அந்தந்த இடத்தில் பணம் விளையாடுகிறது . ஒரு கட்டத்தில் சட்டப்படி பஞ்சாயத்து தலைவர் ஏழுமலை, கணேசன், ரமேஷ் இந்த மூவரும் அந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாத சூழ்நிலைக்கு வழக்கு கடுமையாக இருக்கிறது. பார்த்தார்கள் நமக்கு வேற வழியில்லை என்று தலைவருடைய பெரியப்பா மகனின் காலில் விழுந்து அதை நிறுத்திவிட்டார்கள். 

இதற்காக எங்களுடைய உழைப்பு, பணம், எல்லாம் விரையம், நேரம் விரையம், இது திருவள்ளூர் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியமாக தெரிந்த உண்மைதான் .இதற்கு யார் காரணம்? என்ன செய்கிறார்கள்? என்பது லஞ்ச ஒழிப்பு துறைக்கும் தெரியும் .என்னுடைய அட்வகேட் முத்துசாமி தான் இந்த வழக்கை எடுத்தார். மனசாட்சி படி அவர் என்ன செய்ய வேண்டுமோ,  எங்களுக்காக செய்தார். அவர் ஒரு நல்ல சமூக ஆர்வலர் .இறுதியில் இந்த பிரச்சனை, ஒரே சமுதாயம்,உறவு என்ற நிலைக்குள் வந்து விட்டதால், அது அப்படியே நின்று விட்டது.

 ஆனால், இத்தனை பிரச்சனைக்கும் காரணம் ரமேஷ் தான். ரமேஷ் அதிகாரியாக இல்லாமல், அரசியல்வாதி போல் செயல்பட்டார். தனக்கு பின்னால் ஜாதி கட்சியின் பலம் இருக்கிறது என்று ஆட்டம் போட்டவர், அதுவும் நல்லவர்களுக்கு செய்து இருந்தால் கூட அந்த உதவி உனக்கு ஏதோ ஒரு இடத்தில் பயன்படும். ஆனால், இவர்களுக்கு செய்கின்ற எந்த ஒரு செயலுக்கும், அதனுடைய பலன் யாராக இருந்தாலும் அனுபவிப்பார்கள். அதுதான் பொறியாளர் ரமேஷுக்கு நடந்துள்ளது. எவ்வளவு ஆட்டம்? இதற்கெல்லாம் ஒரு நாள் கடவுள் கூலி கொடுப்பார் என்று சொல்வார்கள் .அது நிச்சயம் ரமேஷின் வாழ்க்கையில் கூலி கொடுத்து விட்டார் . 

அதிகாரம் இருக்கிறது குறுக்கு வழியில் வந்த விடையூர் கிராமத்தின் பணம் பல லட்சங்களில் புரண்டது. அதுவும் போதாது என்று ஒரு விவசாயியிடம் போய் 7000 லஞ்சம் வாங்கி மாட்டி இருக்கிறார் . கடவுளுக்கு தான் விடையூர் கிராம மக்கள் நன்றி சொல்ல வேண்டும் . இது போன்ற அதிகாரிகளால் தான் இந்த பஞ்சாயத்து தலைவர்கள் ஆட்டம் போடுகிறார்கள் . இவர்களை கையில் வைத்துக் கொண்டு, ஊரிலே நாங்கள் வைப்பது தான் சட்டம் என்று சொல்லி இருக்கிறார்கள் . இப்போது இந்த விடையூர் கிராமமே காரி துப்புகிறது .மனசாட்சி இல்லாமல் வாழ்பவர்களுடைய நிலைமை, ஒரு நாளைக்கு இதே கதி தான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *