ஆடி கிருத்திகை முருகனுக்கு பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தனி சிறப்பான நாள் .ஐந்தாம் படை வீடு திருத்தணியில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது .

ஆன்மீகம் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூலை 29, 2024 • Makkal Adhikaram

ஆடி கிருத்திகை முருகனுக்கு தனி சிறப்பான நாள். அதனால் முருக பக்தர்கள் மட்டுமல்ல, முருகனை அன்று நமக்கு என்ன வேண்டும்? என்பதை முருகனிடம் கேட்டு பெறும் நாளாகத் தான் பார்க்கப்படுகிறது. இந்நாளில் குழந்தை இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள்,  செவ்வாய் கிரகத்தின் தாக்கம் மற்றும் தோஷம் உள்ளவர்கள், நாக தோஷம் உள்ளவர்கள், வேலையில்லாதவர்கள், நிலப் பிரச்சனை உள்ளவர்கள் ,அனைவரும் முருகனை வழிபட்டால், அனைத்து வயதினருக்கும் பிரச்சனைகள் தீர்க்கும் நாளாகத் தான் ஆடி கிருத்திகை  விரதத்தின் மகிமை .

மேலும், இந்நாளில் காலையில் எழுந்து உடலை சுத்தம் செய்து, பூஜையறையை சுத்தம் செய்து ,முருகன் படத்திற்கு அலங்காரம் செய்து ,நெய்வேத்தியம் செய்து, மனதார முருகனை நினைத்து வேண்டினால், முருகன் நிச்சயம் மனமுவந்து வேண்டும் வரத்தை அளிப்பார். முருகன் அருள் முன் நின்று காக்கும் .அதனால்தான் இன்று,ஆறுபடை வீடுகளில் முருகனுக்கு விசேஷமாக ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூஜை அலங்காரம் அபிஷேகம் நடைபெறும். 

மேலும், இந்த ஆறுபடை வீடுகளிலும் முருக பெருமானுக்கு முருக பக்தர்கள் காவடியை செலுத்துவார்கள் .அதில் பலவிதமான காவடிகள் பால் காவடி, மச்சக்காவடி, மயில்காவடி ,புஷ்ப காவடி என்று பலவித காவடிகள் இன்று முருகனின் பக்தர்கள் பக்தியுடன் காணிக்கையாக்குவார்கள். இதில் இந்த ஆறுபடை வீடுகளைத் தவிர, மற்ற முருகனுக்கு விசேஷமான இடங்களிலும் இந்த காவடிகள் செலுத்துவார்கள்.

 கந்தன் என்று சொன்னால் கவலையில்லை மனமே என்று மனம் உருகி பாடுகின்ற பக்திக்கு ஓடிவரும் ஒரு கடவுள் அது முருகன் தான். எந்த நிலையிலும் தன்னை துதிப்போர்க்கு தன்னிடம் பக்தி செலுத்துவதற்கு கருணை காட்டும் ஒரே கடவுள் முருகன். அதுவும் தன் பக்தர்களுக்காக இறங்கி வந்து செயலாற்றும் ஒரு தெய்வம் முருகன். இதை சொன்னால் புரியாது, அனுபவத்தில் உணர்ந்த பக்தர்கள் தெரிவிக்கும்போது தான் இந்த உண்மைதெரியவரும். 

மேலும், அவர்களுக்கு அவர்கள் எப்படி நடந்தது? எல்லாம் அவன் செயலால், இது நடந்தது என்று சொல்லுவார்கள். அதுதான் முருகன். முருகனை பக்தியால் பாடும் பாடலுக்கு ,அவன் இசையில் மயங்குபவன். பக்தியில் பரவசப்படுபவன். அப்படிப்பட்ட முருகப்பெருமான் இன்று வள்ளி தெய்வானையோடு வீற்றிருக்கும் எம்பெருமான், திருத்தணி என்னும் ஒரு புனித பூமியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக நெருக்கடி மிகுந்து அலைமோதியது.

 காவடி செலுத்தக்கூடிய இடத்தில் மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளானார்கள். உள்ளே செல்ல முடியாமல் எத்தனையோ ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியிலே காவடியை செலுத்தி விட்டு, திரும்பி வந்தவர்கள் அதிகம். கந்தனை நினைப்பவற்கு வேல் வந்து உற்றத் துணையாகும் . கந்த வேலே  .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *