
வை.கோ . மதிமுக கட்சித் தலைவர் கட்சித் தலைவராக நடந்து கொள்ள என்ன தகுதி அவருக்கு இருக்கிறதா? இருந்தால் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஒரு கட்சித் தலைவர் பேசும்போது செய்தியாளர்கள் கேமராவை பிடுங்கள் , அடியுங்கள், விரட்டுங்கள் என்ற வார்த்தையே ஒருகாலும் வராது.
மேலும், செய்தியாளர்கள் தாக்கப்படுவது, இது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இதற்கு என்ன காரணம் ?என்று இதுவரை அந்த பத்திரிகைகளின் தொலைக்காட்சிகளோ ,பெரிய நிறுவனங்களோ ,மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் சொல்லவில்லை.
காரணம் எந்த ஒரு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தற்போது நடுநிலையான செய்திகள் வெளியிடுவது குறைந்துவிட்டது. இந்த செய்தியாளர்கள் என்றால் ,பணத்திற்காக செய்தியை வெளியிடுபவர்கள் என்ற நினைப்பில் அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சியினரும் நினைக்கக்கூடிய ஒரு முக்கியமான செயல்தான் இந்த சம்பவம்.

அதாவது இன்றைய செய்தியாளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கலாம் அதுதான் அவர்களுடைய முக்கிய கான்செப்ட் .ஆனால், அவர்களால் எல்லோரையும் வேலைக்கு வாங்க முடியாது. விலை போகும் நபர்கள், விலை போகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்களை இவர்கள் விலைக்கு வாங்குவார்கள். அந்த ஒரு செயல் ஒட்டுமொத்த பத்திரிக்கை சமுதாயத்தையே அது இழிவு படுத்துகிறது.

அதனால்தான் இன்று பத்திரிகைகளுக்கும், செய்தியாளர்களுக்கும், இப்படிப்பட்ட ஒரு சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது. அது மட்டுமல்ல, அரசியல் கட்சிகளில் இவர்கள் சொல்லக்கூடிய தொண்டர்கள்! தொண்டர்களா? என்பதை இந்த பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், கண்ணை மூடிக்கொண்டு மக்களை ஏமாற்றி செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தொண்டர்கள் என்றால் அதற்கு அர்த்தம் வேண்டும். ஒரு கட்சி தொண்டன் சமுதாயத்திற்கு அவன் செய்த சேவைகளை வைத்து தான் தொண்டன் என்று அவனை அங்கீகரிக்க வேண்டும்.
ஆனால் கொலை குற்றவாளி ,மோசடி பேர்வழி, ஊரை ஏமாற்றுபவன் ,கிரிமினல் குற்றவாளி, ரவுடிகள் , அடவடி பேர்வழிகள், சுயநலவாதிகள் ,இவர்கள் அத்தனை பேரும் தொண்டர்கள் என்று அந்த கட்சி சொன்னால் ,அதை அப்படியே எழுதிக் கொண்டிருக்கும் பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் எப்படிப்பட்ட ஒரு பொய்யை சொல்கிறார்கள்?
தொண்டனுக்கும் , இவனுக்கும் இவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் இவனை தொண்டன் என்று சொன்னால், அப்படியானால் தொண்டன் யார்? அவன் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறானா? அவன் மக்களுக்கு தொண்டு உள்ளத்தோடு சேவை செய்திருக்கிறானா? அவன் தான் தொண்டன். ஆனால்,
கட்சி உறுப்பினர் அட்டை வைத்திருப்பவன் எல்லாம் தொண்டன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயமானது ? மேலும்,எப்படி பத்திரிக்கை அடையாள அட்டை வைத்துக் கொண்டு ,நானும் செய்தியாளன் என்று ஏமாற்றுகிறார்களோ ,௬ அதே போலிகள் தான் அரசியலிலும் தொண்டன் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி இருப்பினும், வைகோவின் கூட்டத்தில் செய்தியாளர்கள் செய்த தவறு என்ன அவர்கள் வேலை என்னவோ அதை செய்தார்கள் சரி என்ன காரணத்திற்காக தாக்கப்பட்டார்கள்? ரவுடிகளுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
உங்களுடைய பேச்சை தானே இந்த செய்தியாளர்கள் படம் எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வந்தவர்கள் அவர்களை எதற்காக அடிக்க வேண்டும்? அவர்கள் தான் உங்களுக்கு இளக்காரமா? பாவம் அவர்கள் பிழைப்புக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை அடிப்பதால் உங்களுக்கு என்ன லாபம்? இது வைகோவின் அரசியல் கட்சித் தலைவருக்கு உள்ள ஒரு தகுதியற்ற வேலை என்பதை பொதுமக்கள் உணர்ந்தால் சரி.