இந்தியாவில் ஜனநாயகத்தை வீழ்த்துவது, கேலிக்கூத்தாக்குவது , பணமா? அல்லது அதிகாரமா? அல்லது அரசியல் கட்சிகளா?யார்?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பது நான்கு துறைகள் அதில் ஒன்று அரசியல், அதிகாரம் ,நீதித்துறை , காவல்துறை,மற்றொன்று பத்திரிக்கை துறை இந்த நான்கு துறைகளிலும் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் நாடாளுமன்றத்திற்கு உண்டு.

பிஜேபி இன்னும் இதை சரிவர செய்யவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால், ஒரு சில சட்டங்களை மாற்றும் போதே, எதிர்க்கட்சிகளும், அவர்களுக்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் சோசியல் மீடியாக்களும், மக்களிடம் போலியான பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்கி, ஜனநாயகத்தை வீழ்த்துகிறார்கள் என்கிறார்கள்.

ஜனநாயகத்தை வீழ்த்துவது காலத்திற்கு ஏற்ப சட்டத்தை மாற்றுவதால், ஜனநாயகத்தை வீழ்த்துவதில் இருந்து தவிர்க்க முடியும். ஆனால், எப்படியும் பேசுவது எதிர்க்கட்சிகளின் அரசியல் ஆகிவிட்டது .அதற்கு ஒத்து ஊதுவது பத்திரிகைகளின் கைக்கூலிகள், இந்த கைக்கூலிகள் இப்போது சோசியல் மீடியாவில் அதிகமாகிவிட்டது.

இவர்களுக்கு எந்த சட்டமும் தெரியாது. எந்த விஷயமும் தெரியாது .ஆனால், சில பத்திரிக்கை செய்திகளையும், அவர்கள் கட்சித் தலைமை சொல்லுகின்ற செய்திகளையும் ,கொண்டு வந்து திணித்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் எங்கே ?யார் சுற்றி வந்தாலும் ,இறுதியில் மக்கள் தலையில் தான் கை வைக்கிறார்கள். அதைத்தான் இந்த நான்கு துறைகளும் செய்து கொண்டிருக்கிறது. தற்போது நீதித் துறையில் ,எதிர்க்கட்சிகளின் ஏஜெண்டுகளாக செயல்படக்கூடிய நீதிபதிகளால் ஜனநாயகத்திற்கு ஆபத்து.

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு வரும் தீர்ப்புகள் அதிர்ச்சியை அளிக்கக்கூடிய தீர்ப்புகள் ஆகத்தான் இருக்கிறது. அதாவது, ஊழல் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக அமைச்சர்களுக்கு அங்கே வாய்தா கொடுப்பதும், ஜாமீன் வாங்குவதும், சட்டத்தின் அதிகாரமாக நீதிபதிகள் வீழ்த்துவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

இங்கே அமைச்சருக்கு ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம், என்று அம்பேத்கார் எழுதி வைக்கவில்லை. பல ஆயிரம் கோடிகளை ஊழல் செய்த அமைச்சர்களுக்கு சட்டத்திலும் சலுகை, அளிக்க அவர்களுக்கு எழுதி வைக்கவில்லை.மேலும்,

நாட்டில் குன்ஹா போன்ற நீதிபதிகளின் வரலாற்று தீர்ப்பை நீதித்துறை பின்பற்ற வேண்டும். ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது, அவர் மீது போடப்பட்ட ஊழல் வழக்கு விசாரணையின் போது ,உட்காரக் கூட வைக்கவில்லை.

அவர் முதலமைச்சர் என்று பார்க்காமல், ஜனநாயகத்தை நீதித்துறையில் நிரூபித்த வரலாற்று நீதிபதி .நீதிபதி என்றால் !அப்படி இருக்க வேண்டும்.அவர் தண்டனை கொடுத்தார். அவருக்கு எத்தனையோ கோடிகள் விலை பேசப்பட்டது. ஆனால், அவரை நெருங்க கூட முடியவில்லை. நீதித்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இவர் மட்டுமல்ல,

தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதி கற்பக விநாயகமும் ஒருவர். அவரே என்னிடம் சொல்லி இருக்கிறார். என்னையும் சிலர் விலை பேச முயற்சித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால்தான் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் இன்று சமூகத்தில் பேசப்படுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஜனநாயகத்தை நீதித்துறையில் காப்பாற்றிய பெருமை மிக்கவர்கள்.மேலும்,

நீதித்துறையில் !நீதிபதிகள் சட்டத்திற்கு எவ்வளவு ?முக்கியத்துவம் கொடுக்குமோ, அதே அளவிற்கு அவர்களுடைய மனசாட்சிக்கும், முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருவர் குற்றவாளி என்பது சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்படுவது, சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படுவது, இதையெல்லாம் தாண்டி அந்த குற்றவாளி அந்த குற்றத்தை செய்திருப்பாரா ?என்பது நீதிபதிகளின் மனசாட்சிக்கு தான் தெரியும். அதுதான் முக்கியத்துவமானது.

இதை நீதித்துறையில் நீதிபதிகள் பின்பற்றாமல், ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கும், எதிர்க்கட்சிகளின் பணத்திற்கும் விலை போகிறார்கள். இது இரண்டுமே நீதித்துறையில்! இன்று ஜனநாயகத்தை வீழ்த்தும் சக்தியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள். தவிர,

இதுவே சாமானிய மக்களாக இருந்தால், உடனே ஜெயிலுக்கு அனுப்பி, தண்டனையை கொடுத்து விடுகிறார்கள். ஏன்? இந்த பாகுபாடு ? இது ஜனநாயகத்திற்கு ஆபத்து. இது தவிர, மக்களுக்கான பொது நல வழக்குகளை, அதை உடனடியாக தள்ளுபடி செய்து விடுகிறார்கள்.

மேலும், தலைமை நீதிபதி கவாய் திமுக அரசு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக போடப்பட்ட மசோதாக்களுக்கு, இங்கே சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்புகிறார்கள். கவர்னர் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்கிறார்கள்.இதுவும் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

மேலும் ,வஃப் வாரிய சட்டம் ,அதற்கும் இடைக்கால தடை விதிக்கிறார்கள். அதனால், எவ்வளவு பேர் பாதிக்கப்பட்ட இருக்கிறார்கள் ?என்பதை ஆதாரத்தோடு நீதித்துறையில் எடுத்து வைக்கப்பட்டது. அதற்கும், இப்படி என்றால் !நாட்டில் நீதித்துறை எந்த அளவிற்கு ஜனநாயகத்தை வீழ்த்துகிறார்கள்? என்பதை பார்க்க முடிகிறது . இதையெல்லாம் நீதித்துறையில் ,சரி செய்யப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல, பத்திரிக்கை செய்திகளில் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் ,அதனால், இப்படி சொல்கிறார்கள் என்று பத்திரிகைகளில் செய்தி போட்டுக் கொள்கிறார்களா? இல்லை தலைமை நீதிபதி கவாயே சொல்கிறாரா? தெரியவில்லை. அல்லது இந்த தலித் அமைப்புகள் பேசுகிறார்களா? எப்படி பேசினாலும், அது தவறானது. ஜாதியை உங்கள் வீட்டுக்குள் வையுங்கள், உங்கள் உறவுக்குள் வையுங்கள், 140 கோடி மக்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்களில், ஜாதியை திணிக்காதீர்கள். ஜாதியை விட நாடு முக்கியமானது.

இப்படிப்பட்ட தவறான, ஜனநாயகத்திற்கு ஆபத்தான, நீதிமன்றத்தின் செயல்பாடுகள் ,இது மாற்றப்பட வேண்டும் . இது இந்த தேசத்திற்கான பாதிப்பு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மேலும்,இதன் விளைவு, ,நீதிமன்றத்தின் மூலம் ஊழல்வாதிகள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கபட்டு, தண்டனை கொடுக்காவிட்டால் ,மீண்டும் தேர்தலில் நின்று ஜெய்கிறார்கள்.இது எதனால்? இது பணத்தின் மறைமுகமாக வேலை.

அடுத்தது, பத்திரிக்கை துறை இவர்களை எல்லாம் நல்லவர்களாக ,வல்லவர்களாக தங்களுடைய தொலைக்காட்சி, பத்திரிகைகளில் எழுதிக்கொண்டு, காட்டிக் கொண்டிருக்கும் போது, அரசியல் தெரியாத அப்பாவி பொது மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.

அடுத்தது காவல்துறை அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு மட்டுமே எடுபிடியாக வேலை செய்கிறார்கள் .பாதிக்கப்பட்டவர்கள் ,நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மேலும்,

இதே போல் பொதுமக்கள் இன்று அரசியலில் ஒருவருடைய பெயர் குற்றவாளியாக, ஊழல்வாதியாக, மிகப் பிரபலமாக பேசப்பட்டாலும் ,பணத்திற்காக? வாக்களித்து அவர்களையும் ,வெற்றி பெற செய்கிறார்கள். இது மக்கள் செய்யும் மிகப் பெரிய தவறு.

இதில் இவர்களும் குற்றவாளிகள் தான். இப்படிப்பட்டவர்கள் மீண்டும் ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிகாரம் கையில் வந்தவுடன் எல்லை இல்லாமல் சொத்துக்களை குவிப்பது, ஊழல் செய்த பணத்தை வெளிநாடுகளில் பதுக்குவது, அங்கே சொத்து வாங்கி போடுவது, இவை எல்லாம் ஓட்டு போடும் மக்கள் சிந்திக்காமல் வாக்களிக்கிறார்கள்.

இதற்காக மக்கள் நமக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை அவர்களும் இப்படிப்பட்டவர்களுக்கு மீண்டும் வாக்களிக்கலாமா? என்பதை மக்களும் சிந்திக்க வில்லை.இது அவர்கள் செய்கின்ற தவறு. இதனால்தான் ஜனநாயகம் வீழ்த்தப்படுகிறது.

இப்போது தெரிகிறதா? ஒட்டுமொத்தமாக பணத்தால் ஜனநாயகத்தின் வீழ்ச்சி விளையாடுகிறது. இதை தடுப்பது எப்படி? மக்கள் சிந்திக்காமல், வாக்களித்தால் !நஷ்டம் மக்களுக்கே.

எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றினால் தான், இந்த தேசத்தை காப்பாற்ற முடியும். தேசத்தை காப்பாற்றினால் தான், வருங்கால சந்ததிகளை வாழ வைக்க முடியும். மக்கள் சிந்திப்பீர்….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *