ஜெயலலிதா நினைப்பில் எடப்பாடி இருந்தாரனால் ! அதிமுக கட்சி காணாமல் போய்விடுமா ?-அதிமுகவின் கட்சி எம்எல்ஏக்கள் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் தான் ஒருவர் மட்டுமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதால்! அந்த கட்சி இன்று பல பிளவு பட்டு பலமிழந்து நிற்கிறது .

மேலும்,அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம், எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஜெயலலிதா இருக்கும்போது கட்சியின் மதிப்பு மக்கள் செல்வாக்கு நிலைமை என்ன? இப்போது அந்த கட்சியின் நிலைமை என்ன? அந்த ஒற்றுமை சீர்குலைவதற்கு முக்கியமாக இருப்பது எடப்பாடி பழனிசாமியின் தான் என்ற ஒரு கர்வத்தில் அந்த கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல, கட்சி தான் இவர்! இவர்தான் கட்சி! என்று இவராக நினைத்துக் கொள்கிறார். மேலும், பொதுச் செயலாளர் ஆகிவிட்டதால் கட்சியே தன்னுடைய சொந்த சொத்து என்று நினைத்து செயல்படுகிறார்.

மேலும், இவ்வளவு நாள் இந்த கட்சிக்கு மக்கள் ஒரு மரியாதை கொடுக்கிறார்கள் என்றால், அது எம்ஜிஆர், ஜெயலலிதா மீதுள்ள விசுவாசத்தின் பேரில் ,அதிமுகவுக்கு என்று கொடுக்கப்பட்டு வரும் மரியாதை !

ஆனால், அதை எல்லாம் ஊழல் என்ற கரைகளால் அந்த அதிமுக என்ற கட்சியின் மதிப்பு , மக்கள் செல்வாக்கு செல்லரித்துவிட்டது. அதுவும் ,இவருக்கு தெரியவில்லை. தவிர,இவருக்குத் தெரிந்ததெல்லாம் ஜோதிடர்கள் சொல்வது, சாமியார்கள் சொல்வது, இதுதான் தெரிகிறது.

மேலும், இன்றைய மக்களின் எதிர்பார்ப்பு என்ன? இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன? மக்கள் அரசியலையும், அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் உற்று நோக்கிக் கொண்டு இருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு இன்னும் புரியவில்லை.

தற்போது கூட வந்த செய்திகள் தவெக வுடன் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று பெரும்பான்மையான கட்சி எம்எல்ஏக்கள் சொன்னால் கூட, அதை இவர் காதில் கேட்டு கொந்தளித்து கோபப்படுகிறாராம்.

மேலும்,எடப்பாடி பழனிசாமி விஜய்க்கு நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால், இன்னொரு முறை இந்த சீட்டு கூட வாங்க மாட்டீர்கள். மக்கள் எல்லாவற்றையும் ,உற்று நோக்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்காக இல்லை. இவர்களுக்காக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும், விஜய்க்கு ஆதரவு கொடுப்பது ,அதிமுகவின் நலனுக்கு நல்லது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களின் மனம், வாழ்க்கை முறை வேறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதை அரசியல் கட்சியினரும், அரசியல் கட்சித் தலைவர்களும், புரிந்து கொண்டு விஜய்க்கு ஆதரவளிப்பது நல்லது.

மேலும்,உங்கள் சுயநலத்திற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. நீங்கள் பதவிக்கு வர வேண்டும் என்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் வாக்களித்து இருக்கிறார்கள் என்பதை அரசியல் கட்சி தலைவர்களும், அரசியல் கட்சியினரும் புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *