சுதந்திரப் போராட்ட தியாகி டாக்டர் சியாம பிரசாத்தின் 125 வது பிறந்தநாள் விழாவில் ! – ஆளுநர் ஆர்.என்.ரவி .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

டாக்டர் சியாம பிரசாத் சுதந்திரம் பெற்ற பிறகு இந்துக்களுக்காக போராடிய மாபெரும் போராட்ட வீரர்.

எத்தனையோ உண்மைகள் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் பெறுவதற்கு முன்னும், பெற்ற பிறகும் மறைக்கப்பட்ட அரசியல் வரலாற்று உண்மைகளில் பல வெளி வராத உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அரசியல்.

அப்படிதான் டாக்டர் சியாம பிரசாத்தின் தியாகமும் இன்று பிஜேபி அரசால் மக்களுக்கு புரிய வைக்கவில்லை என்றால், அது தெரியாமலே போயிருக்கும். இப்போதாவது இவர் யார் ?என்பதை மக்களுக்கு புரிய வைப்போம். டாக்டர் சியாம பிரசாத்தும், டாக்டர் அம்பேத்காரும், ஒரே கருத்தியல் கொண்டவர்கள். அதாவது அவர்கள் இந்துக்களுக்காக போராடியவர்கள்.

அன்றைய பிரதமராக இருந்த நேரு செய்த பல மோசடி வேலைகள் இப்போது தான் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்தக் காலத்திலே மக்களுக்கு பகுத்தறிவு இல்லாமல், பசி ,பட்டினி, பஞ்சத்தில் வாழ்ந்த மக்கள் ஆங்கிலேயர்களால் அடிமைப்பட்டு ,துன்பப்பட்டு வாழ்ந்த போது கூட இந்தியாவில் எவ்வளவோ மறைக்கப்பட்ட வரலாறு உண்மைகள் மக்களுக்கு தெரியாமலே செய்து விட்டார்கள்.

ஆனால், நேரு முஸ்லிம்களுக்காக மட்டுமே போராடி இருக்கிறார். அதை எப்படி தெரிந்து கொள்ளலாம் ?என்பதை இன்றைய சமுதாயம் நன்றாக கவனியுங்கள். காஷ்மீருக்கு தனி அந்தஸ்து, காஷ்மீருக்கு தனி பிரதமர், காஷ்மீருக்கு தனி சட்டம், இதையெல்லாம் கொண்டு வந்தவர் அன்றைய பிரதமர் நேரு .இதையெல்லாம் எதிர்த்தவர்கள் டாக்டர் அம்பேத்கர் சட்டம் படித்தவர் ,சட்ட மேதை ,அதே போல் சட்டம் படித்த, சட்ட நுணுக்கங்களை தெரிந்தவர் டாக்டர் சியாமத் பிரசாத் இவர்கள்தான் நேருவை எதிர்த்து இந்த கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

அப்போது பாமர மக்கள் அவர்களை எல்லாம் எதிர்த்து போராடவோ, கேட்கவோ தெரியாது. அடிமையாக வாழ்ந்த நம் மக்கள். இந்த சுதந்திர காற்று எப்போது அவர்கள் அனுபவித்தார்கள்?

இப்படிப்பட்ட தியாகிகள் இதையெல்லாம் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று பாடுபட்டாலும் ,இறுதிவரை அதை அவர்களால் செய்ய முடியாமலே மறைந்து விட்டார்கள்.

இன்று டாக்டர் சியாம பிரசாத்தின் கனவும், டாக்டர் அம்பேத்கரின் கனவும் ,பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கிறார். அதுதான் ஆர்டிகல் 370 காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை நீக்கினார்கள். கடைசி வரை நேரு குடும்பம் , மற்றும் பாகிஸ்தான் இருவரும் இந்தியாவும், ,காஷ்மீரும் ஒரு தனி நாடாகவே பார்த்தார்கள்.

அதை உடைத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இது எல்லாம் சாதாரண வேலையோ அல்லது சாதாரண விஷயமோ கிடையாது. இந்தியாவுக்குள் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றன? அதிலும் எதிர்க்கட்சிகள் நாட்டின் எதிரி கட்சிகளாக பேசி இன்றைய காங்கிரஸ் கட்சி அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தது.

அந்த காலத்தில் நேரு செய்த வரலாற்றுப் பிழை இன்றும் தொடர்ந்து, இந்த தேசத்திற்கு செய்ய போராடிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல, டாக்டர் சியாம பிரசாத் வங்காளதேசமும் ,கல்கத்தாவும் இன்று இந்தியாவுடன் சேர்ந்து இருக்கிறது என்றால் ,அன்று டாக்டர் சியாம பிரசாத் செய்த அரசியல்.

மேலும்,நேரு குடும்பத்தை எதிர்த்து செய்த அரசியல் இன்று இந்தியாவுடன் அது தக்க வைக்கப்பட்டுள்ளது. இப்படி பல அரசியல் வரலாற்று உண்மைகள் சுதந்திரம் பெற்ற பிறகும் ,சுதந்திரத்திற்கு முன்னும் நாட்டு மக்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்தில் மூன்று வேலை சோறு கிடைத்தாலே பெரிய விஷயம் என்பார்கள் .அப்படி வாழ்ந்த மக்களிடம் இந்த உண்மைகள் சொன்னாலும் அவர்கள் தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி இருப்பார்களா? என்பதே தெரியவில்லை.

மேலும், இன்று இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரம், கல்வி வேலைவாய்ப்பு , தொழில் ,எல்லாவற்றிலும் மக்கள் மேன்மை அடைந்துள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது .இந்த காலத்தில் ஆவது மக்கள் அரசியல் என்ற சூழ்ச்சி வளைக்குள் சிக்கி விழுந்துவிடாமல் உண்மை எது ?என்று புரிந்து வாழ வேண்டிய காலம் தற்போது மிக ,மிக அவசியமானது.

அந்த காலத்தில் மக்கள் அறியாமையால் வாழ்ந்தார்கள் ஆனால் அப்போது அரசியல் என்பது சூழ்ச்சியாக, மறைமுகமாக ஏமாற்றப்பட்டது. இப்போது அரசியல் என்பது நேரடியாகவே, பேச்சிலும் ,ஊடகங்களிலும் ,சமூக ஊடகங்களிலும், ஏமாற்று வேலை இருக்கிறது.

இந்த ஏமாற்று வேலை மக்களுடைய முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் மிகப்பெரிய கேள்விக்குறி ஆக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.மேலும்,

தான் ,வாழ வேண்டும் என்பதற்காக நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கிறது .ஆனால், நாடு வாழ வேண்டும் என்பதற்கு எத்தனை அரசியல் கட்சி இருக்கிறது ?என்பதை உங்களால் பதில் சொல்ல முடியுமா?

அதற்கு ஒரே பதில் பிஜேபி. அதாவது தமிழ்நாட்டில் உள்ள பிஜேபி கட்சியினரையோ அல்லது கட்சியையோ ,பார்த்து பிஜேபியை எடை போட கூடாது.

மோடி ,அமித்ஷா ,ராஜ்நாத் சிங், இதற்கு முன்னாள் இருந்த பிஜேபி தலைவர்கள் ,அவர்கள் செய்த அரசியல் ?உண்மையான உழைப்பு? நேர்மை? அதுதான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சி ,அதுதான் உலக நாடுகளில் இந்தியாவைப் பற்றி பேசப்படும் பாராட்டுக்கள். மேலும்,

இந்த அரசியல் வரலாற்று உண்மைகள் இந்த விழா நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் போய் சேர முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஒரே நாடு பத்திரிக்கையா ஆசிரியர் நம்பி நாராயணன், ஆளுநர் ஆர் .என்.ரவி, பேராசிரியர் கனகசபாபதி, டாக்டர் ஹச் வி அண்டே, டாக்டர் சியாம பிரசாத்தின் அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கோவை விக்னேஷ் ஆகியோருக்கு தான் இந்த பெருமை சேரும்.

ஏனென்றால் அவர்கள் முயற்சி எடுத்து இந்த விழாவை நடத்தவில்லை என்றால், இந்த உண்மை தமிழக மக்களுக்கு போய் சேருமா? விழாவில் கலந்து கொண்ட அத்தனை படைப்பாளர்கள் சார்பிலும் ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பிலும் தியாகி டாக்டர் சியாம பிரசாத்தின் தியாகத்தை அவருடைய 125 வது பிறந்தநாள் விழாவில் நினைவு கூர்ந்து வாழ்த்தினோம் ! .பாராட்டினோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *