அக்டோபர் 27, 2024 • Makkal Adhikaram
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் விக்ரவாண்டி மாநாட்டில் தமிழ்நாட்டுக்கு எது தேவை? எப்படி ஆட்சி நிர்வாகம், கொடுப்போம்? என்பதை சுருக்கமாக தெரிவித்துள்ளார் . இதை குறிப்பெடுத்து பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல் டெவலப்பர்ஸ் எல்லாம் சேர்ந்து இந்த கருத்துக்களை விஜய்க்கு கொடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் .
அப்படி இருந்தும் இவர் பேசியதில் கவர்னர் இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்குவோம் என்று பேசியிருக்கிறார். அது முடியாத ஒன்று . நாட்டின் சட்ட பாதுகாவலர் தான் கவர்னர் . நாட்டில் எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சிகளும் சண்டை போட்டுக் கொண்டால், அவர்கள் எங்கே போவார்கள்? ஆளுநரிடம் தான் போக முடியும். அடுத்தது உச்ச நீதிமன்றம் போக முடியும். முதலில் ஆளுநர் தான் ஏனென்றால், சட்டப்படி நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது. அதை ஆளுநர்கள் சரியாக பார்ப்பதில்லை.
அடுத்தது பல விஷயங்கள் நல்ல கருத்துக்களாகவும், நல்ல நிர்வாகத்தின் திறன் கொண்ட செயல்பாட்டை மக்களுக்கு கொடுக்கவும் உறுதியளித்துள்ளார் . ஆனால், ஒன்று மட்டும் அவர் தவிர்த்திருக்கிறார். அது என்ன என்றால், அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்குள் வரக்கூடாது . அது நிர்வாகத்தின் வெளியில் நின்று பார்வையிட வேண்டும். எங்கு என்ன தவறு நடக்கிறது? என்பதை பார்வையிட வேண்டும். ஆனால், நிர்வாகத்திற்குள் அரசியல் கட்சிகள் வந்தால் அங்கே ஊழல் தான் நடைபெறும். எந்த கட்சியாக இருந்தாலும், நிர்வாகத்திற்கு வெளியில் இருக்க வேண்டும்.
ஒரு நல்ல நிர்வாகம் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால், அரசியல் கட்சிகள் நிர்வாகத்திற்கு வெளியில் நிற்க வேண்டும். தவறு நடந்தால் அதிகாரிகளை கேளுங்கள். தவறு செய்ய வைப்பதற்கு தான் இன்று அரசியல் கட்சிகள் இருக்கிறது. மேலும், திமுகவை சரியான முறையில் அட்டாக் செய்து பேசியிருக்கிறார் . அதாவது, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். அந்த கலர், இந்த கலர் என்று பூசும் இந்த மோடி மஸ்தான் வேலை இங்கு எடுபடாது. ஒரு குடும்பம் தமிழ்நாட்டை சுரண்டுகிறது. நாட்டை கொள்ளை அடிக்கும் ஒரு குடும்பம் தான் இன்னொரு எதிரி என்று திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும். நேரடியாக தாக்கி கடுமையாக பேசி உள்ளார் விஜய் .
மேலும், யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். அது உண்மைதான். நீ பாசிசம், நீ அது, இது என்று கலர் அடிக்கிறார்கள். எனக்கு கலர் அடிக்க முடியாது. சொல்லிவிட்டேன். அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால், நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள்? இந்த பாசிசம், இந்த இசம், அந்த இசம் எல்லாம் அதற்கு அர்த்தம் தெரியுமா ? என்று அவர்களிடம் கேட்க வேண்டும் . ஒழுங்காக கட்சி நடத்தத் தெரியாது. ஒழுங்காக மக்களிடம் சமூக நலன், இந்த தேச நலன் எதுவும் தெரியாத ஒரு கூட்டம் கட்சி என்று திருமாவளவன், சீமான் போன்றோர் எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் . ஜாதி வசனம் பேசக் கூடிய சுயநல விஷமிகள் இவர்கள் தேச துரோக வேலைகளிலும், கூட்டங்களிலும் கள்ள உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்புகளை கேவலப்படுத்துகிறார்கள் . அதற்கு அர்த்தம் கூட தெரியாது .
ஜாதியை தலையில் சுமந்து கொண்டு ,மற்ற ஜாதிகளுக்கு விரோதிகளாக பேசிக்கொண்டு, அதையும் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் அவர்களை நல்லவர்களாக விளம்பரப்படுத்தி, பணம் பார்க்கும் வேலை எவ்வளவு கீழ் தரமான வேலை. தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத மக்களிடம் எதைப் பேசினால், என்ன அர்த்தம் தெரியப் போகிறது? அதனால், அவர்கள் வாயில் என்ன வருகிறதோ, அதை எல்லாம் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் விஜயின் பேச்சு, ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில்தான் உள்ளது.
மேலும், மக்கள் விரோத ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சியென சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு, ஒரு குடும்பம் சுயநல கூட்டம் தான், எங்களின் அரசியல் எதிரி. அரசியல் எதிரி மட்டும்தான் எங்களுக்கு ஆபாசம் அல்ல, சில்லு எல்லாம் வச்சு, அவதூறு பரப்பி, இந்த படையை வீழ்த்தலாம் என்று கனவுல கூட நினைச்சுராதீங்க .
திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். நான் மட்டும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பது சுயநலம், ஒரு லெவலுக்கு மேல காசு சேர்ந்து என்ன செய்யப் போறோம்? பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னதும் ஒரு கட்சி ,ஒரு குரூப் எங்களை எதிர்த்தது. மேலும், தமிழக வெற்றி கழகம் அறிவிக்கும் போது அதன் கதறல் கேட்டுச்சு. இந்த மாநாட்டுக்கு அப்புறம் இன்னமும் கதறல் அதிகரிக்கும்.
நாம் அவர்களுக்கு மட்டும் எதிரியா? கிடையாது. நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க, ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறியுள்ளோம். இதன் அர்த்தம் என்ன? முகமூடி போட்ட கரப்ஷன், கபடதாரிகள் தான் இப் நம்ம ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமூடி போட்ட கரப்ஷன், கபடதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும். முகமூடி போட்ட கரெக்ஷன் கபடதாரிகள் இருக்கிறார்களே, அவர்களும் நம்முடைய எதிரிகள். வெறுப்பு அரசியலை ஒருபோதும் கையில் எடுக்கப் போவதில்லை. நம்மளை பார்த்து யாரும் விசில் அடித்தான் குஞ்சிகள் என சொல்லிவிட கூடாது. பெண்கள் அரசியல் வழிகாட்டிகளாக ஏற்கும் முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றி கழகம்.
ஒரு குழந்தை முன்பாக பாம்பை கண்டாலும், அந்தப் பாம்பை சிரித்தபடியே கையில் எடுத்து விளையாடும் அந்த குழந்தை, அதே போல தான் அரசியல் என்பது பாம்பு, அந்தப் பாம்பை பயமே இல்லாமல் கையில் எடுத்து விளையாட வந்திருக்கிறேன். பாம்பு தான் அரசியல், அதை கையில பிடிச்சு விளையாட போறது தான் உங்க விஜய் என்று விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசி உள்ளார் .