செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram

இன்று நாட்டில் திருந்த வேண்டியது அரசியல் கட்சி தலைவர்களும், அவர்களுடைய கட்சியினரும், இதை ஏன் சொல்கிறேன் ?என்றால் முதலில் இவர்கள் ஒழுக்கமானவர்களா? இவர்கள் நேர்மையானவர்களா? இவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா? இவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, பிறகு பகுத்தறிவு பண்பாளர்கள் இதை பேச வேண்டும்.

இவர்கள் இதுவரை எந்தெந்த சாமியார்களை பார்த்து இருக்கிறார்கள்? அவர்கள் என்ன பரிகாரம் சொன்னார்கள்?அதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், கட்சித் தலைவர்களும் பட்டியலிடுங்கள். அதுமட்டுமல்ல, எத்தனை ஜோதிடர்களை பார்த்திருக்கிறார்கள்? அந்த ஜோதிடர்கள் சொன்ன பரிகாரங்கள் எல்லாம் எவ்வளவு பேர் செய்து இருக்கிறார்கள்? இதுவெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா? மேலும், சில சாமியார்கள், சில ஜோதிடர்கள் போன ஜென்மத்தில் நீங்கள் செய்த தவறு என்ன? என்று சொல்லியது இல்லையா?

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இவர்கள் ஊருக்கு மட்டுமே உபதேசம் என்கிறார்கள். முதலில் அந்த உபதேசத்தை நீங்கள் கடைப்பிடியுங்கள். உங்கள் கட்சியினரை கடைபிடிக்க சொல்லுங்கள் .அதன் பிறகு மக்களுக்கு சொல்லுங்கள் .மக்கள் கார்ப்பரேட் மீடியாக்களில் சொன்னால் மட்டும் ஏற்றுக் கொள்வார்கள் என்று ஏமாந்து விடாதீர்கள். மக்களில் குறிப்பிட்ட சதவீதம் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.மேலும்,

அரசு பள்ளியில் பேசிய ஒரு சாதாரண விஷயம் அது !.இவ்வளவு பெரிய தமிழகமே பேசும் அளவிற்கு சர்ச்சையாக்கி விட்டார்கள். கடவுளை வணங்காமல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகிறார்களா ? அவரவர் எந்த மதத்தில் இருந்தாலும், அந்தந்த கடவுளை வணங்கிவிட்டு தான் அவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் .அது பள்ளி மட்டுமல்ல, எந்த தொழிலுக்கு போனாலும், அது முதலாளியானாலும் அல்லது தொழிலாளி ஆனாலும் கடவுளை ஒரு நிமிடம் வணங்கி விட்டு, அவர்கள் வேலைக்கு செல்கிறார்கள்.
இங்கே பள்ளியில் பேசும்போது மகாவிஷ்ணு என்ற ஆன்மீகவாதி, ஒரு படி அதிகமாக போய், இந்த ஆன்மீகத்தின் இறை சிந்தனை மாணவர்களுக்கு சொல்லி இருக்கிறார். அதாவது நாம் எடுத்து இருக்கின்ற ஒரு மனிதப்பிறவி, போன பிறவியில் நாம் செய்த புண்ணியத்தின் கணக்கிலும், பாவத்தின் கணக்கிலும் இப்பிறவி என்பதை சொல்லி இருக்கிறார். இதில் என்ன தவறு? உண்மையும் அதுதான். இதுதான் ஜோதிடத்தில் சொல்லும் கிரகத்தின் கணக்கு..இந்த உண்மையை மாணவர்கள் ஏன் தெரிந்து கொள்ளக் கூடாது? தெரிந்து கொண்டால்! அவர்கள் இந்த ஊழல்வாதிகளை அரசியலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் .அவர்கள் நேர்மையானவர்களை தேடுவார்கள். தகுதியானவர்களை தேடுவார்கள். தரம் குறைந்தவர்களை தேட மாட்டார்கள். அந்த ஒரு பயம் இவர்களுக்கு வந்துவிட்டதோ, அதனால் தான், இது ஒரு மூடநம்பிக்கை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியிருக்கிறார்.

அதாவது மனித பிறவி என்பதன் மீது நம்பிக்கை இருப்பவர்கள், இந்த மனிதப் பிறவியை ஆய்வு செய்பவர்கள், தான் ஆன்மீகவாதி .பிறவி எதற்கு? ஏன்? இந்த கேள்விகளை எல்லாம் அதைக் கேட்டு படிக்க வேண்டும். அதற்காக அவர்கள் தேர்வு செய்த ஒரு நிலை தான் ஆன்மீக கல்வி. அந்த கல்வி போதனையில் மாணவர்களுக்கு அது ஒன்றும் தவறான போதனை அல்ல.

உண்மையைச் சொல்லப்போனால், குருகுலத்தில் படித்த மாணவர்கள் அக்காலத்தில் இந்த கல்வியை படித்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் ஒழுக்கமானவர்கள், தகுதியானவர்கள் கடவுளிடம் பேசும் தகுதி உள்ள மக்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் கடவுள் எங்கே என்று கேட்டவர்கள்? அதை காட்டு என்றார்கள்? கடவுள் கண்ணுக்குத் தெரியாதவர். கடவுளை நீதான் தேட வேண்டும். உன்னை தேடி கடவுள் வர மாட்டார். உனக்குள்ளே நீ தேடும் போது, அப்போது அவர் யார்? என்று உனக்கு உணர்த்துவார் .அவர் தான் கடவுள்.
.jpeg)
இன்று போதை பொருளுக்கும், தவறான சிந்தனைகளுக்கும் போகாமல், இந்த இறை சிந்தனையுடன் வாழ்வியலை பற்றி வாழ்வது ஒரு நல்ல ஆரோக்கியமான விஷயம்தான்.பள்ளியில் எத்தனையோ மாணவர்கள், இன்று கல்லூரியிலும், பள்ளியிலும் போதை பொருளை உபயோகப்படுத்தும் போது, அதைப்பற்றி தடுக்க இதுவரை அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது? அது இன்று வரை மறைக்கப்பட்ட ஒரு விஷயமாகத்தான் இருந்து வருகிறது.
ஆனால், ஒரு நல்ல விஷயம் தப்பி தவறி மாணவர்கள் மத்தியில் வெளியில் வந்துவிட்டது. அதற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பா? ஒரு நண்பர் கூட கேட்டார். இதை எப்படி? அரசு பள்ளியில் பேசலாம் ? இத்தனைக்கும் அவர் ஒரு ஆன்மீகவாதி. ஆன்மீகவாதியை கூப்பிட்டால் ஆன்மீகவாதி அதைத்தான் பேசுவார். அரசியல்வாதியை கூப்பிட்டால், எப்படி ஊழல் பண்ணலாம் ?எப்படி கொள்ளை அடிக்கலாம்? என்பதை தான் பேசுவார். அவரவருக்கு என்ன தெரியுமோ, அதை தான் அவரவர் பேசிக் கொண்டிருப்பார்கள்.

இங்கே உங்கள் பகுத்தறிவு பகல் வேஷம் எல்லாம் மக்களுக்கா? ஏமாந்தது போதும் மக்களே, பகுத்தறிவுவாதிகள் எல்லாம் அவர்கள் குடும்பத்துக்கும், அவர்களுக்கும் முதலில் கடைபிடிக்க சொல்லுங்கள். பிறகு மக்களுக்கு போதனை செய்ய சொல்லுங்கள். இதுதான் சரியாக வரும். இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. அடுத்தவனுக்கு உபதேசம் சொல்லிவிட்டு, போவதற்கு உங்கள் கட்சிக்காரனை உட்கார வைத்து உபதேசம் செய்யுங்கள் .முதலில் அவன் இருக்கிறானா? என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் அரசியலில், முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தில் அதை செய்து காட்டுங்கள். பிறகு ஊருக்கு வாருங்கள் .பேசிக் கொள்ளலாம் என்கிறார்கள் – சமூக ஆர்வலர்கள்.