முல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கும்போது , ஆயுள் காலம் இல்லை என கேரளா அரசு ஏன் இடித்துக் கட்ட பயமுறுத்துகிறது?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

முல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். ஏனென்றால் இந்த அணையின் ஆயுட்காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கிறது. அதற்குப் பிறகுதான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

மேலும், முல்லைப் பெரியாறு அணைக்காக சென்னை ராஜதானிக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராஜாவாக இருந்த ஸ்ரீ மூலம் 29 .10.1886 ல் சித்திரை திருநாள் ராமவர்மாவிற்காக சமஸ்தானத்தின் திவானாக இருந்த கே .கே. வி. ராம ஐயங்கார் கையெழுத்துட்டு உள்ளார் .

மேலும், சென்னை ராஜதானியின் சார்பாக முல்லைப் பெரியாறு அணைக்கான அன்றைய மாநில செயலாளர் ஜே.சி. ஹானிங்டன் கையெழுத்துயிட்டார். இந்த ஒப்பந்தத்தில் அணைக்கான நீர் தேங்கும் பகுதிக்காக 8000 ஏக்கரும் கட்டுமான பணிகளுக்காக 100 + 100 ஏக்கரும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தவிர ,ஏக்கர் ஒன்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சென்னை ராஜதானி வருடம் தோறும் குத்தகைப் பணம் செலுத்த வேண்டும். மேலும்,அணை சார்ந்த பகுதிகளில் உள்ள எல்லா வகையான வஸ்துகளும், அதாவது அணை கட்டுமானத்திற்காக வெட்டப்படும் மரங்களில் இருந்து அனைத்தும் ,சென்னை ராஜதானிக்கு சொந்தமானது என்று கையொப்பமிட்ட இந்த குத்தகை ஒரு நூற்றாண்டுக்கு பிறகு இன்றைக்கு பெருத்த கேள்விக்குறியாக நிற்கிறது.

மேலும் 999 ஆண்டு குத்தகை என்பது உலகில் வேறு எங்கும் இல்லை என்று கேரள அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கினாலும் ,போடப்பட்ட ஒப்பந்தம் அணையின் உடைய கட்டுமானத்தைப் போன்று உறுதியாக நிற்பது தான் மாமனிதர் பென்னி குவிக்கிற்கு கிடைத்த வெற்றி . மேலும் இன்றைய கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஈராட்டுப் பேட்டையில் இருந்து பூஞ்சார் ,முண்டக்காயம், பீர்மேடு, வண்டிப்பெரியார், குமுளி ,கூடலூர் உத்தமபாளையம் வரை கீழமேலாகவும் கோட்டக் கலையிலிருந்து இன்றைய மேரியமங்கலம் பாலம் வரை தென் வடலாகவும் நீண்டு கிடந்த தமிழ் மரபை சார்ந்த ஊஞ்சல் சமஸ்தானம் ஆளுகை செலுத்தி வந்த நிலையில் இடைச்சர்களாக திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு குமுளி அருக இத்தனை ஏக்கர் நிலம் எப்படி வந்தது என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு மூல காரணமாக இருந்தவர்கள் மலையாள அதிகாரிகளே என்று நாம் சொல்லி வரும் வேளையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்த ராம அய்யங்கார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றும் அவர் 99 ஆண்டு கால குத்தகையை கையெழுத்திடும்போது 999 என்று தன்னுடைய தமிழ்நாட்டு விசுவாசத்தில் மாற்றிவிட்டதாக தற்போது அவர் மீது குற்றச்சாட்டு. மேலும், அணையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் வகையில் 1886 ஒப்பந்தத்திற்கு பிறகு 1970 ஆம் ஆண்டு போடப் பட்ட ஒப்பந்தம் .

அந்த ஒப்பந்தம் அன்றைய தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் கேரள முதலமைச்சர் அச்சுதாநந்தனும் சேர்ந்து போடப்பட்ட ஒப்பந்தம் தான் தமிழகத்தின் உரிமைகளை முற்றிலுமாக காவு கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் என்கிறார் முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் . மேலும் 70 ஆண்டுகள் வரை அணை மீதான அத்தனை உரிமைகளையும் ,பெற்று இருந்த தமிழ்நாடு அரசு மறு ஒப்பந்தத்திற்கு பிறகு அணையின் மழைமானி அமைந்திருக்கும் முல்லை கொடிக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டது .

இது தவிர, படகு விடும் உரிமை ,மீன்பிடிக்கும் உரிமை, காவல் காக்கும் உரிமை, சுதந்திரமாக அணைக்குள் தமிழக பொறியாளர்கள் சென்று வரும் உரிமை, அணையை பராமரிக்கும் உரிமை இழந்தது ,தமிழகத்தை சார்ந்தவர்கள் சுற்றுலா செல்லும் உரிமை, அணையை முழு உரிமையுடன் பராமரித்து இயக்குவதற்காக 80 விழுக்காடு உரிமைகளை கேரளாவிடம் தமிழகம் இழந்து நிற்கிறது. மேலும், 1970 ஆம் ஆண்டு போடப்பட்ட மறு ஒப்பந்தம் பத்து ஆண்டுகளுக்குள் அணையை பலப்படுத்திவிட்டு அணையினுடைய நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று ஒரு ஏற்பாடு கையெழுத்து செய்யப்பட்டது.

ஆனால், இன்றைக்கு 40 ஆண்டுகள் கடந்த பின்னரும் அணை மீதான பராமரிப்பு பணிகளை 60% கூட நாம் பூர்த்தி செய்யவில்லை. இப்படி இருக்கும் போது கேரளா அரசியல் கட்சியினர் முல்லைப் பெரியாறு அணையை வைத்து அரசியல் செய்வது ஒப்பந்தத்தை மீறும் செயல் ‌. அணையின் ஆயுள் காலம் இன்னும் 861 ஆண்டுகள் நீடித்து நிலைத்து இருக்கும்போது தேவையற்ற அரசியல் பேச்சு ஏன்? முடிந்தால், முடிஞ்சவன் தொட்டுப் பாரு என்கிறார் பெருமிதத்துடன் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *