மத்திய- மாநில அரசின் தவறான பத்திரிக்கை துறை விதிமுறைகளை மாற்றி சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளித்திட, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இமெயில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .
இதில் பத்திரிக்கை துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வரும் நான், மக்கள் அதிகாரம் என்ற பத்திரிகையின் இணையதளம் மற்றும் அச்சு -ஊடகத்தின் ஆசிரியராகவும், வெளியேட்டாளராகவும், இருந்து வருகிறேன். மேலும் ,இந்த பத்திரிகைகள் குறித்த பல செய்திகள், கட்டுரைகள் எமது இணையதளம் மற்றும் பத்திரிகையில் தொடர்ந்து ஐந்தாண்டுகளாக, மத்திய மாநில அரசுக்கு இது தவறான விதிமுறைகளால், கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் ஆண்டுதோறும் வீணடிக்கப்பட்டு வருகிறது என்பது குறித்து மத்திய மாநில அரசின் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
மேலும், காலத்திற்கு ஏற்றவாறு மத்திய அரசு எத்தனையோ பல சட்டங்களை மாற்றி இருக்கிறது. அதுபோல, காலத்திற்கு ஏற்றவாறு பத்திரிகையின் விதிமுறைகள் மாற்றுவது அவசியம் ஆனது. சர்குலேஷன் என்ற விதிமுறை தொடர்ந்து ஐம்பதாண்டு காலம், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சாதகமாக இருந்து வருகிறது .அதை மாற்றி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் தரத்தை பிரித்து ,அதற்கேற்றவாறு பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்.
இது தவிர, அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளும் ,இந்த சர்குலேஷன் விதிமுறையால் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் தவறான முறையில் அதற்கு கொடுக்கப்படுகிறது. அதேபோல் ,வியாபார நோக்கம் கொண்டதற்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால், சமூக நோக்கம் கொண்ட பத்திரிகைகளுக்கு இதுவரை எந்த சலுகை ,விளம்பரங்களும் கிடைக்கவில்லை.
மேலும், இதில் தினசரி, வார இதழ், மாத இதழ் என்று கணக்கில் எடுக்காமல் இணையதளத்தில் வெளியிடும் செய்திகளுக்கு, அதன் தரத்தின் அடிப்படையில் அந்தந்த பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தவிர, தற்போது சர்குலேஷன் என்பது பத்திரிகைகளிடம் ஒரு ஏமாற்று வேலை. எல்லா பத்திரிகைகளிலும் சர்குலேஷன் குறைந்துவிட்டது .அதனால், தொடர்ந்து சர்குலேஷன் வைத்து இந்த தவறான விதிமுறைகளை பயன்படுத்தி சலுகை, விளம்பரங்களை அனுபவித்து வருகிறது.
மேலும் ,தற்போது பத்திரிகைகளின் இணையதளத்தின் பார்வையாளர்களை அதை சர்குலேஷனில் கொண்டு வர வேண்டும். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தற்போது எல்லாமே டிஜிட்டல் மாயமாகி வருவதால், இதற்கு முக்கியத்துவம் அளித்து சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். இது மத்திய மாநில அரசுகள் தனித்தனியான விதிமுறையை வகுத்து செயல்படுவதை தவிர்த்து, ஒரே விதிமுறையாக நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும்.
அது மட்டுமல்ல தமிழ்நாட்டில் RNI சென்னையில் வாங்கிய பருவ இதழ் பத்திரிகைகளுக்கு மட்டும்தான் அரசு அடையாள அட்டை தருவோம் என்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தவறு ? மத்திய அரசு சென்னைக்கு ஒரு RNI, மாவட்டங்களுக்கு ஒரு RNI தருகிறதா ? இப்படி பல விதிமுறைகள் தவறான முறையில் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. மேலும், பத்திரிக்கை சுதந்திரம் என்பதை கேலிக்கூத்தாகி வருகிறார்கள் .அதனால்,
எப்படி மத்திய அரசு RNI ஐ பதிவு சட்டத்தை முழுதும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதோ, அதேபோல் இந்த சலுகை ,விளம்பரங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் .இதற்கான நிதியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொடுக்காமல், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும். அப்போது தனக்கான பத்திரிகைகளுக்கு மட்டுமே, சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதை மாநில அரசின் தவறான கொள்கை தவிர்க்க முடியும் .
மேலும், மக்களின் வரிப்பணம் மாநிலங்களில் இதற்காக பல ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். எனவே, பிரதமர் நரேந்திர மோடி இச்செய்தியை முக்கியத்துவமாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் .இவ்வாறு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சங்கம், பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது கோரிக்கையை தெரிவித்துள்ளது .