தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு குதிரை பேரம் முதல் கரூருக்கு விஜய் செல்லக்கூடாது வரை, திமுகவும், அதிமுகவும், பிஜேபியும், இணைந்து நெருக்கடி அரசியல்? ஏன்?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள்

விஜய் ஆட்சிக்கு எந்தெந்த விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம்? என்பதை ஏற்கனவே, மக்கள் அதிகாரம் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அதுதான் நடக்கிறது. மேலும்,

திமுகவினர் மீது கை வைத்தால், நிச்சயம் அவர்கள் பொய்யை பரப்புவதில் வல்லவர்கள். அடுத்தது இது போன்ற குதிரை பேர புகார்கள் அளித்து ஆட்சிக்கும், நற் பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவார்கள்.

ஏனென்றால், இவர்கள் அரசியலில் திட்டம் போட்டு திருடுகிற கூட்டங்கள்,அதை சட்டம் போட்டு தடுத்தால், தடுப்பவனை எப்படி எல்லாம் அவன் மீது அவதூறு பரப்பலாம்? எப்படி ஆட்சியை கவிழ்க்கலாம்?என்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கும். மேலும்,

சட்டத்தை மதிப்பவர்கள் போல பேசுவார்கள் ,காட்டிக் கொள்வார்கள், ஆனால் ,சட்டத்தை மிதிப்பார்கள். ஒரே வரியில் சொன்னால், இவர்கள் எல்லாம் அரசியல் டான்கள். இந்த டான்களை எதிர்க்கும் போது ,இப்படிப்பட்ட பிரச்சனைகளை ,தமிழக முதல்வர் விஜய் சந்தித்து தான் ஆக வேண்டும். குறிப்பாக சொன்னால் சினிமாவில் தான் நீங்கள் வில்லனகளை பார்த்திருப்பீர்கள். நிஜத்தில் இவர்கள்தான் வில்லன்கள்.

இந்த வில்லன்கள்,மக்களிடம் போய் 100 முறை, பொய்யை திரும்ப, திரும்ப சொல்லி ,சொல்லி இவர்கள் உண்மையாக்கப் பார்ப்பார்கள். மேலும், உண்மையை அந்த அளவுக்கு வலிக்க ,வலிக்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இவர்கள் பொய்யை திரும்பத், திரும்ப சொல்லி, சொல்லி மக்களை ஏமாற்ற பார்ப்பார்கள்.

இப்போதும் காலம் தான் இவர்களுக்கு கூலி கொடுத்திருக்கிறது. காலம் தான் இவர்களுக்கு சிறைச்சாலையை எப்படி இருக்கிறது? என்பதை பார்க்க வைக்க போகிறது. எந்த காலம் இவர்களுக்கு நல்ல காலமாக இருந்ததோ, அந்த காலம்,தமிழ்நாட்டுக்கு இருண்ட காலம்.

அதே தமிழக மக்களுக்கு நல்ல காலம் தமிழக முதல்வர் விஜயின் மூலமாக ஆரம்பித்ததோ ,அப்போதிலிருந்து இவர்களுக்கு இருண்ட காலம். இப்போதும் காலம் தான் இயக்குகிறது. அன்று எப்படி தமிழக மக்களுக்கு இவர்கள் நல்லவர்களாக தெரிந்தார்களோ, அதே தமிழக மக்களுக்கு இப்போது இவர்கள் தீய சக்தியாக தெரிகிறார்கள்.

மேலும்,ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா திமுகவை சரியான முறையில் திமுகவை எதிர்த்து ஒரு எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அதுதான் அதிமுகவுக்கு, இவ்வளவு பெரிய தோல்வி . மேலும்,

கட்சி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள், எல்லோரும் தவெக பக்கம் செல்கிறார்கள் என்றால், அது எடப்பாடி பழனிசாமியின் அரசியல் திறமையின்மை! மேலும்,

ஒரு கட்சியை எப்படி நிர்வகிக்க வேண்டும்? என்பது தெரிந்திருக்க வேண்டும் .அடுத்தது இவருக்குள்ள தகுதி என்ன? ஜெயலலிதாவின் தகுதி என்ன? என்பதை பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறோம். தன்னை ஜெயலலிதா போல் நினைத்துக் கொண்டால், அதுவும் எடுபடாது.

மேலும் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக விஜய்யால் காலி ஆகிவிட்டது என்று அவர் வேதனைப்படுகிறார? அல்லது யார் போனாலும் பரவாயில்லை, நான் ஒருவனே கட்சியிலிருந்து கொண்டு ,பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறாரா?

ஒரு கட்சி என்பது மக்களுக்காக செயல்படவில்லை என்றால் ,அந்த கட்சி தானாகவே அது இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போகும். அதே போல் தான், இப்போது அதிமுக மக்களுக்காக செயல்படாமல், அவர்களுக்காக மட்டும், செயல்பட்டு கொண்டு, கட்சியை நடத்தினால், அது கட்சி என்று சொல்வதற்கு இல்லை .அது இருக்கும் இடம் தெரியாமல் தான் போகும்.

பேருக்கு கவர்னரிடம் போய் கடிதம் கொடுக்கலாம். அதேபோல் தான் பிஜேபி தலைவர் நாயனார் நாகேந்திரன், மக்களுக்காக பிஜேபியை வழி நடத்தாமல், கட்சியினருக்காக பிஜேபி வழி நடத்தினால், தமிழ்நாட்டில் பேருக்கு தான் கட்சியாக இருக்கும்.

இப்போது லெட்டர் பேடில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய காரணத்தால், இந்த குதிரை பேர புகார் மனு விசாரிக்க வேண்டிய நிலைமைக்கு கவர்னர் இருக்கிறார். இங்கே குதிரை பேரும் நடந்தது குறித்த ஆதாரத்தை, இவர்கள் எப்படி நிருபிப்பார்கள்? பத்திரிக்கையில் தான் நிரூபிக்க முடியும். மேலும்,தொலைக்காட்சிகள் தான் நிருபிக்க முடியும். வேற ஏதாவது செய்ய முடியுமா?

அதனால், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மாறினாலும், இந்த அரசியல் கட்சியினர் மாற மாட்டார்களா? இவர்கள் எப்போது மாறப் போகிறார்கள்? எப்போது திருந்தப் போகிறார்கள்? கார்ப்பரேட் மைக்கைகளை நம்பி,அரசியல் செய்து ,இனி ஒருவரும் ஜெயிக்க முடியாது ,எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *