திமுகவிற்கு ஆட்சி கலைப்பு பயம் ஏன் ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சுயநலமும், சொந்த நலமும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வந்த ஆட்சி. இங்கே மக்களிடம் எதுவும் உருப்படியாக நல்ல நிர்வாகத்தை கொடுத்தோ அல்லது நல திட்டங்கள் செய்தோ , திமுக நற்பெயரை சம்பாதிக்கவில்லை. இப்படி மூன்றாண்டு காலத்தை ஓட்டி விட்டது .

இவர்களை பில்டப் செய்வது, கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் தான். எந்த காலத்திலும் இவர்கள் உண்மையை எழுதியதில்லை. எந்த ஆட்சி வந்தாலும் ,அவர்களுக்கு பில்டப் செய்வதுதான், இவர்களுடைய முக்கிய பணி. அதற்காகத்தான் இவர்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பரங்களும், சலுகைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் தான் செய்தி துறை வீணடித்துக் கொண்டிருக்கிறது .எந்த வரிப்பணத்தில் மக்களுக்கு உண்மைகள் போய் சேர்க்க வேண்டுமோ ,அதுவும் போய் சேரவில்லை.

இந்த நிலையில் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் தான் ஏதோ முடிந்த அளவிற்கு இந்த உண்மைகளை வெளியில் கொண்டு வருகிறோம். எங்களுக்கு இவர்களைப் போல் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டால் இந்த மக்களின் வரிப்பணத்தால், மக்களுக்கு பயனுள்ள செய்திகளை அளித்து இன்னும் அதிகப்படியான பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க முடியும்.. அது கொண்டு சேர்க்கக் கூடாது என்பதுதான், இந்த கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை தொலைக்காட்சியின் அரசியலும், திமுகவின் அரசியலும் ஒன்றிணைந்து செயல்படுகிறது. இது எந்த ஆட்சி வந்தாலும், இதே நிலைதான்.

இதற்கு முக்கிய காரணம் சர்குலேஷன் என்ற விதிமுறை. இது பற்றி மக்கள் அதிகாரம் பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டது .ஆனால், செய்தித் துறை அதிகாரிகளுக்கு இன்னும் புரியவில்லை. இவர்கள் மக்களுடைய வரிப்பணத்திலே சர்குலேஷன் காட்டிக்கொண்டிருப்பார்கள், நாங்கள் எல்லாம் சொந்த பணத்தில் எத்தனை நாளைக்கு இந்த சர்குலேஷனை காட்ட முடியும்?

அதை நீதிமன்றம் தான், இவர்களுக்கு புரிய வைக்க முடியும். இதை ஏன்? இங்கு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? மக்களிடம் அதிக அளவில், இந்த பத்திரிகைகளால் உண்மைகள் கொண்டு சேர்க்க முடியவில்லை.

தவிர, திமுக இப்படியே வசனம் பேசி, பில்டப் கொடுத்து எல்லாம் பத்திரிக்கை தொலைக்காட்சிகளில் செய்து கொண்டு இருந்தால், படிக்காத முட்டாள்களிடம் அரசியல் செய்ய முடியும். படித்த ஜெனரேஷன் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்து விட்டது. இவர்களுடைய ஊழல்கள் பற்றியும், அராஜகங்கள் பற்றியும், நடவடிகள் பற்றியும், பேசி சமாளிக்க முடியாத நிலைமையில் தான் திமுக மாட்டிக் கொண்டு முழிக்கிறது.காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடி, இதற்கு அடுத்த நிலையில் கே .என் .நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், டி ஆர் பாலு இப்படி வரிசையாக போய் கொண்டு இருந்தால், ஆட்சியில் கை வைத்து விடுவார்களோ என்ற அச்சம் மு க ஸ்டாலினுக்கு வந்துவிட்டது.

இதை எப்படி மக்களிடம் சரி கட்டுவது? ED எங்களை அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறது. ED யாரையும் பழிவாங்க முடியாது. அப்படி பழிவாங்கும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் செயல்பட்டால், அவர்களே மாட்டிக் கொள்வார்கள்.எந்த ஆதாரமும் இல்லாமல், ஒருவரை கோர்ட்டில் அவரை நிறுத்தினால், எந்த வழக்கும் அங்கே நிற்காது. இது சாதாரண ஒரு நிலை.

 ஆனால், அமலாக்கத்துறை அப்படியல்ல ,இவர்கள் எந்தெந்த காலத்தில், எந்தெந்த நாட்டில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்? அங்கே எத்தனை கோடி? எத்தனை லட்சம்? பணப்பரிமாற்றம் ?அவாலா மோசடி ஏற்படுத்தியிருக்கிறார்கள்? என்னென்ன செய்திருக்கிறார்கள்? என்பதை புள்ளி விவரத்தோடு எடுத்து தான் ,அமலாக்கத்துறை இவர்கள் மீது வழக்கு தொடர முடியும் .விசாரணை நடத்த முடியும்.

சும்மா அரசியலை வைத்து, பிஜேபி யாரையும் அமலாக்கத்துறை வைத்து பழி வாங்க முடியாது. அப்படி பழி வாங்கினால், திமுக தரப்பிலே கோர்ட் மூலம் அதை நிரூபிக்கலாம். ஏன் அங்கே நிரூபிக்கவில்லை?

. வடிவேல் காமெடி போல ,ஒன்லி பாடி லாங்குவேஜ்பா, பேஸ்மெண்ட் வீக் என்பது போல தான், திமுக ஆட்சி இருந்து வருகிறது. மேலும் 1962க்கு பிறகு ஏற்பட்ட திமுக ஆட்சியில் ,மக்கள் கேள்வி கேட்கவில்லை .இப்போது கேள்வி கேட்கிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். சமூக ஊடகங்களில் இது பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் .நீங்கள் என்னதான், அதே சமூக ஊடகங்களில், அல்லது கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளில், எப்படிப்பட்ட பொய் பிரச்சாரங்களை செய்தாலும், அதுவும் மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.

அதனால், ஸ்டாலின் இன்னும் நான்கு ஐந்து அமைச்சர்களை தூக்கினால், தன்னுடைய ஆட்சி கலைப்பு பயம் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் எங்கே நம்முடைய குடும்பத்தில் உள்ள அனைவரையும் கை வைத்து விடுவார்களோ என்ற மற்றொரு பயம். இப்படி தான் இன்றைய திமுக ஆட்சி நிலவரம் ஓடிக்கொண்டிருக்கிறது.மேலும்,

ஆதாரமில்லாமல் அமலாக்கத்துறை யாரையும் நெருங்க முடியாது. ஆதாரம் இருப்பதால் தான், உங்களை அது சுற்றி வளைக்கிறது. இதில் ஒரு பக்கம் பிஜேபியின் அரசியல் இருக்கிறது. மற்றொரு பக்கம், உங்களுடைய ஊழலும் இருக்கிறது .இதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? வினை விதைத்தவன், வினை அறுப்பான்.

இதைக் கொண்டு போய் திருச்செந்தூர் முருகனிடம் தங்களது துணைவியார் சத்ரு சம்சாரம் யாகம் செய்து தீர்க்க முடியுமா? அல்லது கோயில், கோயில் சென்று கடவுளை கும்பிட்டால்,இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா? கடவுள் அல்லவா குற்றவாளி ஆகிவிடுவார். இப்போதாவது உண்மை மக்களுக்கும், திமுகவிற்கும் புரிந்தால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *