அதிமுக, பிஜேபி கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறதா?

இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 20, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டில் வரும் 2026 தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணியே!அரசியல் ஆட்சி மாற்றம்……!

 மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி கூட்டணியாக மாற நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வெற்றி கழகம் விஜய் உள்ளிட்டோர் இணைந்தால் நிச்சயம் இது வெற்றி கூட்டணி தான். 

மேலும், இதனுடன் பல சிறு கட்சிகள் சேர்ந்தாலும்,அது கூட்டணிக்கு வலுதான். இங்கே, இந்த கூட்டணி கட்சிகள் அதிமுக, பிஜேபி உடன் பேரங்களை பேசிக்கொண்டு, சீட்டுகளை அதிகப்படுத்தி பேரம் பேசிக்கொண்டு, பணத்திற்காக பேரம் பேசிக்கொண்டு, தேர்தல் நேரத்தில் மல்லு கட்டிக் கொண்டு மக்கள் நலனை விட இவர்கள் நலன் பெரிது என்று பேரங்களை பேசிக்கொண்டு இருந்தால், அது திமுகவுக்கு தான் சாதகம் ஆகிவிடும். 

மேலும், திமுகவுக்கு! அதிமுக, பிஜேபி கூட்டணி இணைந்தது ,ஸ்டாலினுக்கு தூக்கத்தை கலைத்து சற்று பயத்தை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. தற்போது பிஜேபி கூட்டணியில் இருந்த பாமக, திமுக பக்கம் சாய்வதாக செய்திகள் வெளி வருகிறது. ராமதாஸ் யார் அதிகம் பெட்டி கொடுப்பார்கள் ?என்பதை பொறுத்துதான் ராம்தாஸ் அரசியல் கணக்கு.மேலும், 

அரசியல் என்றால் என்ன? என்று தெரியாத அடி முட்டாள் கூட்டம் வைத்துக் கொண்டு, இந்த பாட்டாளி மக்கள் கட்சி ஊரில் அரசியல் செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கு என்ன ஒரு வேடிக்கை என்றால்?இந்த சமூகத்தை மதிக்க தெரியாதவர்கள், சமூகத்திற்காக உண்மையாக உழைக்கத் தெரியாதவர்கள், சமூகத்திற்கு எதிராக இருப்பவர்கள், இவர்களை நம்பி எத்தனை நாளைக்கு வன்னியர் சமுதாயம் ஏமாந்து கொண்டிருக்கும்? இதைவிட ஒரு கொடுமை இந்த சமுதாயத்தில் 

அரசியல் தெரிந்தவன், படித்தவன், இவர்களை எல்லாம் இவர்கள் அடைக்க விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அது முடியவில்லை .தற்போது சமூகம் விழித்துக் கொண்டது. ஏமாந்தவரை இவர்களுக்கு வன்னியர்கள் லாபமாக இருந்தது .இப்போது இந்த ஆள் என்ன செய்தான்? இவர்கள் என்ன சமுதாயத்திற்கு செய்தார்கள்? இந்த கேள்வி வன்னிய சமுதாயத்தில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.மேலும்,   

 சித்தரை முழு நிலவு திருவிழாவிற்கு ஆட்களை வரச் சொல்லி கெஞ்சி கூத்தாடிக் கொண்டிருக்கிறார்கள். வண்டியில் ஏற்றிக்கொண்டு போக அதற்கு குடிகாரர்கள் இருக்கிறார்கள். கூப்பிட்டால் ஓடி வர வேற யாரும் இல்லை.தவிர, 10.5 சதவீதத்திற்கு வேட்டுவைத்த திமுக, அதே திமுக கூட்டணியுடன் பாமக போய் சேருகிறது என்றால், முட்டாள் வன்னியர்கள் தான் இவர்களுக்கு வாக்களித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த முட்டாள் வன்னியர்களுக்காக தான் கல்வியில் இட ஒதுக்கீடுக்காக, விஷயம் தெரிந்தவர்கள், படித்தவர்கள், பண்பாளர்கள் அவர்களெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அது கூட இந்த கூட்டத்திற்கு தெரியாது என்று சொல்ல முடியாது. இவர்கள் பதவி வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் வன்னியர்கள் தயாராக இல்லை.

  ராமதாஸினுடைய அரசியல் ,வன்னிய சமுதாயத்திற்கு எந்த பலனும் அளிக்காது. அதனால், வன்னியர் சமுதாயம் மேலும், விழித்துக் கொள்வது அவசியம். தவிர, இவர் எந்த கூட்டணியில் போனாலும், இவர் ஜெயிக்க மாட்டார். சமுதாயம் இனி இவர்களிடம் ஏமாறாது. இதற்கு முக்கிய உதாரணம் தர்மபுரியில் இவர் குடும்பமே சென்று கடந்த தேர்தலில் வேலை பார்த்தது, அப்போதே ஜெயிக்கவில்லை. இப்போது திமுகவுடன்சேர்ந்தால் கள்ள ஓட்டு போட்டாவது ,எங்களை ஜெயித்து காண்பித்து விடுவார்கள் என்று ஒருவேளை செல்கிறாரோ, என்னவோ தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம். 

மேலும், அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்வது அவர்களுடைய புத்திசாலித்தனம். மக்கள் திமுக மீது அதிருப்த்தியில் இருக்கிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல, அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், சமூக நலன் பத்திரிகையாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள், இப்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் திமுக ஆட்சிக்கு எதிராகத்தான் வாக்களிப்பார்கள். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. 

இங்கே திமுகவின் ஆட்சி ஒரு பக்கம் சமூக நீதிக்கு எதிராகவும், சட்டத்திற்கு சவாலாகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் நிர்வாகத்தையும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையில், பெண்களின் பாதுகாப்பு, கொலை, குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுவது, தனிமனித சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல், இது தவிர, ஊழல் நிர்வாகம், இவையெல்லாம் நிச்சயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களிடம் கொண்டு செல்வார்கள். 

அப்போது திமுகவுக்கு ஆதரவாக நிற்கக்கூடிய தொலைக்காட்சிகள், youtube கள், பத்திரிகைகள், பேச்சாளர்கள், என்னதான் இவர்களுடைய பேச்சுத்திறமை, பட்டிமன்ற திறமை, மற்றும் செய்தி திறமைகள் ஆதரவாக எப்படி முட்டுக் கொடுத்து காப்பாற்ற போகிறார்கள்? அது மக்களிடம் மிகப் பெரிய சவால்களாக தான் இருக்கும். மேலும், சமூக நலன் ஊடகங்களை நடத்துபவர்கள் 99 சதவீதம் காப்பி அடிக்கிற கூட்டம். அவர்களைப் பார்த்துதான் இவர்கள் காப்பியடித்து ,செய்தியை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, 

தகுதியாக இருக்கிற ஒரு சதவீதத்திற்கு கூட, எந்த சலுகைகளும் திமுக ஆட்சியில் கொடுக்கவில்லை. அவர்களுக்கு அரசின் சலுகைகளை கொடுத்து வளர்ச்சி அடைந்து மேலே வந்தால், பத்திரிகை உலகில் அது எங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் .அவர்கள் போட்டிக்கு வரக்கூடாது என்பதில் இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு ,அரசியல் செய்து கொண்டிருப்பார்கள். 

இருக்கட்டும், எத்தனை நாளைக்கு ஆட்சி, அதிகாரம்? இது சம்பந்தமாக விரைவில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அல்லது பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் ஆகியோரை தமிழ்நாடு சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், எங்களுடைய கோரிக்கையை தெரிவிக்க இருக்கிறோம். 

இது போன்ற பாதிக்கப்பட்ட துறையில் இருப்பவர்கள் நிச்சயம் பிஜேபி மாநில தலைவரையோ அல்லது எடப்பாடி பழனிசாமியோ தொடர்பு கொண்டு, அவர்களுக்கான ஒரு தீர்வை நிச்சயம் எதிர்பார்ப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், தமிழ்நாட்டில் வரும் 2026 தேர்தல் கூட்டணி அமைப்பதில் தான் வெற்றி.

இதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிஜேபி இருவரும் கூட்டணி அமைப்பதில் சரியான அணுகுமுறையை கையாண்டு அமைத்து விட்டால், இதுதான் வெற்றிக் கூட்டணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *