அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,
உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்
தங்களுடைய சொத்துக் கணக்கை
ஆண்டுதோறும் ஆன்லைனில்
பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்தங்களுடைய சொத்துக் கணக்கைஆண்டுதோறும் ஆன்லைனில்பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்களா?வெளிப்படைத்தன்மை அரசியலிலும் வேண்டும்!— தமிழக வாக்காளர்கள்.
— தமிழக வாக்காளர்கள்

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆன்லைனில், அவர்களுடைய சொத்து விவரத்தை ஆன்லைனில் காட்ட வேண்டும். அதாவது வருமானம் எவ்வளவு ?அதற்குள் தான் சொத்து வாங்க முடியும் .
வருமான வரம்பிற்கு உட்பட்ட சொத்து சேர்க்கை ஊழியரின் உத்தியோகபூர்வ வருமானம், கடன் விவரங்கள் மற்றும் சட்டப்பூர்வ வருமான ஆதாரங்களுக்குள் மட்டுமே சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளனவா ?என்பதை அரசாங்கம் சரிபார்க்க இந்த நடைமுறை பயன்படுகிறது.
இதற்கு மேல் சோத்து வாங்கினால், அது சொத்து குறிப்பு வழக்காக மாறிவிடும் . இது அரசு அதிகாரிகளுக்கு வைக்கப்படும் முக்கிய எச்சரிக்கை என்று தான் சொல்ல வேண்டும்.
உண்மையில் இது வரவேற்க வேண்டிய விஷயம் என்றாலும், இதைவிட முக்கியமாக வரவேற்க வேண்டிய விஷயம் . மேலும்,

SPARROW மற்றும் மனிதவள மேலாண்மைத் தளம்: IAS அதிகாரிகளுக்கு SPARROW (Smart Performance Appraisal Report Recording Online Window) இணையதளம் மூலமாகவும், மாநில அரசு ஊழியர்களுக்கு மனிதவள மேலாண்மைத் துறை (HRMS) போர்ட்டல் மூலமாகவும் இந்தத் தரவுகள் பதிவு செய்யப்படுகின்றன.
மேலும்,அரசு ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ,தங்களது பெயரிலும், தங்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், உள்ள வீடு, நிலம், வாகனம், வங்கி சேமிப்பு மற்றும் பிற முதலீடுகளின் விவரங்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். இது அரசு ஊழியர்களுக்கு மட்டும் தான் இந்த சட்டமா? ஏன்?

அரசு அதிகாரிகளை ஆன்லைனில் சொத்து விவரத்தை காட்டுவது போல்! இனி அரசியல் கட்சியினர் , எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ,மந்திரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,ஆன்லைனில்! ஒவ்வொரு ஆண்டும், தங்கள் சொத்து விவரத்தை காட்ட வேண்டும்.

மேலும் ,அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டம்! அரசியல்வாதிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும், ஒரு சட்ட மா? சட்டம் பொதுவானதாக எல்லோருக்கும் ஒரே சட்டமாக சட்ட நடவடிக்கை தமிழக முதல்வர் விஜய் எடுப்பாரா? என்பது தான் தமிழக வாக்காளர்களின் முக்கிய கேள்வி? இவ்வாறு கொண்டு வருவது, நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை கொண்டு வர முடியும்.
