
சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல்,தான் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அதன் பிறகு காங்கிரஸ் கட்சி அதனுடைய சுயநலத்திற்காக இதை மாற்றி அமைத்தது. இதில், இவர்களுக்கு என்ன பாதிப்பு? மக்களுக்கு என்ன ஆபத்து? இதனால் மக்களுக்கு என்ன பிரச்சனை? இதனால் ஊடகங்களுக்கு என்ன பிரச்சனை? ஒரு புதிய குண்டை தூக்கி போடுகிறார்கள். 50 ஆண்டுகால இந்திய வரலாறு அழிக்கப்பட்டு விட்டதாக திமுக முதல் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது.

இங்கே பிஜேபி இதில் எந்த தவறும் செய்யவில்லை. இந்திய பொருளாதாரம் வீணடிக்கப்படுவதை தடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேர்தலுக்காக பல ஆயிரம் கோடி தேர்தல் செலவு ஒதுக்கப்படுகிறது. அப்படி ஒதுக்கப்படும் போது சட்டமன்றத்திற்கும் அதே செலவுதான்,நாடாளுமன்றத்திற்கும் அதே செலவு தான், இதனால் மக்களின் வரிப்பணம் அதிகமாக வீணாகிறது. இது ஒரு முக்கிய காரணம்.

அடுத்தது பல அரசியல் கட்சிகளும் இந்தியாவில் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் ஏதோ ஒரு தனி நாடு போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரிவினைவாத சக்திகள். தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருக்கிறது என்பதை மறந்து விட்டு பேசுகிறார்கள்.
எதற்கெடுத்தாலும் ஒரு பிரிவினை வாத சக்திகள் ஆகவே டெல்லி நாடாளுமன்றத்திலும் அப்படி தான் பேசுகிறார்கள். சுதந்திரம் வாங்கி கொடுத்த தியாகிகளை கூட அப்படியெல்லாம் பேச மாட்டார்கள். இந்த பிராடு கூட்டம் பேசறதை எங்களால் காது கொடுத்து கேட்க முடியவில்லை என்கிறார்கள் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள். மேலும்,
. மக்கள் அரசியலை படிக்க வேண்டும் அரசியலைப் படிக்கவில்லை என்றால் இப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து பேசிப்,பேசி ஏமாற்றிக் கொண்டு தான் இருப்பார்கள். ஏமாளியாக வாழ்வது மக்களின் தவறு.
எத்தனை அரசியல் கட்சிகள்,எதை பேசினாலும், உண்மை எது?என்பதை புரிந்து கொள்பவன் தான் புத்திசாலி. அதனால், நீ ஏமாளியா? அல்லது புத்திசாலியா? என்பதை உன்னை நீயே பரிசோதனை செய்து கொள்.