அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது.

அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும்,

அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு 1.5 லட்சம் அபராதம் ,2 ஆண்டுகள் சிறை தண்டனை. இது தவிர, அப்படிப்பட்ட நபர்கள் பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில், நிற்க தகுதியற்றவர்கள்.

மேலும் அரசின் சலுகையோ அல்லது அரசு வேலைவாய்ப்பிலும் அவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு சட்ட மசோதா, பெண்கள் முக்கியமாக இந்த சட்ட மசோதாவை வரவேற்பார்கள். அதில் ஒன்று மாற்று கருத்து இல்லை.மேலும்,

எதிர்க்கட்சிகள், மதரீதியான அமைப்புகள் ,இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆனால்,முதல்வர் ஹேமந்த் சர்மா இந்த சட்டம் எந்த மதத்தினருக்கும் எதிரானது அல்ல, குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு இது பாதுகாப்பான சட்டம். மேலும், மீண்டும் நான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டால், அசாமில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *