கிராம சபை கூட்டம் தமிழகம் முழுதும் ஊராட்சிகளில் சுதந்திர தினத்தன்று (நாளை) கிராம சபை விதிகளின் கீழ் நடத்த ஊராட்சிகளின் இயக்குனர் பொன்னையா மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு .

அரசியல் உணவு செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு பிரபலமான செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram

சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடத்த,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

மேலும், கிராம சபை கூட்டம் பேரளவிற்கு கிராம சபை கூட்டம் நடத்தாமல் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்? என்று கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா கீழ்க்கண்ட விதிமுறைகளை தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு : –

1. கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி! மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும். 2023 – 2024 மற்றும் 2024- 2025 கடந்த நிதியாண்டில் வரவு செலவுகளை ஊராட்சி அலுவலகத்தில் பிளக்ஸ் பேனர்கள் மூலம் நோட்டீஸ் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

நடக்கவில்லை என்றால் அதிகாரிகள் புகார் தெரிவிக்க வேண்டும். புகார் எண் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும்,

2. 500 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 பேருக்கு மேல் கலந்து வேண்டும். குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உரிமை உண்டு. 

3. 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கிராமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 

4. உங்கள் ஊராட்சியில் எந்த நிமிடம் வரை கிராமசபை தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால், மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு.

கடும் நடவடிக்கை !

5. கிராம சபை கூட்டத்தில் மக்கள் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

6. ஊராட்சி மன்ற தலைவர் முன்கூட்டியே கிராம சபை தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், ஊராட்சி செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

7. கிராம ஊராட்சிக்கு   உட்பட்ட வார்டுகளில் மட்டுமே சுழற்சி முறையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

8. மாவட்ட ஆட்சியரிடம் கிராம சபை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அதிகாரம் பறிக்கப்படும்.

9. கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் ,அதிகாரியோ நிராகரிக்க முடியாது. தீர்மானம் சரி அல்லது தவறு முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டும்.

10. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் பற்றாளர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதை வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

11. கிராம மக்கள் சொல்லும் தீர்மானம் பஞ்சாயத்து தலைவரும் அதிகாரியோ நிராகரிக்க முடியாது   தீர்மானம் சரி அல்லது தவறு  முடிவெடுக்கும் அதிகாரம்   நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. இதனை அறிந்து செயல்பட வேண்டுகிறேன்.

12. தமிழக அரசு  கிராம சபை கூட்டம் தெரிவித்தும் நடத்தாத ஊராட்சி மன்ற தலைவர்  மீது புகார்  அளிக்க  வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட  ஆட்சியரிடம்  புகார் தெரிவிக்கவும்.

13. தமிழ்நாடு காவல்துறையை அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

14. கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை என்றால், உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும். 

முதல்வர் தனிப்பிரிவு – 1100

ஊராட்சி மணி – 155340

அரசின் தலைமை செயலாளர்

cs@tn.gov.in

044-25671555

ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் உதவியாளர் 

தொலைபேசி எண் :  044-25672866

 (ஊரக வளர்ச்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் )

ruralsec@tn.gov.in

044-25670769

(ஊரக வளர்ச்சி துறை அரசு கூடுதல் இணைச் செயலாளர்)

044-25675849

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலகம், சென்னை 600 009  

044-25665566

மின்னஞ்சல்: மின்னஞ்சல்:-

villagesec@tn.gov.in

முதலமைச்சர் தனி பிரிவு – எண் : 044 25672345, 044 25672283, 9443146857 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *