ஏப்ரல் 03, 2024 • Makkal Adhikaram
இந்தியாவில் நீதித்துறை மக்களிடம் பேசு பொருளாகி வருகிறது. ஒரு உயர் அதிகாரி தப்பு செய்தாலும், சாதாரண அதிகாரி தப்பு செய்தாலும், பொதுமக்கள் தப்பு செய்தாலும், உடனடியாக அடுத்த வினாடியே அவர்களுக்கு பதவி நீக்கம் செய்து, கோர்ட் வாசலில் நிறுத்தி விடுகிறார்கள். ஆனால், அரசியல்வாதி, அமைச்சர்கள் தவறு செய்தால், அவர்களை நீதிமன்றம் கூட சட்டப்படி சலுகை காட்டுகிறது .
இங்கே சட்டம் சாமானியனுக்கு ஒரு சட்டம், பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டம், இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீதித்துறை உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய துறையாக உள்ளது. கெஜ்ரவால் எதற்காக கைது செய்யப்பட்டார்? அவர் கைது செய்யப்பட்டது மதுபான கொள்கையில் பல கோடி ஊழல்கள் நடைபெற்றுள்ளது. அது மட்டுமல்ல, இதற்கு பின்னால் அந்நிய சக்திகள் குரல் கொடுக்கிறது. ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சனைகளில், அன்னிய நாடுகள் தலையிடுவதை இந்திய சட்டம் அனுமதிக்காது.
அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக அமெரிக்காவில் இருந்து கெஜ்ரிவாலுக்காக குரல் கொடுக்கப்பட்டது? மேலும், இந்த மதுபான கொள்கை தனியாரிடம் ஒப்படைக்க அதற்கான திட்டங்கள் வரைமுறை செய்யப்பட்டது. இதில் என்ன வரைமுறை, அரசு விதிப்படி செயல்படுத்த வேண்டும்? என்ற விதிகளை கடைபிடிக்காமல், இந்த மதுபானக் கொள்கை திட்டத்தை கெஜ்ரிவால் கொண்டு வந்துள்ளார்.
இந்த திட்டம் வெளிப்படையாக எதுவுமே இல்லை. இது குறித்து டெல்லி தலைமைச் செயலாளரே முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அப்படி என்றால், எந்த அளவிற்கு இதில் ஊழல் நடந்திருக்கும் ?அது ஒரு பக்கம் மற்றொரு பக்கம் இதை வைத்து தென் மாநிலங்களை சேர்ந்த மதுபான ஆலை உரிமையாளர்களிடம் 100 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அவர்களையெல்லாம் அமலாக்கத்துறை கைது செய்து விசாரிக்கும் போது அவர்கள் உண்மையை சொல்லி அப்ரூவராக மாறிவிடுகிறார்கள். .
அப்படி இருக்கும்போது கெஜ்ரிவால் கைது செய்யப்படுகிறார். இதில் பிஜேபி எதிர்க்கட்சிகளை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தலைவர்களை பழி வாங்குகிறது. அதுவும் தேர்தல் நேரத்தில் பழிவாங்குகிறது. இப்படி எல்லாம் மக்களிடம் அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள். அரசியலில் ஊழலும், தவறு செய்துவிட்டு, இவர்கள் சொல்லி சமாளிப்பதற்கு கார்ப்பரேட் ஊடகங்கள் இருக்கிறது என்ற தைரியம் ஊழல்வாதிகளுக்கு எப்போதும் பக்க பலமாக இருக்கிறது. இந்த தைரியத்தில் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப் பெரிய தவறு.
ஊழல்வாதிகளை காப்பாற்றுவதற்கும், ஊழல்வாதிகள் சொல்வதை அப்படியே போடுவதற்கும், ஊடகங்கள் தேவையில்லை. அதற்கு மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது ஊழல்வாதிகளை எல்லாம் நல்லவர்கள் என்று மக்களிடம் ஏமாற்றுவதற்கு அல்ல. அதனால், இதற்கு மத்திய ,மாநில செய்தி துறை இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் . உண்மை என்னவோ அதை சொல்வது தான் பத்திரிக்கை வேலை. திருடனும், கொள்ளையடிப்பவனும், ஊழல் செய்பவனும், தன்னை நிரபராதி என்று பேசிக் கொண்டிருக்கிறான். அவர்கள் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தான் அவன் குற்றவாளி.
அதுவரை அவன் சட்டத்தை ஏமாற்றிக் கொண்டு ,நீதிமன்றத்தை ஏமாற்றிக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டு,கார்ப்பரேட் ஊடகங்கள் மூலம் அரசியலில் ஊழல்வாதிகள் உத்தமர்களாக பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கே சட்டம் அவர்களுக்காக வளைந்து கொடுத்து கொண்டிருப்பதால், சாமானிய மக்கள் புலம்பித் தவிக்கிறார்கள் .
மேலும், முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு,சிறையில் இருப்பது முதலமைச்சரின் பதவிக்கு அர்த்தம் என்ன? அங்கே அலுவலக கோப்புகள் சிறையில் கொண்டு வர முடியுமா? தவிர, இவர் முதலமைச்சர் பதவியில் இருப்பதால், அமலாக்க துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற தகவல் வெளியாகி வருகிறது. அது மட்டுமல்ல,170 செல்போன்கள் காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கிறார். அப்படி என்றால் இவர் சட்டத்தை ஏமாற்றுகிறாரா? அல்லது விசாரணை செய்ய அதற்கு முட்டுக்கட்டை போடுவது, இவருடைய முதலமைச்சர் பதவியா? என்ற கேள்வி பொதுமக்களுக்கு எழுந்துள்ளது.
பதவி அதிகாரம் எல்லாம் மக்களுக்கு தானே ஒழிய, உங்கள் அரசியல் கட்சிகளுக்கு அல்ல, உங்களுக்காகவும் அல்ல, என்பதை எல்லா அரசியல் கட்சிகளும், எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், முதலமைச்சர்களும் இதை புரிந்து கொள்வார்களா? மேலும், மோடி இவர்களை பழிவாங்கும் அரசியல் செய்கிறார். ஊழல் செய்வது நீங்கள், அதற்கு பதில் சொல்வது மோடியா? இல்லை, மோடி மீது பழியை போட்டுவிட்டு தப்பித்துக் கொள்வீர்களா? இது என்ன அரசியல் மேடைப் பேச்சா?
சட்டப்படி எல்லாவற்றிற்கும் அங்கே ஆவணங்கள் இருக்கும். ஆவணங்கள் இல்லாமல் ஒரு முதலமைச்சரை கைது செய்ய முடியாது. அதனால், ஆவணங்கள், ஆதாரங்கள் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு ஒரு முதலமைச்சரை கைது செய்யும் போதே, அவர்கள் நிரபராதிகள் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சாதாரண பொதுமக்கள் அது போல் பேச முடியுமா? முடியாது. இந்த நிலை இந்தியாவில் மாறினால் தான், நாட்டில் ஊழலை அகற்ற முடியும் .நல்லாட்சியை உருவாக்க முடியும். அதனால், இந்தியாவில் சட்டம் என்பது சாமானியனுக்கு ஒரு சட்டம், பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு சட்டமா? என்பதை முதலில் அதை நீதித்துறை தெளிவு படுத்துங்கள்.