அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram
சேலம் மாவட்டத்தில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.தீபாவளி நேரம் என்பதால் அன்பளிப்பு என்ற பெயரில் லஞ்சம் அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும்.
இதையறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆங்காங்கே அதிரடி ரெய்டு, கைது என நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக பில் கலெக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றிய விவரம் வருமாறு; மிட்டாபுதூரைச் சேர்ந்தவர் ராஜூ.
இவர் தமது புதிய வீட்டுக்கு சொத்துவரி ரசீது வேண்டி அஸ்தம்பட்டியில் உள்ள மண்டல அலுவலகத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பித்து இருந்தார். அவரது ஆவணங்களை சரிபார்த்த அங்குள்ள பில் கலெக்டர் ராஜா என்பவர், ரூ.35 ஆயிரம் லஞ்சம் தந்தால் சொத்துவரி ரசீது தருவதாக கூறி உள்ளார்.அவரின் பேரத்தை விரும்பாத ராஜூ, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, உஷாரான போலீசார், ராஜாவைகையும், களவுமாக பிடிக்க எண்ணினார். அதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜூவிடம் கொடுத்து, அதை பில் கலெக்டர் ராஜாவிடம் தருமாறு கூறினார். அவரும் போலீசாரின் அறிவுறுத்தல்படி ரசாயன ரூபாய் நோட்டுகளை தர, அதை வாங்கும்போது மறைந்திருந்த போலீசார் ராஜாவை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.