
புதுச்சேரி மாநிலத்தில் வாழும் காமராஜராக இருக்கும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்தை தமிழக முதல்வர் விஜய் போனில் தெரிவித்துள்ளார்.
மேலும்,இன்று மக்களை எளிதில் சந்தித்து, குறைகளை கேட்கும் ஒரே முதலமைச்சர், முதல்வர் ரங்கசாமி . அவரை புதுச்சேரியில் நானும் இரண்டு முறை பார்த்திருக்கிறேன் .
மேலும்,ஒரு முதல்வர் மக்களிடம் இவ்வளவு எளிமையாக அணுகக் கூடியவர்கள் ,இந்த காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் இருந்தார்கள். அதனால் தான், இவரை வாழும் காமராஜர் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.
மேலும்,இவருக்கு அடுத்த படியாக உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சர் மக்களை நேரடியாக உட்கார வைத்து, அவர்களுடைய கோரிக்கை மனுக்களை வாங்குகிறார் .

மேலும்,அதுவும் அவர் நின்று கொண்டு! ,இதையெல்லாம் பார்க்கும் போது, உண்மையிலேயே இப்படிப்பட்ட முதலமைச்சர்கள் பெற்றிருக்கும் மாநில மக்கள் ,உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் , தான் என்று சொல்ல வேண்டும்.
இருப்பினும், சுயநல அரசியல் கட்சியினர் , அதையும் குறை சொல்லிக் கொண்டு,அவரவர்களுக்கு தகுந்தார் போல் ,அவர்கள் பேசிக்கொண்டு, மக்களை முட்டாளாக்கலாம் என்று இருந்து வருகிறார்கள்.
ஆனால் ,மக்கள் அவ்வளவு எளிதில் இனி ஏமாற மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. மேலும்,தமிழ்நாட்டில் மக்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து ஏமாந்து விட்டார்கள். இனி சுதாரித்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
