மார்ச் 28, 2025 • Makkal Adhikaram

திமுக அரசு ஓட்டுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது சட்டப்படி ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அல்லது ஒரு மதம் சார்ந்த அரசியல் நடத்துகிறார்களா? நாட்டில் சிறுபான்மை மதம் வேறு, பெரும்பான்மை மதம் வேறு என்று தரம் பிரித்துக் கொள்கிறார்களா?
சட்டம் என்பது ஒரு மதத்திற்கு ஒரு சட்டம், இன்னொரு மதத்திற்கு ஒரு சட்டம் என்று இருந்தால் அங்கே பிரிவினை தான் இருதரப்பிடையே ஏற்படுத்தும். அதைத்தான் திமுக அரசு இந்த வக்ஃபு வாரிய சட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. இவர்கள் சிறுபான்மை என்று வக்ஃப்பு வாரிய சட்டத்தில், யாருடைய சொத்து வேண்டுமானாலும், அதை மடக்கிக் கொண்டு அல்லது அபகரித்துக் கொண்டு, இது வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்று சொன்னால் மத மோதல்களை தான் அது உருவாக்குகிறது.
.jpeg)
இதை தான் திமுக அரசு செய்யப் போகிறதா? அல்லது முஸ்லிம்களுக்கு நல்லது செய்வது போல், அவர்களை ஒரு தவறான பாதையில் வழி நடத்துகிறது. அதாவது ஒரு பொருள் ஒருவரிடம் வாங்கி இருக்க வேண்டும் என்றால், அந்த பொருள் யாருக்கு சொந்தமானது? யார் அனுபவத்திலிருந்து? அதன் பிறகு, இந்த வக்ஃபு வாரியத்துக்கு எப்படி வந்தது? இவ்வளவும் அந்த சொத்துக்குள் இருக்க வேண்டும்.
ஆனால், இவர்களாக ஒரு போலி ஆவணங்களை தயாரித்து, அதை பத்திர பதிவு செய்து, அரசு அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் ,இந்து மதத்திற்கும், கிருத்துவ மதத்திற்கும், இப்படி பல்வேறு பிரச்சனைகளை இந்த சொத்துக்களால் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி எதுவுமே தெரியாத தமிழக முதல்வர் ஸ்டாலின், குருட்டுத்தனமாக ஒரு மத மோதலை ஏற்படுத்தும் விதமாக, மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை அரசியலில் மோதிக் கொள்வது போல், சட்டமன்றத்திலே இதற்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

சரி அப்படியே முஸ்லிம்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தையே வக்ஃபு வாரிய சொத்து என்று அந்த கிராம மக்களோடு,அந்த கிராமத்தின் பெயர் கூட மறந்து விட்டது. இருந்தாலும், இந்த செய்தியை மக்கள் அதிகாரத்தில் நான் வெளியிட்டிருக்கிறேன். அந்த கிராமம் அதிக அளவு வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் பூர்வீக நிலத்தை இவர்கள் வக்ஃபு வாரிய சொத்து என்று போராட்டம் செய்தார்கள். இப்படி எல்லாம் சூழ்நிலை தெரியாமல், ஸ்டாலின் ஓட்டுக்காக இவருடைய தீர்மானம் போடுகிறார்.
ஏன்? இவருடைய மப்பேடு பக்கம் உள்ள நிலம் வக்ஃபு வாரிய சொத்து என்று அவர்கள் கேட்டிருந்தால், அப்போது என்ன செய்திருப்பார்? ஏனென்றால் அப்பாவி மக்களிடம் தான், அவர்கள் போவார்கள். நம்மிடம் வர மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும். அப்பாவி மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும், பரவாயில்லை. அவர்கள் தேர்தல் என்று வந்தால் நாம் கொடுக்கும் ஒரு ஆயிரம், 500 க்கு வாக்களிக்கும் அப்பாவிகள்.
இது தவிர, அந்த காலத்தில் கோயிலுக்கு எழுதி வைத்த சொத்துக்களும், வக்ஃபு வாரிய சொத்து என்று அது ஒரு பக்கம் போராடுகிறார்கள். இப்படி இந்த வக்ஃப்பு வாரிய சட்டம், மத்திய அரசு கொண்டு வந்தது இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல, தவறான பாதையில் செல்பவர்களுக்கு எதிரானது.