டாக்டர் அம்பேத்கார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். அதற்காக போராடினார் என்பது மறுக்க முடியாது. ஆனால் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவரா? இல்லை. அந்த காலத்தில் ஆதிக்க சக்திகள் தழைத்தேங்கி இருந்த காலத்தில் அவராலே மேலே வர முடியவில்லை.
அவருக்கு எல்லா திறமைகளும் இருந்தும் ஆதிக்க சக்தி ஜாதிகளை எதிர்த்து அவரால் சமூகத்தில் முன்னேற முடியவில்லை. முன்னேற்றத்திற்கு, உழைப்பிற்கு,தகுதிக்கு, திறமைக்கு, சாதி ஒரு தடையா?என்பதுதான் அவருடைய கேள்வி? அதற்காக அவர் போராடினார். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி கண்டார்.
அந்த வெற்றியில் தான் இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தான் இட ஒதுக்கீடு சட்டம், கொண்டு வந்தார். ஆனால் தலித் சமுதாயம் அவரை பறையர் என்று நினைத்துக் கொண்டார்கள். அதையே அரசியலிலும், அமைப்புகளிலும் அவரை தலித் ஆக்கிவிட்டார்கள். உண்மையில் அவர் மகஹர் என்ற ஜாதியை சேர்ந்தவர் . தவறு இந்த மக்களிடம் இல்லை.
அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் அவரை வைத்து அரசியல் வியாபாரம் நடத்துவதற்கு அவரை தலித் ஆக்கினால் தான் நாம் அரசியலில் காலூன்ற முடியும் என்று அவரை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார்கள். இதுதான் பிரச்சனையே தவிர, அந்த சமூக மக்களிடம் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களுக்கு உண்மை தெரியாது. இவர்கள் மறைத்து விட்டார்கள் அவ்வளவு தான். இப்போதாவது இந்த சமூக மக்கள் உண்மையை புரிந்து கொண்டால் சரி.