ஜூலை 11, 2024 • Makkal Adhikaram
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டது ஒரு அதிர்ச்சியான சம்பவம் .இதில் அரசியல் தாண்டி ரவுடி கும்பலின் போட்டி அரசியல். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா ?என்ற மோதலில் சினிமாவில் வரும் காட்சிகள் போல் அரங்கேறி உள்ளது.
இந்த ரவுடி அரசியலால் ஊழல் மற்றும் அரசியலுக்கு தகுதியற்ற ஒரு நிலைதான் .இதில் யாராக இருந்தாலும் அல்லது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அனுதாபம் தெரிவிக்கலாம். ஆனால், இதை நியாயப்படுத்தி இதற்கு அரசு மரியாதை கேட்ட மக்களுக்கும், அரசியல் என்றால் ரவுடிகளின் அதிகார அரசியல் அல்ல. எங்கே ரவுடிசம் அதிகரிக்கிறதோ, அங்கே ஊழலும் அதிகரிக்கும். இது தெரியாதவர்கள், அரசியல் என்றால் மக்களை அடிமைப்படுத்துவது தான், அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு .
அது அரசியல் தெரியாத மக்களிடம் பேசுகின்ற வார்த்தைகள் .அரசியல் கட்சிகள் மக்களை அடிமைப்படுத்தும் நோக்கத்தில் செயல்பாடுகள் இருந்தால் அங்கே ரவுடியிசம் தலைவிரித்தாடும். இப்படிப்பட்ட மக்கள்தான் அதிகம் போதைகளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். இதை மாற்ற வேண்டும்.மக்கள் ஆன்மீக தெய்வ சிந்தனையில் மாறாமல், எந்த மாற்றமும் ஏற்படாது. கூலிக்கு மாரடைக்கும் கூட்டமாக, பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையாக மாறுவார்கள். வாழ்க்கையின் அர்த்தம் புரியாது. எதற்கு பிறந்தோம்? ஏன் வாழ்கிறோம்? எதுவும் தெரியாது.
ஏதோ ஆடு, மாடுகள் போல் வாழ்ந்து விட்டு, போகிற கூட்டமாக தான் இவர்கள் இருக்கப் போகிறார்களா? அல்லது மனித வாழ்க்கையில் மனசாட்சி உள்ள மனிதர்களாக வாழ்ந்து பிறருக்கு தீங்கு செய்யாமல், வாழப் போகிறார்களா? எவ்வளவு கொள்ளை அடித்தாலும், இறக்கும்போது அதை கொண்டு போக முடியாது. இருக்கும்போது அனுபவித்துவிட்டு, இறக்கும் மனிதன் நிம்மதி அடைகிறான்.
ஆனால், இதுபோன்று கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து அந்தப் பணத்தையும் சொத்தையும் அனுபவிக்க முடியாமல் ஏக்கத்தோடு இறந்துவிட்டால் என்ன பயன்? எல்லாமே வீண்.எதுவும் உன்னோடு வராது. அதனால், கடவுள் மிகப்பெரியவன். கடவுளை கல் என்று நினைத்தால் நினைப்பவன் முட்டாள். கடவுளை புரிந்தவன், அறிந்தவன் எந்த நிலையிலும் வாழ தெரிந்தவன்.மேலும்,
அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய ரவுடிகள் தான், இன்றைய சமூக விரோதிகள். இவர்கள் மீது எத்தனை வழக்குகள்? என்னென்ன வழக்குகள்? என்பதை மதிய – மாநில அரசின் உளவுத்துறை, பொதுமக்களுக்கும். தேர்தல் ஆணையத்திற்கும் ,அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். அது மட்டுமல்ல, அதை பத்திரிகைகளுக்கும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அரசியல் கட்சிகளில் உள்ள நல்லவர்கள், கெட்டவர்கள் யார்? என்பது மக்கள் ஏமாறாமல் புரிந்து கொள்ள முடியும்.
நாட்டில் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கும் மக்கள் அறியாமையால் வாழ்கிறவர்கள். அவர்களை கேட்டால் என்ன சொல்வார்கள்? எங்களுடைய வறுமை, நாங்கள் வாங்கிக் கொண்டோம். ஆனால், இவர்களை நிரந்தர வறுமை மக்களாக வாக்களிக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் புரியாதவர்கள் இதில் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவன், தான் அவர்களின் வாக்குகளுக்கு விலை கொடுத்து விட்டேன் என்று நினைக்கிறான். அதனால், அவன் 100 கோடி போட்டால், அந்த முதலீடு ஆயிரம் கோடியாக திரும்ப எடுக்க முயற்சி செய்கிறான். இதுதான் நாட்டின் அரசியல்.
இதிலிருந்து இந்த மக்கள் வெளியே வர வேண்டும். அது மட்டும் அல்ல, எங்கே ஊழல் நடக்கிறதோ, அங்கே ரவுடியிசமும் நடக்கும். சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்கு, அரசியல் கட்சி அடியாட்களுடன் சண்டை சச்சரவு, மோதல்கள், பெரிய கோடிக்கணக்கான விஷயம் என்றால் அதாவது ரியல் எஸ்டேட் பிரச்சனை, கம்பெனிகளில் ஸ்க்ரப் பிரச்சனை,கம்பெனிகளில் பிளாக் மெயில், இது எல்லாம் அரசியல் கட்சி ரவுடிகளை தவிர, வேறு யாரும் செய்ய முடியாத நிலைமைக்கு இருந்து வருகிறது .இதையெல்லாம் மாற்றினால் தான் அவர்களை ஒடுக்க முடியும்.
இன்று ரவுடிகள், அரசியல் கட்சிகளை பின்புலத்தில் வைத்துக் கொண்டு, அவர்களுக்கு பின்னால் சினிமாவில் வரக்கூடிய காட்சிகளை போல், மந்திரிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வைத்துக் கொண்டு, ஸ்கிராப் ,ரியல் எஸ்டேட் ,கனிம வள கொள்ளை, கலாச்சாராயம் ,ஒயின்ஷாப் பார்கள், போன்ற அத்தனையிலும் இன்றைய அரசியல் கட்சி ரவுடிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத மக்கள் கட்சி கொடியையும், கூட்டத்தையும், அவர்கள் பேச்சுக்களையும் பார்க்கிறார்களே தவிர, அவர்களுடைய தகுதி, செயல்பாடுகள் என்ன? என்பதை மக்கள் பார்க்காத வரை, அரசியலில் இருந்து ரவுடி யிசமும் ,ஊழலும் ஒழிக்க முடியாது .மேலும்,
மக்களுக்கு ஒழுக்க சிந்தனை குறைந்து விட்டது. கோயிலுக்கு போய் தேங்காய் உடைத்து சாமியிடம் கும்பிட்டு, செய்த தப்புக்கு உண்டியலில் பணம் போட்டு விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்ற ஒரு தப்பு கணக்கு அரசியல் கட்சி பிராடுகள் முதல் ரவுடிகள் வரை இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே யாராக இருந்தாலும், சட்டம் தண்டிக்கவில்லை என்றாலும் சட்டத்தை ஏமாற்றி கொண்டு வெளியில் வந்தாலும், இயற்கை என்ற இறைவனின் சட்டத்திலிருந்து யாருமே தப்பிக்க முடியாது. செய்தவன் தப்பித்தாலும், அவன் குடும்பத்தில் உள்ளவர்களை நோயிலோ அல்லது விபத்திலோ, நஷ்டத்திலோ ஏதோ ஒரு வகையில் அதனுடைய பாதிப்பு நிச்சயம் இயற்கை தண்டிக்கும்.
அதனால், சட்டத்தை ஏமாற்றி விட்டோம். சமுதாயத்தை ஏமாற்றி விட்டோம் என்று தவறான கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சி மோசடி பேர்வழிகள், முதல் ரவுடிகள் வரை மந்திரிகள் முதல் சாமானிய கட்சிக்காரர்கள் வரை யாராக இருந்தாலும், அந்த தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. இந்த பிறவியில் அந்த கணக்கு முடிக்கவில்லை என்றால், அது தொடர் கணக்குக்காக, இவர்களுடைய பிறவிகளில் இறைவன் எழுதி வைத்துவிடுவார்.
அதனால் தான் மிகப்பெரிய அறிவாளி, திறமைசாலி என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருந்தாலும், இவர்களுடைய பாவத்தின் கணக்கிலிருந்து இறைவனிடம் தப்பிக்க முடியாது.மக்கள் ஆன்மீக சிந்தனையில், அற வழியில் வாழாத வரை நாட்டில் அரசியல் கட்சிகளால், ஊழலும், ரவுடியிசமும் ஒழிக்க முடியாது.நாட்டில் சமூக குற்றவாளிகள் அரசியல் கட்சிகளில் இணைந்து, தங்களை சமூக சேவகர்களாக, தியாகிகளாக பேசிக் கொண்டிருந்தால், சமூகத்தில் ஊழலும், ரவுடிசம் தான் பெருகும் .
மேலும், காவல்துறை தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ, அதில் உள்ள சமூக குற்றவாளிகளின் பெயர்களை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். இந்த அரசியல் கட்சிகளின் வெளிவேஷங்கள் மக்களுக்கு தெரிய வரும் .ஒரு கிராமத்திலே, அரசியல் கட்சியின் பின்புலத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களாக வருகிறவர்கள், ஊரையே சாப்பிடும் ஊழல்களை செய்கிறார்கள் என்றால், நாட்டில் பெரிய அளவில் ஊழல் செய்யும் அரசியல் கட்சி ரவுடிகள் பற்றி சொல்ல வேண்டுமா ?