தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாற்றான கட்சியாக அண்ணாமலை ஆரம்பிக்கும் கட்சி இருக்குமா ?- இது வதந்தியா? அல்லது உண்மையா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக என்ற இரு கட்சிகளும், தேவையற்ற ஒரு கட்சியாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால் தான்,அதற்கு மாற்றாக இப்போது தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்திருப்பது ,அதுதான் இதனுடைய முக்கிய நோக்கம். மேலும்,அவருக்கு சினிமா மோகத்தில் உள்ள ரசிகர்கள் வாக்களித்து,இந்த 108 சீட்டை அவர் வாங்கவில்லை.

இதில் படித்தவர்களும் ,விஷயம் தெரிந்தவர்களும் ,வயதானவர்களும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக தான் ,இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய கட்சி வரவேண்டும் என்று அவர்கள் விருப்பம்.

மேலும், விஜயின் தேர்தல் வாக்குறுதிகள், ஒரு பக்கம் கவர்ச்சிகரமாக இருந்தது. அதுவும் படிக்காத மக்களுக்கு ஆசையை தூண்டி இருக்கலாம். இவையெல்லாம் ஆட்சி மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

மேலும்,இன்னொரு பக்கம் வரும் தகவல், அண்ணாமலை அரசியல் கட்சி ஆரம்பித்தால், முதல் E D ride ,அவருக்கு தான் வரும் என்கிறார்கள். ஆனால் ரஜினிக்கு இவரை வைத்து அரசியல் கட்சி ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டுள்ளார் என்கிற செய்தி அரசியல் வட்டாரத் தகவல்.மேலும்,

தமிழ்நாட்டில் மக்களுக்கான அரசியல் கட்சி எது என்பதுதான் இங்கே முக்கிய கேள்வி? இங்கே, விஜய்யை நம்பி மக்கள் வாக்களித்து விட்டார்கள். ஆனால், அவருடைய கட்சியினரின் அணுகு முறை மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. இது எல்லாம் விட விஜய் எப்படிப்பட்ட நிர்வாகத்தை கொடுக்கப் போகிறார்?

மேலும்,இவருடைய ஆட்சி!எந்த அளவில் இருக்கப் போகிறது? இந்த கேள்வி? எல்லா தரப்பு மக்களுக்கும் இருக்கிறது. இது அதிகாரிகள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

மேலும், இவர் அரசியல் அனுபவம் இல்லாதவர் என்று அதிகாரிகளும், ,பொதுமக்களும் பேசி வருகின்றனர். இந்த நிலையில் விஜய் எப்படி மக்களுக்கான சரியான ஆட்சியை கொடுக்கப் போகிறார்?

மேலும்,தேர்தல் வாக்குறுதிகள் இவரால் நிறைவேற்ற முடியுமா? இவருடைய கட்சியினரும் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களும் மந்திரிகளும் அந்த அளவுக்கு கட்டுப்பாட்டுடன் நேர்மையாக இருப்பார்களா ?இதுதான் முக்கியமான கேள்வி?இவருடைய ஆட்சி நிர்வாகத்தில் தோல்வி கண்டால் நிச்சயம், ஆட்சி மாற்றம் ஏற்படும்.

ஆனால் அந்த ஆட்சி மாற்றம் அதிமுக திமுகவுக்கு எதிரான ஆட்சி மாற்றமாகத் தான் இருக்குமே ஒழிய, அதற்கு தகுதியான ஒரு நபர் தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பிக்க இருக்க வேண்டும் அதுதான் இப்போது மக்களின் எதிர்பார்ப்பு.

மேலும் ,ஒரு வலுவான எதிர்க்கட்சி நாட்டில் இருந்தால் தான் ,ஆளுங்கட்சியை சிறப்பாக செயல்பட முடியும். மேலும், அண்ணாமலையே இதை செய்யவில்லை என்றாலும், வேறு ஒரு நடிகரோ அல்லது அந்த நடிகரை வைத்து அரசியல் கட்சியோ நிச்சயம் தமிழ்நாட்டில், இன்னொரு அரசியல் கட்சி உதயமாகத் தான் போகிறது.

மேலும்,தமிழகத்தில் தகுதியான ஒரு அரசியல் கட்சி! மக்களுக்கான ஒரு அரசியல் கட்சி! இன்னும் வெற்றிடமாக தான் இருக்கிறது.

அது தமிழக வெற்றி கழகத்திற்கு போட்டியாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *