
அதிமுகவின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் எடப்பாடி பழனிசாமி என்கிறார் எம் எல் ஏ சி.வி. சண்முகம். இதை ஏற்க மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இங்கிருந்து ஆரம்பிக்கிறது.

இந்த உட் கட்சி மோதல், இந்தப் பிரச்சினையால் தொடர்ந்து ,பல எம்எல்ஏக்கள் போராட்ட களத்தில் இறங்கி ,தவெக காவிற்கு தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை கடிதத்தின் வாயிலாக கொடுத்துள்ளனர்.
இதில் எடப்பாடி பழனிசாமி ,தன் பக்கம் உள்ள தவறுகளை அரசியல் கட்சி ரீதியாக பார்த்துப் பேசாமல், கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், அரசியல் தெரியாதவர்கள், போல் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு மாநில பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் சரியாக தேர்தலில் செயல்படாமல் போனால், அவர்களை நீக்கி வேறு, ஒரு மாவட்ட செயலாளரை தேர்வு செய்கிறார்கள்.
அதேபோல் தானே கட்சியில் ஒரு மாநில பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பொறுப்பில் சரியான முறையில் கடமையாற்றாவிட்டால் கட்சி தோல்வியைத் தான் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும். அதைக் கட்சி நிர்வாகிகள் கேட்கக்கூடாது என்கிறார்.
அவரை நீங்கள் ராஜினாமா செய்யுங்கள், பொதுக்குழுவை கூட்டி வேறு ,ஒரு பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம் என்றால், அதை ஏற்றுக்கொள்ள அவர் மறுக்கிறார். இதனால்,அக் கட்சியில் எதிர்ப்பு வலுக்கிறது.

மேலும்,ஆளாளுக்கு ஒரு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து ஆண்டு காலம் எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் என்ன செய்யப் போகிறார்கள்? அடுத்தது,
இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக கூட்டணி ஆவது ஏற்படுத்திக் கொண்டிருந்தால், அதிமுக கட்சியாவது அடுத்த நகர்வுகளுக்கு கொண்டு செல்லலாம், மக்களிடம் சேவையும் செய்யலாம்.
ஆனால், எதற்கும் வழி விடாமல் இருந்தால் ,நான் மட்டும்தான் முதலமைச்சர் இருந்தால், நான் மட்டும்தான் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர், இப்படி எல்லாம் பிடிவாதம் ஆக இருப்பது, அக் கட்சியின் நலனுக்கு ஏற்றதல்ல.

ஏற்கனவே, அதிமுக வலுவான எதிர்க்கட்சியாக செயல்படாமல், இருந்தது, அதனுடைய நம்பகத் தன்மையை மக்களிடம் இழந்தது. அதுமட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி திமுகவின் ஊழல்களை எதிர்த்து அரசியல் செய்யவில்லை.

அதை செய்திருந்தால் நிச்சயம் இந்த சட்டமன்றத் தேர்தலில் இவர் முதலமைச்சராக மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருப்பார். அதற்கான தகுதி இல்லாமல், கட்சியை வழிநடத்த தகுதி இல்லாமல் ,தொடர்ந்து அதிமுக தோல்வியை தழுவும் போது, இந்த கட்சியில் காணாமல் போய்விடும்.
அதனால், சி.வி. சண்முகம் மற்றும் எஸ். பி. வேலுமணி இந்த கட்சியின் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க சி.வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளனர்.