
விஜய் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை இன்றே சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து, வஞ்சப்புகழ்ச்சி அணியாக பேசிவிட்டார். இது வஞ்சத்தின் உச்சம் என்றே தெரிகிறது.

மேலும்,இவர் எதற்காக போய்? சால்வை போட்டு, கட்டி பிடித்தாரோ, அவர்கள் இதற்கு மேல் நடிப்பார்கள். இதை எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டு தான் ,அரசியலுக்கு வருகின்றார்கள் .
ஆனால் ,இவர்கள் அரசியலில் மக்களிடம் நிஜத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும், திமுகவுக்கு இது கைவந்த கலை. மேலும்,நம்பர் ஒன், கேடி பூறா எங்கடா இருக்கான்னா? இங்க தான் இருக்கிறான் என்று அரசியல் தெரிந்தவர்கள் பேச்சு.ஆனால், ஊழலும் செய்துவிட்டு, எங்களை விட, உத்தமனுங்க எவனும் இல்லைன்னுவானுங்க, இதை கூட நான் சொல்லவில்லை, நம்ம மக்கள் தான் சொல்கிறார்கள்.

மேலும்,தற்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் எம்எல்ஏக்களில் 126 பேர் குற்ற வழக்கு உள்ளவர்கள் என்று சர்வே சொல்கிறது. முதலிடத்தில் திமுக ,இரண்டாவது இடத்தில் தவெக, மூன்றாவது இடத்தில் அதிமுக இப்படி ஒவ்வொரு கட்சிக்குள்ளும் இந்த கிரிமினல்கள் எதற்காக ?குற்ற வழக்கு உள்ளவர்கள்? என்பது இன்னும் எந்த அரசியல் கட்சியும் தெளிவாக சொல்லவில்லை.

மேலும்,இந்த குற்ற வழக்குகள் மட்டுமே வெளிவந்துள்ளதே தவிர, எதற்காக இந்த குற்ற வழக்குகள்? என்பதும் அரசியல் கட்சிகள் மக்களிடம் தெரியப் படுத்துவதில்லை. அப்படி என்றால் வாக்களிப்பவர்கள் அடி முட்டாள்களாக இன்னும் இருக்கிறார்கள் என்பது தான் இதற்கான கருத்தை அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும்,மக்கள் எப்படிப்பட்ட அரசியல் விரும்புகிறார்கள் ?என்றால் ,மக்களுக்கான அரசியலை தான் விரும்புகிறார்கள். தவிர,உதயநிதி இன்று சட்டப்பேரவையில் பேசியது போல, இந்த நடிப்பை மக்கள் விரும்பவில்லை.

மேலும்,கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்? ஆளுங்கட்சியாக இருக்கும்போது ,எதுவும் செய்யவில்லை ஆனால் ,இன்று மக்கள் எதிர்க்கட்சி வரிசையில் உங்களை உட்கார வைத்த பிறகு, தான்,உங்களுக்கு விஜயின் தேர்தல் அறிக்கை மட்டும்தான் தெரிகிறதா?
மேலும்,கடந்த உங்கள் ஆட்சியில் நீங்கள் கொடுத்த தேர்தல் அறிக்கையில் என்னென்ன செய்தீர்கள்? என்பதை பட்டியல் போட்டு சொல்லுங்கள்?. குறை சொல்வது, கேலி செய்வது, ஏளனமாக பேசிவிட்டு போவது, இளக்காரம் செய்வது, இது எல்லாம் அரசியல் கிடையாது.

மனசாட்சி படி பேசுங்கள் ,மனசாட்சியோடு அரசியல் நடத்துங்கள், உங்களைப் போன்ற உத்தம வேஷ அரசியல் எல்லாம், தூக்கி குப்பையில் போடுங்கள். மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்று எண்ணத்தோடு தான் விஜய் வந்திருக்கிறார் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால் அதில் நிறைய எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் செய்வது போல் நடந்து கொள்கிறார். அது அவருடைய அரசியல் அனுபவம் இன்மை . நீங்கள் என்னதான் அவர்களை சமாதானம் செய்து, அவர்களுக்கான ஒரு மரியாதை கொடுத்தாலும், அவர்களுடைய சுயரூபத்தை காட்டிக் கொண்டு தான் இருப்பார்கள்.

மேலும்,அது ஒரு நயவஞ்சகக் கூட்டம் ,கிரிமினல் கூட்டம், ரவுடிகள் கூட்டம், மனசாட்சி இல்லாமல் பேசும் கூட்டம், இது எல்லாம் கலந்த கலவை தான் திமுக. நியாயமானவன், மனசாட்சி உள்ளவன், லட்சத்தில் ஒருவர் இருப்பார்கள் ,அங்கே! அதனால் அவர்களை நீங்கள் தோளில் சுமந்தாலும், உங்கள் கழுத்தை நெறித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
இதற்கிடையில் உங்கள் கட்சியில் இருக்கின்ற அராஜக கூட்டத்தை விஜய் பாரபட்சம் என்று அடக்க வைக்க வேண்டும். இல்லையென்றால், அது உங்களுக்கே ஆபத்தை விளைவித்து, அவர்கள் மூலம் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
இது தவிர, மிக முக்கியமான ஒன்று. திமுக ஆட்சியில் பல அமைச்சர்களின் ஊழல் விவகாரங்கள் நீதிமன்றத்திலும், சிபிஐ வழக்கிலும் ,நிலுவையில் உள்ளது.
அதையெல்லாம் அவர்களுக்கு எதிராக நீங்கள் செயல்பட்டால், அவர்கள் உங்களுக்கு பலவித நெருக்கடிகளின் தொல்லைகளையும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

அதன் ஒரு சிறிய பகுதி தான் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று பேசியது, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் , உத்தரவு நடவடிக்கை எடுக்க சொல்லும் அதற்கான எஃப் .ஐ. ஆர், டிஜிபி அலுவலகத்தில் இன்னும் அமைச்சர் கே என் நேரும் இது போடாமலே பெண்டிங் வைத்துள்ளார்கள்.

இது தவிர, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மின்சார ட்ரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. அந்த புகாரின் மீது விசாரித்து நடவடிக்கை எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை சரியான தகவல்கள் கொடுக்காமலும், நடவடிக்கை எடுக்காமலும் அதை தள்ளுபடி செய்து விட்டார்கள்.

ஆனால் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உத்தரவிட்டு, சில மாதங்களாகியும் இன்னும், டிஜிபி அலுவலகம் ,அவர் மீது எஃப் .ஐ .ஆர் பதியாமல் உள்ளது. இங்கே இதற்கு விஜய் மத்திய அரசு சொல்வதை செய்வதா? அல்லது எதிர்க்கட்சியான திமுக சொல்வதை செய்வதா? என்பது தெரியாமல் அவர் இப் பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?
மேலும், இதற்கு முட்டுக் கொடுத்தால், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்கள் முட்டாள்களாக உங்களுக்கு வாக்களிக்கவில்லை. நீங்கள் சொன்னது போல், திமுக ஒரு தீய சக்தி என்று மேடைக்கு ,மேடை கத்தியிருக்கிறீர்கள். இதை ஸ்டாலின் குடும்பமும், திமுகவினரும், எப்போதும் மறக்க மாட்டார்கள்.

அவர்கள் உங்களுக்கு எப்படி எல்லாம் பள்ளம் தோண்டலாம் என்று தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதனால் விஜய் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்கள் கட்சியை நிறை கூட நீங்கள் நம்பக் கூடாது.
இன்றைய அரசியலில் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய எண்ணம் உள்ளவர்களை தேட வேண்டி இருக்கிறது. அதனால் தான் இவர்கள் பதவிக்கு அலைகிறார்கள். ஆனால் மக்கள் பணி செய்ய வேண்டும் என்றால் இவர்கள் காத தூரம் ஓடுகிறார்கள்.
எனவே, விஜய் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பல போராட்ட களத்தில் இந்த அரசியல் அதிகாரம் உங்கள் கைக்கு வந்துள்ளது. இதை சமாளிப்பது என்பது ஒவ்வொரு நாளும் பல சவால்களை சந்தித்து வெற்றி கொள்ள வேண்டிய நிலைமைக்கு இருக்கிறது. எதிலும் நிதானம் நிச்சயம் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்களுடைய நோக்கம் மக்கள் பணியாக இருந்தால் இவர்களுடைய எதிர்பார்ப்பு அரசியல் உங்களிடம் தோற்றுப் போகும் என்பது உறுதி. – ஆசிரியர்.