தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுநலன் இன்றி ,இவர்கள் சுய நலத்திற்கு அரசியல் கட்சியா? அது சமூகத்திற்கு பயன் உண்டா? எதற்கு இவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேர்தல் நெருங்குவதால் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருக்க கூடிய கார்ப்பரேட் அரசியல்வாதிகள் பதவிக்காக எந்த கட்சியில் சீட்டு கொடுப்பார்கள்? என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் அரசியல் கட்சியினர் எந்த கட்சியில் பொறுப்புக்களை கொடுப்பார்கள்? எத்தனை கோடி கிடைக்கும்? இப்படி சாதாரண பாமர மக்கள் முதல் கார்ப்பரேட் அரசியல்வாதிகள் வரை இன்றைய அரசியல் மக்களை ஏமாற்றம் அரசியலாக்கி விட்டார்கள்.

இந்த அரசியல் இவர்களுடைய சுயநலத்திற்காக, அரசியல் கட்சிகளை பயன்படுத்திக் கொண்டு, வாக்காளர்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர, பெண்கள் சுய உதவிக் குழுக்கள் கட்சி கூட்டங்களுக்கு சென்று ,அவர்கள் கொடுக்கும் பிரியாணிக்கும் ,பணத்திற்கும் இந்த சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், நாட்டில் ஊழல்வாதிகளை உருவாக்குபவர்கள் இவர்கள்தான் முக்கிய காரணம்.

தவிர,இதனால், உழைத்து வாழும் மக்கள் , அதாவது ,அவர்களுக்கு கிடைக்க கூடிய உரிமைகள், இந்த ஊழல் அரசியலாலும், ஊழல் அரசியல்வாதிகளாலும் மறுக்கப்படுகிறது. மேலும்,

அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்ய தானே தவிர ,இவர்கள் ஊழல் செய்து கோடிகளை கொள்ளையடிக்க, அரசியல் தேவையில்லை. மேலும், அரசியல் என்பது உழைக்கும் மக்களின் உரிமைக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் ஏற்படுத்துவது தான் முக்கிய நோக்கம்.

ஆனால் , அது தமிழ்நாட்டில் தலைகீழக இருக்கிறது. உழைப்பவனை விட அரசியல் கட்சிகள், ஊரை ஏமாற்றுபவனுக்கு முக்கியத்துவம் அளித்து அவனை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் அவன் தான் ஊழல்வாதிகளுக்கு முட்டுக் கொடுத்து பேசிக் கொண்டிருப்பான். கேட்டால் நான் அரசியல் கட்சி தொண்டன் என்பான். இந்த தொண்டனை ஊழலுக்கு முட்டுக் கொடுக்கும் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் முட்டு கொடுத்து அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.மேலும்,

அரசியல் என்றால் உழைப்பவர்களுக்கு ,அரசியல் தேவை. ஆனால், ஊரை ஏமாற்றுபவர்களுக்கு, சோம்பேறிகளுக்கு, வெத்து வெட்டுகளுக்கு, இவர்கள் எல்லாம் கட்சி என்றும், இவர்களெல்லாம் தொண்டர்கள் என்று சொல்லி மற்றொரு பக்கம் அரசியல் கட்சி தலைவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் இப்படிப்பட்டவர்களை வைத்து தான் படித்தவனை, அறிவுள்ளவனை, உழைப்பவனை இந்த அரசியல் கட்சி தலைவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போராட்டம் ஆகிக்கொண்டிருக்கிறது.

மேலும், இவர்களோடு சேர்ந்து, இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்கள் தொண்டர்கள் என்றால், இவர்களும் தொண்டர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் எவ்வளவு பொய் சொன்னாலும் ,அது உண்மை என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

எனவே ,உழைக்கும் மக்களுக்கும், படித்த சமூகத்திற்கும், விவசாயிகளுக்கும், விவசாய கூலிகளுக்கும், இந்த அரசியல் தெரியாத உண்மைகள். மேலும், பத்திரிக்கை என்பது ஒரு வெளிச்சத்தின் சுடராக இருக்க வேண்டும். அது வெளிச்சத்தை மறைக்கும் இருட்டாக இன்றைய பத்திரிகை, தொலைக்காட்சிகள் இருந்து கொண்டிருக்கிறது.

அதனால்,மக்களுக்கு பொதுநலம், சுயநலம் ஏது? என்று தெரியாமல் அரசியலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தவிர, தங்களுக்கு நல்லவர்களாக இருக்கிறார்களா? இலவசமாக எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, உழைப்பவனை முட்டாள்க்கி கொண்டிருக்கிறார்களா? முதலில் இலவசம் என்பதே மக்களை ஏமாற்றும் வேலை.

உழைக்கும் மக்களுக்கு சரியான கூலி கொடுத்தாலே போதும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்தாலே போதும்,உழைப்பவன்இடம் இருந்து பிடுங்கி ,ஊரை ஏமாற்றி பிழைக்க கொடுக்கப்படுகிறதா? இல்லை சோம்பேறிகளுக்கு கொடுக்கப்படுகிறதா? இலவசம் யாருக்கு கொடுக்கலாம்? கை கால் ஊனமுற்றவர்கள், வேலை செய்ய முடியாத வயதானவர்கள், அவர்களுக்கு தான் இலவசம் .

தவிர, எல்லோருக்கும் இலவசம் எதற்கு? அதனால், இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும், தேர்தல் ஆணையம் நாட்டில் தேவையற்ற அரசியல் கட்சிகளின் பதிவுகளை நீக்கப்பட வேண்டும். அதாவது அங்கீகாரம் அற்ற அரசியல் கட்சிகளை கொடி ,சிம்பல் எதுவும் கொடுக்கக் கூடாது. அவர்கள் அதை பயன்படுத்தவும் கூடாது. சுயசட்சியாக நிற்க வேண்டும்.மேலும்,

இந்த அரசியல் கட்சிகளால் நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் உருவாகிறது? என்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா? ஒரு பக்கம் ஊழல், மறுபக்கம் சமூக முன்னேற்றத்திற்கு பாதிப்பு ,பொதுமக்களுக்கு பாதிப்பு, ஜாதி கட்சி என்றால், ஜாதிகளுக்கு பாதிப்பு, இவ்வளவுக்கும் காரணம் இந்த அரசியல் கட்சிகள்.

எப்போது ஊருக்கு 10 அரசியல் கட்சிகள் வந்ததோ, அப்போதே சொந்த உறவுகள் விரோதியாக மாறிவிட்டார்கள். இவர்கள் நோக்கமே சொந்த உறவுகளுக்குள் கலகங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் குடும்பத்திற்குள் கலகங்கள் ஏற்படுத்திக் கொண்டு, ஒரு கிரிமினல் கூட்டம் ஸ்லோ பாய்சன் போல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இது அப்பாவி மக்களுக்கு தெரியாது. கிராமங்களில் இப்போது இந்த ஸ்லோ பாய்சன்கள் எப்படிப்பட்டவர்கள்? என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால், இவர்கள் போய் ஓட்டு கேட்டால் கூட எவனும் மதிக்க மாட்டான். அந்த அளவிற்கு அரசியல் கட்சியினர் செயல்பாடுகள் உள்ளது.

அதனால், மக்கள் அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சியினரும், பொதுநலமாக இருக்கிறார்களா? சுயநலமாக இருக்கிறார்களா? என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை சிந்தியுங்கள்.

ஏதோ பிரியாணி கொடுக்கிறார்கள், பணம் கொடுக்கிறார்கள், என்று தேர்தல் நேரத்தில் ஓடி, வருங்கால உங்களுடைய சந்ததிகளை சமூக விரோதிகளாக மாற்றாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *