தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற மணல் கொள்ளையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விளக்கம் அளிக்க 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேல் உத்தரவிட்டது .மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக முடியாது என்று சட்டத்தின் ஓட்டைகளை தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த ஓட்டையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆஜராகத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது.
அமலாக்கத்துறை அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. அதில் உச்ச நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவு வழங்கியது .அதிலும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் மனுசீர் ஆய்வுபோடப்பட்டது .அப்போதும் உச்சநீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது .இப்படி மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கதுறைக்கே சட்டத்தின் ஓட்டைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், சாமானிய மக்கள் வழக்கு தொடர்ந்தால் அதற்கு நீதி கிடைக்குமா?
மேலும், இவர்கள் செய்கின்ற தவறுகளால் கிராமங்களில் இன்று மது போதைக்கு அடிமையானவர்களை வைத்து இது போன்ற காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். பஞ்சாயத்து தலைவர்கள், கவுன்சிலர்கள், உறுப்பினர்கள் இன்று மதுவை கொடுத்து குடிகாரர்களை விலைக்கு வாங்கி விடலாம் .போதைக்கு அடிமையானவர்களை வைத்துக் கொண்டு அரசியல் நடத்த வேண்டிய நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அதனால், இது போன்ற கனிம வள கொள்ளையடிப்பவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டும் .
மேலும், பாண்டிச்சேரியில் போதைக்கு அடிமையான ஒருவன் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பாண்டிச்சேரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது .ஆகக் கூடி காவல்துறை ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. இங்கே காவல்துறை மட்டும் குறை சொல்லி பயனில்லை. மதுவை ஒழிக்காமல் நாட்டில் நன்மைகள் எதுவும் நடக்காது
மேலும், தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்பேன் என்றுதான் திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது .ஆனால் ,தற்போது தமிழ்நாட்டில் மது, போதை பொருள் சகலமும் கிடைக்க ,மக்களை போதையில் தள்ளாட வைத்து விட்டது. இனியாவது மது போதையில் அடிமையான மக்களை வைத்து தேர்தலில் ஜெயித்தால், மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
அவர்களுக்கு இந்த சமூகத்தைப் பற்றியோ அல்லது நாட்டு நலன் பற்றியோ கிராம நலன் பற்றியோ கவலையில்லை .அரசியலில் அதிகாரத்தை கைப்பற்றுவது ,கனிம வள கொள்ளைகளை அடிக்கவும், பொது சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்ளவும், இதற்கு பின்புலமாக அரசியல் கட்சி ,அதிகாரம் தேவைப்படுகிறது.
இந்த உண்மை தெரியாத மக்கள் கட்சியில் ஒருவர் வேட்பாளராக அறிவித்து விட்டால் ,அவர் நல்லவரா? கெட்டவரா? எதுவும் தெரியாமல் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு தேவை! இவர்களை 100 முறை கையெடுத்து கும்பிட்டு ,காலில் விழுந்து மது பாட்டில்களையும், பணத்தையும் கொடுத்து குளிர வைப்பதற்கு தகுதியானவர்கள் ஒரு காலும் வர மாட்டார்கள். அதை இந்த மக்கள் பெருமையாக நினைக்கிறார்கள் . அதனால்தான் தேர்தல் முடிந்ததும் உங்களை ஒவ்வொரு நாளும் அவர்கள் காலில் விழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,
தகுதியானவர்கள் பின்னால் மக்கள் தான் நிற்க வேண்டுமே ஒழிய மக்களை தேடி அவர்கள் கையெடுத்து 100 தடவை கும்பிட்டு, அவர்கள் ஒரு காலம் வர மாட்டார்கள். இப்படி கொள்ளை அடிப்பவர்கள் தான் ,உங்களைத் தேடி 100 தடவை கையெடுத்து கும்பிட்டு, காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடி, பதவிக்கு அலைந்து கொண்டிருப்பார்கள் .இதையாவது மக்கள் புரிந்து கொள்ளுங்கள். இந்த உண்மை மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், இது முக்கிய தேவையானது .தேர்தல் ஆணையம் கடும் சட்டங்களின் மூலம் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் .
அதனால் தேர்தல் ஆணையம் மதுக்கடைகளை தேர்தல் முடியும் வரை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் . இதை ஏன் இதில் சொல்ல வேண்டும்? என்றால் மணல் கொள்ளை முதல் நாட்டில் நடக்கின்ற கொலை கொள்ளை ரவுடிசம் போன்ற சமூக விரோத செயல்களுக்கு முக்கிய புள்ளியாக மது, போதைப்பொருள் இருந்து வருகிறது.
மதுபான ஆலைகளை தமிழ்நாட்டில் திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் நடத்திக் கொண்டு எப்படி மதுவை ஒழிப்பார்கள்? எப்படி மணல் கொள்ளையை ஒழிப்பார்கள்? எப்படி சமூக விரோத செயல்களை ஒடுக்குவார்கள்? இதை உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை, பொதுமக்கள், சமூக நலன் விரும்பிகள் புரிந்து கொள்வார்களா ?மேலும்,
இதற்கு துணை போகும் மாவட்ட ஆட்சியர்கள் ஏன் நேரில் வந்து அமலாக்கத் துறைக்கு பதில் அளிக்க பயப்படுகிறார்கள்? உச்ச நீதிமன்றம் வரை செல்கிறார்கள்? என்றால் கொடுக்கப்பட்ட மணல் அளவு என்ன? எடுக்கப்பட்ட அளவு என்ன? அரசுக்கு வந்த வருமானம் என்ன ?அதை மீறி எடுத்ததால் அரசுக்கு வருவாய் இழப்பு எவ்வளவு? தவிர, இந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் வரை நீங்கள் அவர்களுக்கு உடந்தையாக இருந்தீர்களா? இவ்வளவு கேள்விக்கு மாவட்ட ஆட்சியர்கள் பதில் அளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்
இதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியுமா? என்று தான் சட்டத்தின் ஓட்டைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் புரிந்து தான், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது .