கூட்டுறவு துறை என்றாலே அது ஊழல் துறை! ஏன் அப்படி? கூட்டுறவுத் துறையில் ஊழல் தொடர்கிறது?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மார்ச் 30, 2025 • Makkal Adhikaram

கூட்டுறவுத் துறையில்  நிர்வாகத்தில் சரியான முறையில் கணக்கு வழக்குகள் ஆடிட் செய்யப்படுவதில்லை. இது தவிர, இன்னும் எந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் முறையாக கணினி மயமாக்கப்படவில்லை. அதாவது வரவு செலவு கணக்குகள் கணினி மயமாக்கப்படவில்லை. 

எப்படி பஞ்சாயத்து நிர்வாகத்தில் மக்களுக்கு வெளிப்படையான நிர்வாகம் குறித்து அதன் வரவு, செலவு கணக்குகள் கணினி மாயமாக்கப்படவில்லையோ ,அதே போல் தான் இன்று வரை கூட்டுறவுத் துறையிலும், வரவு, செலவு கணக்குகள் முதல் எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டுள்ளது? எவ்வளவு கடன்கள் வசூல் செய்யப்பட்டது? இது பற்றி ஒரு வெளிப்படையான கணக்கு வழக்குகள் கூட்டுறவுத் துறையில் இன்று வரை இல்லை. 

இதற்கு முன்னர் எத்தனையோ தொடக்க வேளாண்மை சங்கங்கள் முற்றிலுமாக செயலாளர்கள் பொய் கணக்குகளை எழுதி சங்கத்தையே மூடிவிட்டு போயிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஓய்வு பெற்றிருப்பார்கள். ஆனால், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து, தவறு செய்யாதவர்கள், தண்டனை அனுபவிப்பார்கள் .தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். இது கூட்டுறவு துறைக்கே ஒரு சாபக்கேடாக இருந்து வருகிறது.

ஏனென்றால், இந்த துறையை பற்றி எனக்கு ஓரளவுக்கு தெரியும். நிரபராதிகள் தண்டிக்கப்படுவார்கள். குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டு பயன்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அதிலும், திமுக ஆட்சியில் இந்த ஊழல் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஒரு பக்கம் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மையைக் இயக்குனர் ஏ. கே. சிவமலர் ஊழல் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் இணை பதிவாளர் ஜெயஸ்ரீ ஊழல் ஒரு பக்கம், அடுத்தது தமிழ்நாட்டையே உலுக்கக்கூடிய ஊழல் தான் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஊழல். 

எவ்வளவு பெரிய கிரிமினல் திட்டம் இது?இவரும் ஒரு காங்கிரஸ் கட்சியின் தியாகி. இப்படி தான் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் காட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது துப்புரவு தொழிலாளர்களை வைத்து எப்படி எல்லாம் திட்டம் தீட்டி இருக்கிறார்? அவர்கள் அனைவரையும் தொழில் முனைவோர்களாக ஆக்குகிறோம் என்று சொல்லி, அவர்களுக்கு ரூபாய் 65 லட்சம் வங்கி கடன் கொடுத்து, அவர்கள் பெயரில் கொடுத்தார்களா? அல்லது செல்வப் பெருந்தகை சொன்ன நபர்களுக்கு 65 லட்சம் கடன் கொடுத்தார்களா ? இது தவிர, கடன் வாங்கியவர்கள் உண்மையான பயனாளிகள் தானா? 

அதுவும் ஒரே நாளில் வங்கி கணக்கு ஆரம்பித்து, எவ்வித ட்ரான்ஷாக்ஷனும் இல்லாமல், அவர்களுக்கு எப்படி 65 லட்சம் கடன் கொடுக்க முடியும்? 

இப்படி காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், மாநில கூட்டுறவு வங்கியிலும், 534 கோடி வங்கி கணக்குகளில் கூட்டுறவுத் துறையின் பணம் சென்றுள்ளது. 

இப்படிப்பட்ட மிகப்பெரிய ஊழல் செய்ய திறமை வேண்டாமா? அந்தத் திறமைசாலி செல்வப் பெருந்தகை. இப்போதெல்லாம் உழைப்பவன் முட்டாள். ஊரை ஏமாற்றுபவன் திறமைசாலி. அதுபோல்தான், இந்த அரசியல் கட்சியினரும், அரசியல்வாதியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது மக்களுக்கு இவர்களுடைய உண்மையான முகம் இன்னும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் குடிகாரர்கள், சுயநலவாதிகள், வெந்ததை தின்று வந்தவரை பேசுகின்ற கூட்டங்கள், இவையெல்லாம் புரியாமல் ஏமாந்து கொண்டிருக்கிறது. 

இவ்வளவு பெரிய ஊழல் நடந்து,செல்வப் பெருந்தகை மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இதற்கு உடந்தையா?

மேலும், ஒருவர்

 பத்து லட்சம் கடன் வாங்கி, அந்த கடனை வங்கிக்கு திருப்பி செலுத்துவதற்குள், அது 20 லட்சம் ஆக வட்டி போட்டு விடும். வாங்கியவர் கடன் கட்ட முடியாமல் திணறுவார். யாருமே சொன்ன தேதியில் வாங்கியவர்கள் கடனை கொடுக்க முடியாது. திருப்பி செலுத்தவும் முடியாது. வாங்குவது சுலபம். கொடுப்பதுதான் கஷ்டம். இது நடைமுறையில் இருக்கின்ற உண்மை. 

ஆனால், செல்வப் பெருந்தகை இவருடைய சொந்தக்காரருக்கு ஒரு போலியான கம்பெனி உருவாக்கி, அந்த கம்பெனிக்கு இந்த துப்புரவு தொழிலாளர்கள் அனைவரும், இந்த பணத்தை அவர்களிடம் கொடுத்து, இந்த வண்டி வாங்கினார்களா? இல்லையா? என்பதும் தெரியாது. இப்படி ஒரு மிகப்பெரிய ஊழல் மோசடி !முறைகேடு! எந்த வங்கியில் நடக்கும்? அப்படியே நடந்தாலும், இதுவரை செல்வ பெருந்தகையை விட்டு வைத்திருப்பார்களா ? இந்நேரம் கைது செய்திருப்பார்கள் .

அதுதான் கூட்டுறவு துறையில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காமல், சட்டத்தை ஏமாற்றி தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிரபராதிகள், உண்மையாக இருக்கக்கூடியவர்கள், சட்டத்தை மதிக்க கூடியவர்கள், இவர்கள்தான் தற்போது நாட்டில் பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மீதி எல்லாம் அரசியல் அதிகார  பின்புலத்திலும், அரசியல் கட்சி பின்புலத்திலும், இந்த போலி ஊடகங்களில் பேசிக்கொண்டு, அரசியல் நடத்திக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏமாறுவார்களா? 

வரும் 2026 இல் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு பொய்யை சொல்லப் போகிறார்களோ? அந்த பொயெல்லாம் உண்மை என்று இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் மக்களிடம், உண்மை என்று காசு வாங்கி ,இவர்கள் எவ்வளவு ஏமாற்றப் போகிறார்களோ? கடவுள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும். வேறு யாரும் காப்பாற்ற முடியாது. சிந்தியுங்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *