நாட்டில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று மாயாவதி பெங்களூரில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பாஜகவை தவிர ,எதிர்க்கட்சிகளால் காப்பாற்ற முடியாது. .அவர்களுடைய ஊழலை மறைப்பதற்கு தான் இந்த எதிர்கட்சிகள், பாஜகவை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஊழலை மறைப்பதற்கு சட்டத்தில் எத்தனை ஓட்டைகள் இருக்கிறது என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?
கோடிக்கணக்கான ஊழல் சொத்துக்கள், அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் ,சட்டத்திற்கு எதிரான பணப்பரிமாற்றம், கருப்பு பணம் இதையெல்லாம் சட்டத்தின் மூலம் ஓட்டை போட்டு எப்படி இவர்கள் சுயமாக சம்பாதித்தது போல், கணக்கு காட்டுவது தான் இவர்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள்.
மேலும், இதற்கு நேரம் இல்லாத போது, இவர்கள் எப்படி மக்களுக்காக உழைப்பார்கள்? இவர்களிடமிருந்து தான் நாட்டைக் காப்பாற்றப்பட வேண்டும். ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சிகளாக இன்று உருவெடுத்திருக்கிறார்கள். பிரதமர் மோடி சொல்வது போல், தமிழ்நாட்டில் திமுகவின் ஊழல் வழக்குகளை, எதிர்க்கட்சிகள் அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எதிர்க்கட்சியாக இருப்பதற்கு தகுதி இல்லை.
மேலும், ஒரு நாட்டின் எதிர்க்கட்சிகள்,வலுவான அரசியலை கட்டமைக்க பாடுபடும். ஆனால், இந்தியாவின் எதிர்க்கட்சிகள் இவர்களுடைய ஊழலில் இருந்து வெளியே வருவதற்கு சட்டத்தின் ஓட்டைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். தவிர ,அனைவருக்கும் ஒன்று மட்டும் தெரிகிறது. பிஜேபி அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை பயன்படுத்தி எங்களை பழிவாங்குகிறது என்று மக்களிடம் ஒரு சிம்பத்தையை உருவாக்கபுலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதை உருவாக்குவதை விட நீங்கள் பிஜேபி அமைச்சர்கள் அல்லது எம்.எல்.ஏக்கள் செய்த ஊழல்களை வெளிப்படுத்துங்கள் அல்லது நீங்கள் குற்றமாற்றவர்கள் என்று நிரூபியுங்கள். அதை விட்டுவிட்டு ,மக்களை ஏமாற்றும் அரசியலை எதிர்க்கட்சிகள் பேசிக் கொண்டிருப்பது ,எத்தனை காலம் தான் இந்த நாட்டில் வாக்காளர்கள் ஏமாறுவார்கள் ….? மேலும்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி பாஜகவை வீழ்த்த திட்டம் தீட்டி பெங்களூரில் நடந்த கூட்டத்தில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மோடி சொன்னது போல், இந்தியாவை காப்பாற்ற வேண்டியது ஊழல்வாதிகளிடமிருந்துதான் மக்கள் ஒற்றுமையுடன் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். ஊழல்வாதிகள் ஒன்று கூடி ,இந்தியாவை காப்பாற்ற முடியாது.இந்தியாவை அழிக்க முடியுமே தவிர, இவர்களால் காப்பாற்றக்கூடிய தகுதி இவர்களுக்கு இல்லை.
மேலும், பிரதமர் மோடி ஒவ்வொரு அமைச்சர்களையும் ,தன்னுடைய கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் வைத்து அரசியல் செய்கிறார். அவ்வாறு எந்த மாநிலத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் ஆட்சியை செய்கிறார்கள்?, தவிர, ஊழல் செய்த பணத்தை எங்கே பதுக்குவது? எப்படி பதுக்குவது? எதில் முதலீடு செய்வது? எங்கே முதலீடு செய்வது? இதுதான் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய அரசியல்.
இவர்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதோடு, அதற்கு அதிக சுமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, காவல்துறையினருக்கு ஒரு சுமையாகவும், சட்டத்தின் ஓட்டைகளில் ஒளிந்து கொள்ள வழிவகை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.இவர்களால் ஒருபோதும் நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியோ அல்லது நேர்மையான நிர்வாகமோ, ஒரு காலம் கொடுக்க முடியாது.மேலும்,
வெறும் வாய் ஜால வித்தைகளால் அல்லது பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வியாபாரம் நடத்துவது அரசியல் அல்ல .இப்படிப்பட்ட அரசியல் வாதிகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் .அது இந்திய வாக்காளர்கள் கையில் தான் உள்ளது. இவர்களால் ஒருபோதும் நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியோ அல்லது நேர்மையான நிர்வாகமோ ஒரு காலம் கொடுக்க முடியாது என்பதை இந்திய வாக்காளர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ……….?