கள்ள சந்தை‌ மது விற்பனையில் பல லட்சங்களில் புரளும் வளவனூர் சரவணன், காவல்துறைக்கும் கவனிப்பா? சமூக ஆர்வலர்கள் வேதனை .

அரசியல் இந்தியா உணவு செய்தி சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 09, 2024 • Makkal Adhikaram

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டம் அரும்பாக்கம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சின்னப்பையன் என்பவரின் மகன் சரவணன் (வயது 52) என்பவர் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக களச் சந்தை மது விற்பனையில் கோடிகளில் புரளுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் இது தவிர இந்த கள்ளச் சந்தை மது விற்பனை மூலம் மாடி வீடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர் .

மேலும், சொந்த ஊரில் இவருக்கு பெயரே கந்துவட்டிக்காரன். அதாவது நூற்றுக்கு பத்து ரூபாய் வட்டிக்கு விட்டு சம்பாதித்துள்ளார். பணம் வாங்கியவர்கள் பணத்தை சொன்ன தேதியில் திருப்பி தரவில்லை என்றால், அவர்களுடைய ஆடு,மாடு ,இரு சக்கர வாகனங்களை எடுத்துச் செல்வது, தரக்குறைவாய் பேசி அடிப்பது, போன்ற அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தவிர, அரும்பாக்கம் அருகே உள்ள ஏரியில் கள்ளச் சாராயம் காய்ச்சி பல லட்சங்களை சம்பாதித்து வந்துள்ளார்.

இது சம்பந்தமாக ஆற்காடு காவல் நிலையத்தில் இவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்திருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர, இவர் ஏலச்சீட்டு நடத்தி பல பேரை மோசடி செய்துள்ளார். அதைதொடர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபட்டு பலருடைய நிலங்களை உள்ளடி வைத்து மோசடி செய்து பல லட்சங்களை சம்பாதித்து உள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்படி சம்பாதித்த பணத்தை இரண்டு முறை உள்ளாட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இதனால் பணத்தையும் இழந்துள்ளார் .

மேலும் ,அப்பகுதியில் அரசு மதுபான கடை விற்பனை செய்ய விற்பனையாளர்களுடன் ஏற்பட்ட தொடர்பில், வளவனூரில் அரசு மதுபான கடை தொடங்க அரசு அதிகாரிகள் இடம் தேடிய போது, வளவனூர் கிராமத்தில் பூந்தண்டலம் ஏரிக்கு அருகாமையில் சரவணன் வாங்கி இருந்த இடத்தில் அவசர, அவசரமாக கட்டிடம் கட்டி ,அரசு மதுபான கடை வைத்துக் கொள்ள ஒப்பந்த அடிப்படையில் அனுமதித்துள்ளார் .அதே கட்டிடத்தில் மதுபான பிரியர்கள் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில் ,பிளாஸ்டிக் கிளாஸ் மற்றும் ஸ்னாக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய பங்கடை வைத்து நடத்தி வருகிறார்.

மேலும், இந்த கடைக்கு அருகாமையில் உள்ள மற்றொரு அறையில் சரவணனின் தாய், தந்தை அற்புதம் ,சின்ன பையன் ஆகியோரை தங்க வைத்து இரவும், பகலும் அரசு அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக சுமார் பத்து வருடங்களாக அப்பகுதியில் கள்ளச் சந்தை மது பாட்டில்களை விற்பனை செய்து வருகிறார் .

இதனால், அப்பகுதியில் இளைஞர்கள் மற்றும் மதுப் பிரியர்கள் பெரும்பாலும் குடிபோதையில் சுற்றித் திரிகின்றனர்.வேலைக்கு செல்வது இல்லை. இந்த மது பிரியர்களால் குடும்பத்தில் சண்டை,சச்சரவுகள் தினமும் இதனால் ஏற்பட்டு வருகிறது. குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. இதைப் பற்றி தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?

மேலும், பெரும்பாலான அரசு மதுக்கடைகளில் வேலை செய்யும் விற்பனையாளர்கள் எம் சி குவாட்டர், மென்ஸ் கிளப், ஓல்டுசீப், டைமண்ட் ரம், மானிடர்ரம், ரிச்மேன் ரம், ஓட்கா, பக்கார்டி, சீமான்ஸ், குதிரை ரம், மாடு ரம் கிங்பிஷர்பீர், புல்லட் பீர் ஒயின் போன்ற மதுபான பாட்டில்கள் மீது  நேரடி விற்பனையில் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரையும் அதிக விலைக்கு விற்று வருகிறார்கள் என்கின்றனர் மது பிரியர்கள் .

   இது ஒரு புறம் இருக்க ,மதுபான கடைக்கு லோடு வந்து இறங்கும்போது சரவணன் கடைக்கு தனியாக பத்திலிருந்து பதினைந்து கேஸ் மது பாட்டில்கள் பிளாக்கில்  இறக்கி வைக்கிறார்களாம் .

கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் சரவணன் பிராண்டுக்கு ஏற்றார் போல ஒவ்வொரு பாட்டில்கள் மீதும் 35 இலிருந்து 40 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்று வருகிறார்   மதுபான பிரியர்கள் கேள்வி  கேட்டால்  சின்னப்பையன் சொல்கிறார் . ஆற்காடு காவல் நிலையத்திற்கும், வாலாஜா கலால் போலீஸாருக்கும், டாஸ்மார்க் ஆற்காடு வட்டார மேற்பார்வையாளர் சேட்டுவுக்கும், மாமல் கட்டி வருகிறோம் என்கிறார். இப்படி சம்பாதித்து வரும் பணத்தில் சரவணன் வளவனூரில் இடம் வாங்கி இரண்டடுக்கு மாடி வீடு கட்டி உள்ளார்

அரும்பாக்கம் கூட்டு சாலையில் உள்ள ஆதிபராசக்தி கல்லூரி அருகே இடம் வாங்கி போட்டுள்ளார் புதிதாக புல்லட் பைக் அரும்பாக்கத்தில் சொகுசான வீடு,பல இடங்களில் வட்டிக்கு பணம்  சமீபத்தில் இரண்டு மகள்களுக்கு ஆடம்பரமான  திருமணம் செய்துள்ளார். இப்படி பல லட்சங்களை சம்பாதித்து சொத்துக்களை குவித்து வருவதாக விஷயம் தெரிஞ்சவங்க வாய் மேல விரலை வைக்கிறாங்க  .  இப்படியாக டாஸ்மார்க் ஊழியர்கள்,  போலீஸ் மற்றும் கலால் போலீசார் உதவியுடன் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்.

மேலும், சரவணனின் வீடு அவருக்குரிய  அனைத்து இடங்களிலும்   வருமானவரித்துறையினர் சோதனை   செய்யவும், வளவனூரில் அவரின் கட்டிடத்தில் இயங்கி வரும் மதுபான கடையை இடமாற்றம் செய்து ,

சரவணன் மீதும், துணை நிற்பவர்கள் மீதும்  ராணிப்பேட்டை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே! சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. நடவடிக்கை எடுப்பாரா? மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *