ஜூலை 08, 2024 • Makkal Adhikaram
திருவள்ளூர் மாவட்டத்திற்கு எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகாந்த் ஐ ஏ எஸ் இப்பொழுது தான் இவர் பெயரை நான் கேள்விப்படுகிறேன். இந்த மாவட்டத்தில் 25 ஆண்டுகள் நிருபராக பணியாற்றி, தற்போது 10 வருடம் மக்கள் அதிகாரம் என்ற பத்திரிகையும் நடத்தி வருகிறேன். இதுவரை நான் இவரைப் பார்த்ததும் இல்லை. சந்தித்ததும் இல்லை. பெயரைக் கூட கேள்விப்படவில்லை. இவர் எல்லாம் திடீரென்று எம்பி ஆக வந்திருக்கிறார். இவர்களுக்கு எப்படியோ அரசியல் செல்வாக்கு மேல் மட்டத்தில் கிடைத்து விடுகிறது. பிபிசியில் அளந்து விடுகிறார். அரசியல் தெரியாதவர்களிடம் தான், இந்த அளவு எல்லாம் அளக்க முடியும் .
சமத்துவம், ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு ,இது எல்லாவற்றையும் முதலில் தலித் சமுதாயத்தில் ஆரம்பி, பிறகு மற்ற சமுதாயத்தில் ஆரம்பிக்கலாம் .அங்க விட்டுட்டு,மற்ற சமுதாயத்தில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது அதுவாவது தெரியுமா?. தலித்தில் இருக்கக்கூடிய வசதியானவர்கள். ஏழைகளுக்கு பெண்ணை கொடுங்கள். பெண் வாங்குங்கள். அப்புறம் பார்க்கலாம். தலித் சமுதாயத்தை ஏமாற்றும் பேச்சு மட்டும் அல்ல, மற்ற சமுதாயத்தையும் ஏமாற்றுகிற பேச்சு. அதனால் எதற்காக அரசியல்? எந்த வேலைக்கு அரசியல்? என்பதை சசிகாந்த் ஐஏஎஸ் தெரிந்து அதை ஒழுங்காக செய்தாலே போதும். அதை விட்டுவிட்டு, ஜாதி மட்டும்தான் அரசியல் என்று பேசுவது ஐஏஎஸ் என்று சொல்வதற்கு தகுதி இல்லை .
ஓட்டுக்காக அரசியல் பேசிவிட்டு போகிறவர்கள். வாயிலே பேசி வடை சுடுபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அதிக அரசியல்வாதிகள். அதில் எல்லா சமுதாயமும் சேர்ந்து இருக்கிறது. இது அரசியல் தெரியாத மக்களிடம் இந்த ஜால விந்தை செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே ஐஏஎஸ் என்ன? ஐபிஎஸ் என்ன? எல்லாம் ஒன்றுதான்.மேலும்,
தலித் சமுதாயத்திற்காக பேசக்கூடிய சசிகாந்த் ஐ ஏ எஸ், இருநூறு ரூபாய் கொடுத்து டாஸ்மாக் மதுவை வாங்கி குடிக்க முடியாமல், கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இறந்து விட்டார்கள். மீதி பேர் என்ன நிலைமை ?என்பது வெளிவராது செய்தியாகவே உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்த இடத்தில், இவர் போய் நேரில் கூட பார்த்ததில்லை . இவர் எல்லாம் சமுதாயத்தை பற்றி பேசுகிறார். பேசுவது சுலபம் ,நானும் பேசி விடுவேன். ஆனால், செய்வதுதான் ரொம்ப கஷ்டம். இன்று பேசுவது தான் அரசியல் என்று அரசியல் தெரியாதவர்களிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
காங்கிரஸின் 50 ஆண்டுகால ஆட்சியில் தலித் மக்களுக்கு செய்தது என்ன? அதை சொல்லுங்கள்.ஒரு படித்த ஐஏஎஸ் ஆக ,மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த ஒருவர், அவருடைய பேச்சு உண்மையாக இருக்கும் என்று தான் பார்த்தேன். ஆனால், அது அரசியல் உள்நோக்கமாக தான் இருக்கிறது..இதுவரையில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்த சாதனையை எம்பி சசிகாந்த் பட்டியலிட்டு சொல்லட்டும் .மோடி செய்தது பட்டியலிடுகிறேன். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்த ஊழல்களை பட்டியலிடுங்கள். எது அதிகம்? எது குறைவு ?என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்.ராகுலின் குடும்ப சொத்து என்ன? மோடியின் குடும்ப சொத்து என்ன? பத்தாண்டு பிரதமராக இருந்தும் அவருடைய சொத்து மதிப்பு என்ன? அதில் இருந்து அவர் யார்? என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் .
தேசிய காங்கிரஸ் தியாகமே உருவான காங்கிரஸ் கட்சி. அதிலிருந்து பிரிந்தது தான் இந்திரா காங்கிரஸ். இது கூட தெரியாத சசிகாந்த் எப்படி எம்பி ஆனார்?இந்திரா காங்கிரஸ் என்னமோ இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சியின் இவர் பேசிக்கிட்டு இருக்கிறார் .அப்படித்தான் அரசியல் தெரியாத பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .அதில் இவரும் ஒருவர். அந்த காங்கிரஸ் வேறு, இந்திரா காங்கிரஸ் வேறு, இது ஊழல் காங்கிரஸ் .அது நாட்டுக்கு தியாகமே உருவான காங்கிரஸ். அதையும் ,இதையும் ஒப்பிடக்கூடாது.
அடுத்தது ராகுலை கொண்டு வந்து மோடியாக கூட ஒப்பிடுகிறார். ஆயிரம் ராகுல் சேர்ந்தால் கூட ஒரு மோடிக்கு இணையாக முடியாது. இவர் ஒரு ஐஏஎஸ் ராகுல் நல்ல மனிதர் .அப்ப மோடி கெட்ட மனிதரா? ஐஏஎஸ் படித்தாலும், ஐபிஎஸ் படித்தாலும், இவர்களெல்லாம் எங்கே நிற்கிறார்கள்? என்றால் தலித் என்ற ஜாதி குள்ளே தான் இருக்கிறார்கள். அதை விட்டுவிட்டு வேற்று சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? உங்களுக்கு நீங்களே செய்து கொள்வதற்கு அது ஒரு அரசியலா? அதற்கு ஜாதி சங்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஜாதிக்கு செய்து கொண்டிருங்கள். தப்பு இல்லை. ஒரு அரசியல் கட்சி என்று வந்துவிட்ட பிறகு, அங்கே என்ன ஜாதி இருக்கிறது?
இதையெல்லாம் ஒரு ஐஏஎஸ் படித்தவருக்கு தெரியாதது அல்ல, மேலும்,அந்நிய சக்திகளின் கைக்கூலிகள்( சைனா )70 ஆயிரம் கோடி செலவு செய்தும் காங்கிரஸ் ஆள் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை . என்ற ஆதங்கமா? சசிகாந்த் ஐ ஏ எஸ்க்கு?
மோடியை எதிர்ப்பதற்கு சைனா 70,000 கோடி மறைமுகமாக செலவு செய்து கூட 99 சீட்டு தான் வாங்க முடிந்தது .இவர் ஒரு ஐஏஎஸ், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் இவருக்கு தெரியுமா? தெரியாதா? இந்தியாவிலேயே நடந்த மிகப்பெரிய ஊழல், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாடு பல லட்சம் கோடி இந்தியா கடனில் தள்ளப்பட்டது. .அந்நிய ஆதிக்கத்தின் சக்திகள், அதிக தலையீடு, நாடு அவர்களுக்கு பயந்து கொண்டு இருந்தது.நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் காங்கிரஸ் செய்தது என்ன? மோடியின் ஆட்சியில் நாடு நிமிர்த்து நிற்கிறது. உலகத் தலைவர்கள் மோடியை வரவேற்கிறார்கள். இந்தியாவை தலை நிமிர வைத்த ஒரு தலைவர் மோடி.
அது மட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் என் ஜி ஓக்கள் பற்றி இந்த ஐஏஎஸ் க்கு தெரியாதா? எவ்வளவு பிளாக் மணி? ஒயிட் ஆக்குவதற்கு ஃபாரின் கரன்சி இங்கிருந்து அங்கு செல்கிறது? அங்கிருந்து அவாளபணம் எத்தனை ஆயிரம் கோடிகள் வந்தது? இந்தியாவை பொருளாதாரத்தில் பலவீனப்படுத்த இதுவாவது தெரியுமா? இதற்கெல்லாம் மோடி ஒரு பெரும் தடை .அதுதான் அந்நிய சக்திகளின் ஆதரவான பிபிசிக்கு இவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் .
இது எல்லாம் தமிழ்நாட்டில் குடிகாரர்களுக்கும், அரசியல் தெரியாதவர்களுக்கும், நீங்கள் சொல்வது தான் உண்மை என்று தெரியும். எங்களைப் போன்ற ஆட்கள் காங்கிரஸ் லட்சணம் என்ன? நீங்கள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும், நீங்கள் சொன்னால் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருப்பார்கள். எது உண்மை? எது பொய்? என்பது எங்களுக்கு தெரியும் ? எத்தனை பத்திரிகைகள் பொய்களை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை தொலைக்காட்சிகள் அரசியல் கட்சியினர் பொய்களை மக்களிடம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்?மேலும்,
ஒரு படித்த ஐஏஎஸ் ஆக, மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த ஒருவர், அவருடைய பேச்சு உண்மையாக இருக்கும் என்று தான் பார்த்தேன். இவரும் எல்லோரும் போல தான் ஒரு அரசியல்வாதி.இன்று அரசியல்வாதி என்றால் பொய் தான் அரசியல்வாதி. சமீபத்தில் (அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்) தலைமைச் செயலகத்தில் ஒருவரை சந்தித்தேன். அவர் உண்மையை பேசினார். ஐயா காலையில் விழித்ததில் இருந்து மாலை 10 மணி வரை என் வாயில் பொய்தான் வரும்.10.00 மணிக்கு மேல் டாஸ்மாக் உள்ளே போனால், உண்மை ஏதாவது வெளிவரும். அதனால் அந்த நேரத்தில் தூங்கி விடுவோம் என்றார். இதுதான் இன்றைய அரசியல்வாதியின் நிலைமை.
(இது கீழ்மட்ட அரசியல்வாதியின் நிலைமை, மேல்மட்ட அரசியல்வாதியின் நிலைமை வேறு)