டிடிவி தினகரன் சுமார் பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயித்த போது, இவருடைய தொகுதி நிதியிலிருந்தும், சொந்த நிதியிலிருந்தும், தேனி தொகுதிக்கு இவருடைய பெயரில் மேல்நிலை நீர் திறக்க தொட்டிகளும், சமுதாய கூடமும் கோயில்களுக்கு மண்டபங்களும், வளைவுகளும், ஏதாவது சிறப்பான சமூகப் பணிகளும் செய்யாத கிராமங்களே இல்லை என்று தொகுதி மக்கள் பேச்சு .
அந்த அளவிற்கு டிடிவி தினகரன் தேனி தொகுதியில் மிகவும் அறிமுகமானவர் மேலும் இந்த தொகுதியில் முக்குலத்தோர், தேவர், மறவர் அவருடைய சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம். மேலும், இவரை எதிர்த்து போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். கொள்கை பரப்புச் செயலாளராக அமமுக வில் இருந்தவர்.
இவர் பல கட்சிகளுக்கு சென்று அரசியல் கட்சி பறவை போல பறந்து கொண்டிருப்பவர் என்று தொகுதி மக்கள் பேசுகின்றனர். மேலும், திமுகவில் உள்ள சீனியர்களுக்கு கொடுக்காமல் இவருக்கு கொடுத்தது, அதிலும் உட்கட்சி பிரச்சனை உள்ளது என்கிறார்கள். இதனால், திமுகவினர் டிடிவி தினகரனுக்கு கூட வாக்களிப்பார்கள் அந்த சூழ்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி உள்ளது என்கிறார்கள்.இது தவிர,
தேனி மாவட்டத்தில் அதிகப்படியான மணல் குவாரிகளும், மலைமண் குவாரிகளும், திமுக தற்போது கூட நிறுத்தாமல் எடுத்து வருவதாக அந்த மாவட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எந்தெந்த பகுதியில் எல்லாம் இதை எடுத்தார்களோ, அந்தந்த பகுதி மக்கள் அனைவரும் திமுகவிற்கு எதிராக பெரும்பான்மை மக்கள் வாக்களிப்போம் என்கிறார்கள்.மேலும்,
அதிமுகவில் தொகுதிக்கு அறிமுகம் இல்லாத பெயர் தெரியாத ஒரு நபரை எடப்பாடி பழனிசாமி நிறுத்தியதாக தெரிவிக்கிறார்கள். அதனால், டிடிவி தினகரன் இந்த தொகுதியில் இவருடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அரசியல் கட்சியினரும், பொது மக்களும் பேசுகின்ற மக்கள் கருத்து இது .