மாணவர்களுக்கு ஒழுக்கம் இல்லாத கல்வி !அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தாது – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர வேண்டும் என்று செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது.

அதனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், 2031 ஆம் ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ,அனைத்து வசதிகளின் கூடிய கட்டமைப்புகள், கட்டிடங்கள், வகுப்பறைகள் ,கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, ஆசிரியர்களின் தகுதி மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பது ,மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களுடைய திறனை மேம்படுத்துவது ,போன்ற திட்டங்களை கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்று தான்.

மேலும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்தால் தான் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை அவர்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அது மட்டுமல்ல, அங்கே அவர்களுக்கு ஒழுக்கத்தையும் ,கற்றுக் கொடுக்கும் இடமாக பள்ளிக் கல்வித் துறை கொண்டு வர வேண்டும்.

மேலும்,இன்று மாணவர்கள் படித்து பட்டம் பெற்றால் கூட ,ஒழுக்கத்தில் அவர்கள் தோல்வி அடைந்து இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். நேற்று ஒரு கல்லூரி மாணவர்கள் வந்து டீ சாப்பிடக்கூடிய இடத்தில் நின்று பார்த்தேன். அவர்களில் ஒருவருடைய பேச்சு கூட மரியாதை மிக்கதாக இல்லை .சிகரெட் பிடித்துக் கொண்டு, சென்னை லோக்கல் லாங்குவேஜில், பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இவர்கள் எல்லாம் படித்து பட்டம் பெற்று ,வேலைக்கு சென்று, ஒரு குடும்பத்தை எப்படி காப்பாற்ற போகிறார்கள் ?என்று எண்ணம் அப்போதே இவர்களைப் பார்த்தவுடன் எனக்கு வந்தது. தவிர,பெண்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். வாடா, போடா என்று பேசிக்கொண்டு ஒழுக்கமில்லாத கல்வி மனித வாழ்க்கையை உயர்த்தாது.

எனவே ,முதல்வர் விஜய் இதையும், ஆசிரியர்கள்! மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் ,இடமாக பள்ளிகள் இருக்க வேண்டும்.அது மட்டுமல்ல, இவர்கள் போதை கலாச்சாரத்தில் இருந்தும், வெளிவர வேண்டும். அப்போதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நாட்டில் குறையும்.

தவிர, இதுபோன்ற ஒழுக்க கல்வியை முன் வைத்து, அதற்கும் மதிப்பெண் கொண்டு வர வேண்டும் என்பதை முக்கியத்துவமாக பள்ளிக் கல்வித் துறை இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாகவும், தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பாகவும், இக் கோரிக்கையை தமிழக முதல்வர் விஜய் ஜோசப்புக்கு வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *