தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “என் நெஞ்சில் குடியிருக்கும் “நூல்! வெளியீட்டு விழாவில் ! – சபாநாயகர் ஜே .சி .டி .பிரபாகர்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

என் நெஞ்சில் குடியிருக்கும் நூலை ம. மலை மோகன் எழுதி ,அதை ஆவடி புரட்சி பாரதி பதிப்பகம் பதிப்பித்த நூல் வெளியீட்டு விழா குழுவின் தலைவராக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே .சி .டி .பிரபாகரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். மேலும்,

இந்த நூலில் குறிப்பிட்டள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் தலைப்பில்! முதல்வர் விஜய் இளமைப் பருவம் முதல் ,அவர் சினிமாவில் ஹீரோ ஆனது வரை ,அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது.

அதில் சினிமா வாழ்க்கையில் இருக்கும் போது, பொது வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டு, மக்களுக்கான பணியை எவ்வாறு செய்தார்? என்பதை இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. மேலும்,ஒருவர் திரைத்துறையில் ஹீரோவாக நடித்து, பல கோடிகளை சம்பாதித்தாலும், தலைமைப் பண்பு இல்லாமல், ஒருவர் உச்சத்தை அடைய முடியாது என்பதை இந்த நூல் விரிவாக விளக்குகிறது.

மேலும்,இதற்கு முக்கிய காரணம் அவருடைய உழைப்பும், திட்டமிடுதலும், தொலைநோக்கு பார்வையும் இவரை இன்று முதல்வராக்கியுள்ளது என்ற அவருடைய நோக்கத்தை இந்நூலில் அது பிரதிபலித்துள்ளது.

இது தவிர,திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் போது , மக்கள் மனதில் எப்படி இடம் பெற்றார்? அந்த இடத்தை எவ்வாறு தன்னோடு அரவணைத்து மக்கள் தொண்டு செய்ய வைத்து, அரசியலில் இன்று உச்சத்தை தொட்டு உள்ளார் என்பதை இந்த நூல் விரிவாக, சுவராசியமாக மூத்த பத்திரிகையாளர் ம.மலை மோகன் விவரித்துள்ளார்.

மேலும், இன் நூலில் இவரைப் பற்றி புகழ் பாடுவது, பெருமை பேசுவது, எதுவும் இல்லாமல், அவருடைய உழைப்பை மற்றும் தன்னடக்கத்தை எளிமையாக சித்தரித்திருக்கிறார்.

அதில் அடைந்த இவருடைய உயரத்தை ஒவ்வொரு அத்தியாயத்திலும், தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவர் ஆட்சிப் பொறுப் பேற்று சுமார் 100 நாட்கள் ஆகும் நிலையில், இவர் மாநில உரிமைக்காகவும், ஊழல் நடவடிக்கைகளுக்காகவும், எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து, இதில் விளக்கியுள்ளார். மேலும் , மக்களுக்கான நல்ஆட்சி! எவ்வாறு கொடுக்க முடியும்? என்பதை இதில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புரட்சி பாரதி பதிப்பகத்தின் உரிமையாளர் கு. துரைராஜ் அவர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும், இந்நூலுக்கு முக்கிய அம்சமாக அது மெருகேற்றி உள்ளது.

மேலும், இந் நூலின் சிறப்பு அம்சமே, ஒரு நடிகர் எப்படி அரசியலில் முதல்வரானார்? என்ற கருத்து இன் நூலில் “என் நெஞ்சில் குடியிருக்கும்”. இந்நூலை சட்டமன்ற பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் வெளியிட்டார்.

மேலும்,அதை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் செயலாளர், முனைவர் மு. ராஜாராம் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தார்கள்.

மேலும்,இந்த நூல் தவெக தொண்டர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஜென்சி இளைய தலைமுறையினருக்கு இது ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *