திருவண்ணாமலை! கார்த்திகை தீப ஜோதி மகிமை ஆன்மீக அன்பர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் அருள் வழிகாட்டி.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திருகார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை திருநாள் அன்று இறைவனை தீபஜோதியாக வழிபடுகின்றோம். அன்று வீட்டில் தீபத்தை ஏற்றி இறைவனை ஜோதியின் சொருபமாக வணங்குகின்றோம்.மேலும், சிவனே இந்த உலகின் பஞ்சபூதங்களின் அம்சம். பஞ்சபூதங்களின் அம்சமாக விளங்கக்கூடிய சிவபெருமான் ஜோதியாய்! அதியும், அந்தமும் நானே என்று திருவண்ணாமலையில் ஜோதியின் பிழம்பே அந்த மலை . அப்படியென்றால் அந்த மலையின் சிறப்பு மற்றும் அதன் மகிமை எவ்வளவு புனிதமானது? அந்தப் புனிதத்தை இப்போதாவது உணர்ந்து இருப்பார்களா? மேலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளில், சிவ பெருமானின் அருள் கிடைப்பவர்களுக்கு மட்டுமே, இந்த கார்த்திகை தீப ஜோதி திருநாள் தரிசனம் கிடைக்கும். மேலும்,

நீங்கள் பக்கத்து ஊரிலோ அல்லது அதே ஊரிலும் இருப்பவர்கள் கூட அந்த தீப ஜோதியை பார்க்கும் தரிசனம் கிடைக்காது. இறைவன் அவர்களுக்கு தன்னுடைய அருள் கொடுக்க அல்லது தரிசனம் கிடைக்க அவர் அருள் இருந்தால் மட்டுமே, அவர்கள் தரிசனம் கிடைக்கும் .அதாவதுஅவன் அருள் இருந்தாலே அவன் அருள் கிடைக்கும் . இதுதான் சிவபெருமான். தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்ற தீப ஜோதி திருநாள்.மேலும்,

இந்த நாளில், மகாவிஷ்ணுவும், பிரம்மாவும் அவருடைய அடி,முடியை காணமுடியாமல் போன திருநாள். இதுவும் சிவன்,பார்வதி,இருவரும் இடையே மோதலில் சிவனே! ஆதியும், அந்தமும் நானே! என்ற ஜோதியின் சொரூப சக்தியாய், ஒளியாய் நின்ற இடமே திருவண்ணாமலை. அதனால், இறைவனின் சொருப ஜோதியே இந்த மலை. அதுதான் திருவண்ணாமலை.!மேலும்,

திருவண்ணாமலை கோயிலில் ஏற்றப்படும் மகா ஜோதி உலகில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத பெருமை பெற்ற பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற திருவண்ணாமலை. இங்கே ஏற்றப்படும் ஜோதி! உலகிலே வேறு எங்கும் இல்லாத ஒரு மகாஜோதி! அதுவும் 2000 அடிக்கு மேல் உள்ள மலையில், ஜோதியை ஏற்றும் ஒரே கோயில் திருவண்ணாமலை மட்டுமே, அதனால்தான் இந்த மலைக்கு நினைத்தாலே முக்தி என்று சித்தர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும்,

எத்தனையோ மகன்கள், ஜோதியாய் நிற்கின்ற மலை, எத்தனையோ சித்தர்கள்,ஜீவன் மூத்தர்கள்,ஜோதியாய் அதற்குள் ஐக்கியமான மலை திருவண்ணாமலை !இவ்வளவு சிறப்புகளும், மகிமையும் பெற்றுள்ளது. அதனால்,

திருவண்ணாமலையின் தீப ஜோதி தரிசனம் யார் ஒருவருக்கு கிடைக்கும் ?என்ற ப்ராப்தம் இருக்குமோ, அவர்களுக்கு தான் அவர் அருள் கிடைக்கும்.அது எல்லா காலங்களிலும், ஒருவருக்கு இந்த ஜோதி தரிசனம் கிடைக்காது. அவரவர் திசா புக்தி,அதாவது ஒருவருக்கு பாவ கர்மாவும், புண்ணிய கர்மாவும் சேர்ந்ததே வாழ்க்கை. புண்ணியத்தின் காலங்களில் மட்டுமே இறைவனை தரிசிக்க முடியும்.அவன் அருள் இன்றி, அவன் தரிசனம் கிடைக்காது. மேலும்,

திருவண்ணாமலை ஜோதியை பார்க்க வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அன்று அம்மையும், அப்பனும் ஜோதி ரூபத்தில் இருப்பதாக ஐதீகம் . திருவண்ணாமலை சென்றால் !கார்த்திகை தீபத்தன்று தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். ஆன்மீக அன்பர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் ஆன்மீக அருள் வழிகாட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *