
ஈரான் நாட்டால் இன்று மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் யுத்தத்தை சந்தித்துள்ளன.இது ஏன் ?

இன்று ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஏற்பட்ட இந்த சண்டை பிரச்சனையா? இல்லை, பல ஆண்டுகள் ஈரானின் அதிபராக காமேனி பொறுப்பேற்ற நாட்களில், இருந்து தீவிரவாத செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஈரான் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறார் காமேனி.

மேலும்,ஒரு தீய சக்தியால், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், அந்த நாட்டை சுற்றியுள்ள முஸ்லிம் நாடுகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள்? இது நாட்டின் வரலாறு மட்டுமல்ல, மக்கள் பல யுகங்களாக வாழ்ந்த வரலாற்றை திரும்பிப் பாருங்கள்.மேலும்,
மகாபாரதத்தில் துரியோதனன் என்ற ஒரு கெட்டவனால், அந்த நாடு அழிந்தது. இன்று காமெனி என்ற ஒரு கெட்டவனால், ஈரான் அழிந்தது. அந்த நாட்டு மக்கள் ஈரானை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தெரிகிறதா? கெட்ட ஆவிகளின் ஆதிக்கமும், ஆட்சியும் அழிவுக்கானது.
ஈரான் நாட்டு மக்களில் காமெனியை மனசாட்சி உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதர்மத்திற்கு துணை போனவர்கள் அழிந்தார்கள் . இன்று அந்த நாட்டு மக்கள்,நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதே வரலாற்று உண்மைதான் மகாபாரதத்தில் நமக்கு காட்டுகின்ற ஒரு உண்மை.

மகாபாரதத்தில் துரியோதனன் என்ற ஒரு கெட்டவனால்,யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அவன் பாண்டவர்களுக்கு ஒரு சிறு நாடு கூட தர முடியாது என்ற ஒரே பிடிவாதம் துரியோதனனிடம் இருந்தது. (இயற்கை என்ற கடவுள் )கிருஷ்ணன் தர்மத்தை காப்பாற்ற அதர்மத்தை அழித்தே தீருவார். அந்த நிலையில் தான், தர்மத்தை நிலை நாட்ட அமெரிக்காவும், இஸ்ரேலும் போரில் இறங்கியுள்ளது.
இங்கு நடக்கின்ற போர் !மனசாட்சி இல்லாமல் ,அதர்மத்தை வாழ்க்கையாக கொண்டு, வாழ்ந்த மக்கள் அனுபவிக்கின்ற ஒரு சண்டை பிரச்சனை. இதை இயற்கை அவர்களுக்கு கொடுத்திருக்கின்ற தண்டனை. ஒரு கெட்டவனால் ஒரு நாடு அழிகிறது என்பதற்கு ஈரான் உதாரணம்.

இதற்காக குரல் கொடுக்கின்ற பல கெட்ட ஆவிகள் கூட ,தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த கேடு, கெட்ட ஆவிகளுக்கு, எவனோ ஒருவன் பிச்சை போடுகிறான். அந்த பிச்சை வாங்கி தின்னுகின்ற இந்த கூட்டம், கொடியே பிடித்துக் கொண்டு, ஈரானுக்கு ஆதரவாக கத்திக் கொண்டிருக்கிறது.
நாட்டில் முட்டாள்களாக இருந்தால் பிச்சை வாங்கி தின்னுகின்ற இந்த கூட்டங்கள், எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள்? என்பதற்கு இவர்கள் ஒரு உதாரணம். மேலும், சட்டங்கள் மாறும். சத்தியம் மாறாது. அது ஜெயிக்கும். காலங்கள் மக்களை மாற்றுகிறது. காலங்கள் மக்களுக்கு உண்மையை புரிய வைக்கிறது.

இப்படி தான் ஈரான், இஸ்ரேல் போர் அந்த நாட்டு மக்கள் ஒரு கெட்டவனுக்கு, துணை போனதால் என்று அவர்கள் போரின் பதற்றத்தையும் ,போரின் கொடுமையும், வேதனையும், தாங்க முடியாமல் வெளியேறுகின்ற மக்கள் எவ்வளவு வேதனைக்கு உள்ளாகி இருப்பார்கள்? எத்தனையோ லட்சக்கணக்கான மக்கள் எத்தனையோ கோடி பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஓர் என்று வந்தாலே இரு நாடுகளுக்கும் இழப்பு நிச்சயம். அதன் பிறகு அதில் வெற்றி, தோல்வி . மேலும்,

கெட்டதை நம்பி ,கெட்டவனை நம்பி வாழ்கின்ற மக்கள், அரசியலுக்கும், ஆட்சிக்கு வந்தால்! எப்படி இருக்கும்? அதுதான் ஸ்டாலின் ஆட்சியின் ,5 வருட ஆட்சிக்கு உதாரணம். இந்த ஐந்து வருடத்தில் மக்களுக்காக என்ன செய்தார்கள்? ஒன்று செய்தார்கள். டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தினார்கள். மகளிர் உரிமைத் தொகை என்று ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதுவரை இல்லாத 10 லட்சம் கோடி கடனை தமிழ்நாட்டுக்கு உருவாக்கி வைத்தார்கள். எல்லாத் துறைகளிலும் ஊழல் செய்து கொள்ளையடித்தார்கள். இதற்கு சான்று நீதிமன்றத்தில் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை இல்லை என்றால் கூட பொய் சொல்கிறார்கள் என்று கூட சொல்லி விடுவார்கள் .

ஏனென்றால் ,அந்த அளவுக்கு பேச்சுத் திறமையும், இவர்களுக்கு பின்னால், இருக்கக்கூடிய ஊடகங்கள் அதை நியாயப்படுத்தும். சும்மா நியாயப்படுத்தாது, கோடிக்கணக்கில் கூலி வாங்கி தான் நியாயப்படுத்தும். இப்படி கூலிக்கு வேலை செய்கின்ற ஊடகங்களும், இவர்களுக்கு பின்னால் இருக்கிறது.

மேலும், மக்கள் இதையெல்லாம் சாதாரணமென்று அலட்சியமாக இருந்தால், ஈரானில் என்ன நிலைமையோ, அதே நிலைமையை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து விடுவார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ,மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறி. விலைவாசி உயர்வு, வரி உயர்வு இதையெல்லாம் உயர்த்தி, இலவசம் என்ற பிச்சையை போட்டு, உழைக்கும் மக்களை முட்டாள் ஆககுகிறார்களா?

மேலும்,உழைப்பவன் வரி பணத்தை எடுத்து, ஓட்டுக்காக இலவசமா?எதற்காக இலவசம்? தவிர,இலவசம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துமா? ஒரு காலும், உயர்த்தாது. மக்கள் இலவச பேருந்து கேட்டார்களா? இப்படி பட்ட ஆட்சியும் நல்லாட்சி என்று பேசிக்கொண்டு ,அதற்கு ஊடகங்கள் சான்றளித்துக் கொண்டு இருப்பார்கள். அதுதான் திராவிட மாடல் ஆட்சி! ஸ்டாலின் தான் வரப் போறாரு ,விடியல் தரப் போறாரு.

மேலும், ஸ்டாலினின் இந்த விடியல் ஆட்சியை மக்கள் ஐந்து ஆண்டு பார்த்து விட்டார்கள். மக்களுக்கு விடியல் வந்து விட்டதா?ஐந்து வருடமும் வீணடித்து விட்டு, போய்விட்டார்கள். மீண்டும், இந்த ஊடகம் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கிறது. அந்த முட்டு சும்மா கொடுக்கவில்லை. பணத்தை கோடிக்கணக்கில் வாங்கிக் கொண்டு, முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி கூலி வாங்கி பிழைப்பு நடத்தக்கூடிய ஊடகங்கள், கூலி வாங்கிக் கொண்டு கூட்டம் போட்டு கத்துகின்ற அரசியல் கட்சிகள், மக்களை எந்த அளவுக்கு முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள்? அல்லது முட்டாளாக நினைக்கிறார்கள்? என்பது தான் வேதனை.
மேலும், ஈரான் போர் விஷயத்தில்,இந்தியா ஏன்?மௌனம் காக்கிறார் மோடி என்றால்! அதில் அர்த்தம் இருக்கிறது. இந்தியா எப்போதும் நியாயத்தின் பக்கமே நிற்கும். அதனால் ,தான் உலக அரங்கில் மோடியின் அரசியல் மட்டுமல்ல, அவருடைய தனித்துவம் என்று உலக அரங்கில் அனைத்து நாட்டு தலைவர்களாலும் ,பேசப்பட்டு வருகிறது. அது இந்தியாவுக்கு ,அவர் சேர்த்த பெருமை.

அதுமட்டுமல்ல, மோடி பேசினால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று ஐக்கிய அமீராக வெளியுறவு தூதர் கருத்து தெரிவித்துள்ளார். எல்லா மக்களும் அமைதியாகவும், நட்புடனும் வாழ வேண்டும். மனித வாழ்க்கைக்கு போர் அவசியமானது அல்ல.

ஆனால், மனித நியதிக்கு அப்பாற்பட்டு, இயற்கைக்கு எதிராகவும் ,தர்மத்திற்கு எதிராகவும், வாழக்கூடிய மக்களால், இந்த போர் உருவாகிறது. இது காலத்தின் கட்டாயம். காலம் தான் இதற்கு பதிலடி கொடுக்கிறது. காலம் தான் இதன் வெற்றி ,தோல்வியை நிர்ணயிக்கிறது. மோடி இதில் ஒருபோதும் தலையிட மாட்டார்.
மேலும்,’யுத்தம் என்பது தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடக்கின்ற ஒரு செயல். அங்கே சமாதானம் என்பது தீர்வாகுமா? அதர்மவாதிகளை திருத்த முடியுமா? இப்போதாவது மக்கள் தமிழ்நாட்டிலோ அல்லது இந்தியாவிலோ, அதர்மத்தின் பின்னால் நிற்கும் போது, அவர்களுடைய வினை நாட்டு மக்கள் மீது விழுகிறது என்பதை புரிந்து தங்களை திருத்திக் கொள்வார்களா?