மார்ச் 12, 2025 • Makkal Adhikaram
டாஸ்மாக் நிறுவனத்தை இ டி (E D )ரெய்டு நடத்துவது,டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த அதே ஊழலை போல் தான் இதுவும், இது மறைமுகமாக அரசுக்கு நிதி இழப்பு .அது நேரடியாக அரசுக்கு நிதி இழப்பு .இதுதான் வித்தியாசம்.

தமிழ்நாட்டில்! தற்போது மிகப்பெரிய ஊழலாக உருவெடுத்துள்ள டாஸ்மாக் ஊழல் ஒரு லட்சம் கோடிக்கு மக்கள் மத்தியில், மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. ஆனால், இதை கார்ப்பரேட் ஊடகங்கள் கண்டும், காணாமல் இருந்து வருகிறது.என்று சில youtube சேனல்களே இதை தெரிவித்துள்ளது. தற்போது தமிழ்நாட்டில் முக்கிய செய்தி சேனல்களாக, அதுதான் இருக்கிறது. மேலும், மத்திய அரசின் ரெய்டுகள் அதாவது ,அமலக்க துறை இந்த
விசாரணையின் முடிவு என்ன? என்பதை பொதுமக்களுக்கு அமலக்கத்துறை அதிகாரியோ அல்லது வருமான வரித்துறை அதிகாரியோ அல்லது சிபிஐ அதிகாரியோ தெரிவிப்பதில்லை. தற்போது பெரும் பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல் விவகாரங்கள் ,அதன் பிறகு என்ன நடவடிக்கை? என்பதை 100 சதவீதம் மக்களுக்கு இந்த துறையை அதிகாரிகள் வெளிப்படுத்துவதில்லை.
மேலும் ,இது எல்லாமே மத்திய அரசும், மாநில அரசும் அண்டர்ஸ்டாண்டிங் & அட்ஜஸ்ட்மென்ட் அதாவது தனக்கு வேண்டிய காரியங்களை மத்திய அரசு, இதை வைத்து திமுகவை மிரட்டி சாதித்துக் கொள்கிறதா? என்ற கேள்வியும் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் உண்மைகள். மேலும்,செந்தில் பாலாஜி ஈ. டி (E D) ரெய்டு நடத்திக் கொண்டிருக்கும்போது, திமுக முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்றெல்லாம் ஒரு சில youtube சேனல்களில் செய்திகள் வெளி வருகிறது.ஆனால்,
தொடர்ந்து ஐந்து ஆண்டு முடிகின்ற தருவாயில் திமுக ஆட்சி வந்துவிட்டது. இன்னும் யார் மீதும், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து, அதற்குரிய தண்டனையை மத்திய அரசால் கொடுக்க முடியவில்லை. அவர்களுடைய சொத்துக்களை முடக்கி வைக்க, இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்?. ஊழலை எதிர்க்கிறோம், ஊழலை ஒழிப்போம், என்பதெல்லாம் வாய் பிரச்சாரங்களாகவே எல்லா அரசியல் கட்சிகளும், பேசுகின்ற வார்த்தையாக தான் இருக்கிறதே ஒழிய, செயல்பாட்டில் எத்தனை சதவீதம் மத்திய அரசு இதுவரை நிறைவேற்றி இருக்கிறது? என்பதை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

அண்ணாமலை பேட்டி எல்லாம் பரபரப்பாக இருப்பது போல, மத்திய அரசின் ரைடும், பரபரப்பாக தான் இருக்கிறது. ஆனால், செயல்பாட்டில் ஒன்றுமே இல்லை. மக்கள் முட்டாளாக இருந்தால், அரசியல்வாதி மக்களை மிதித்துக் கொண்டிருப்பான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி? மக்களுக்கு அரசியல் தெரியாத வரை, ஆள் பிடிக்கும் கூட்டங்களாக அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் பெருகிக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் ஓடிக்கொண்டிருக்கிறது. நீதிமன்றத்திலும், அந்த சொத்துக்களை முடுக்க எந்த ஒரு உத்தரவும் இதுவரை நீதிபதிகளும் கொடுக்கவில்லை. இப்படி இருந்தால், மக்கள் எல்லோரும் சேர்ந்து நாட்டில் ஊழல் ஆட்சியை விரும்புகிறார்களா? அல்லது ஊழலை சட்டம் ஆதரிக்கிறதா? ஒன்றுமே புரியாத நிலையில் தான், அரசியல் தெரிந்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். மேலும்,

சட்டத்தை வளைப்பது ஒரு பக்கம் நீதிமன்றத்திலும், இன்னொரு பக்கம் ஆட்சி, அதிகாரத்திலும் இருந்தால், சாமானிய மக்கள் நிலைமை என்ன? என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.

இதுவே ஒரு அரசு அதிகாரிகள் அதாவது ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் செய்திருந்தால், உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்துக்களை முடக்கி, கைது செய்திருப்பார்கள். ஆனால், சட்டம் மந்திரிகளுக்கு ஒரு சட்டம்! சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம்! அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டம்! அரசியல் கட்சிக்காரர்களுக்கு ஒரு சட்டம் !இதுதான் அம்பேத்கர் போட்ட சட்டமா?
இப்படி இருந்தால் ஆட்சியாளர்கள் மீதும், அரசியல் கட்சிகள் மீதும், சட்டத்தின் மீதும், சாமானிய மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள் என்பது உறுதி .