தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் திருத்த சட்டத்தில் (Sir) ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள அரசியல் முரண்பாடுகள், மற்றும் கருத்துக்கள் என்ன? – அது பற்றி ஆய்வு .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளர்கள் திருத்த சட்டம் மிகவும் அவசியமானது. அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் , இதில் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கும், ஆளும் கட்சி கூட்டணிக்கும், இடையே உள்ள அரசியல் முரண்பாடுகள் என்ன? அதாவது ,ஆளும் கட்சியான பிஜேபி வெளிநாட்டில் இருந்து வந்தவர்களான ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு இங்கே வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.

அது மட்டுமல்ல, பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களுக்கும் ,வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. இவையெல்லாம் நீக்கப்பட வேண்டும் என்று பிஜேபி சொல்கிறது. அது சரியானது. அதையெல்லாம் நீக்கப்பட வேண்டிய ஒன்று.

ஆனால், காங்கிரஸ் கட்சி ராகுல், திரிணாமுல் காங்கிரஸ் மம்தா, அகிலேஷ் யாதவ், ஸ்டாலின், திருமாவளவன், சீமான் போன்றோர் அதை எதிர்க்கிறார்கள். அது சட்டப்படி தவறு. வெளிநாட்டில் இருந்து illegal ளாக வந்தவர்களுக்கு எப்படி வாக்குரிமை இந்தியாவில் கொடுக்க முடியும்? அதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்து வந்து இங்கே குடியேறி ,அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டால், நாளை இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

மேலும், தமிழ்நாட்டில் வெளி மாநிலத்திலிருந்து வந்து, இங்கு பல ஆண்டுகளாக வேலை செய்பவர்கள், அதாவது பீகார் ,ஒரிசா, மேற்கு வங்கம், போன்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ,இங்கு வேலைக்காக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை முதல் ஆதார் அட்டை வரை கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.மேலும்,

வெளி மாநிலத்தில் இருந்து வந்திருப்பவர்கள் ,இங்கு வாக்களிக்கக் கூடாது. இது இவர்களின் நிலைப்பாடு. அப்படி வாக்களித்தால் அது பிஜேபிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.ஆனால், இது சட்டப்படி செல்லுமா?

இது ஒரு இந்திய நாட்டின் பிரச்சினை. எந்த மாநிலத்திற்கும், யார் வேண்டுமானாலும் சென்று தங்கலாம், சொத்துக்களை வாங்கலாம் ,பணி செய்யலாம். சரி இந்த கூலி தொழிலாளர்களை மட்டும் தான் எப்படி பேச முடியும்.

ஆனால், அதே வடநாட்டில் இருந்து வந்து பல ஆண்டுகளாக இங்கு ஜுவல்லரி கடைகள் முதல் பல்வேறு கடைகளை நடத்திக் கொண்டிருக்கின்ற வியாபாரிகளை இவர்கள் அவ்வாறு சொல்ல முடியுமா? அவர்கள் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள்.

மேலும்,சென்னையில் சவுகார்பேட்டையே அவர்களுடைய கோட்டையாக்கி விட்டார்கள். இங்கே அரசியல் கட்சிகள் மதுக்கடைகளை திறந்து, தமிழர்களைக் குடிக்கரார்களாக ஆக்கி விட்டு, தவிர, 100 நாள் வேலை கொண்டு வந்து, பெண்களை சோம்பேறியாக்கி, விவசாயத்தையும் காங்கிரஸ் கட்சி குட்டி சுவராக்கி, விவசாயத்தை நாசமாக்கி அதாவது தமிழ்நாட்டில்,வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஆக்கிவிட்டார்கள்.மேலும், இன்று ,

விவசாயத்திலிருந்து, கட்டிட வேலையில் இருந்து ,கம்பெனிகளில் இருந்து ,வியாபார நிறுவனங்களில் இருந்து, ஹோட்டல்களில் இருந்து ,இன்று வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் யார் காரணம்? அரசியல் கட்சிகள் தான் முக்கிய காரணம். இன்று ஓட்டுக்காக காத்துகிறார்கள், கதறுகிறார்கள்.

இதைப் பற்றி எல்லாம் அப்போது தடுத்து, இந்த மக்களின் நலனுக்காக இவர்கள் சரிவர செய்திருந்தால், வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய அவசியம் இல்லை. மேலும், எதிர்க்கட்சிகள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வாக்காளர்களாக இருப்பவர்களை நீக்க கூடாது என்று சொல்வது மிகப்பெரிய தவறு. இப்படி முரண்பட்ட அரசியல் கருத்துக்களை ஊடகங்கள் என்ற பெயரில் அவர்களுக்கு எடுப்பு வேலை பார்ப்பது, அது ஊடகத்தின் வேலை அல்ல. அவர்களுடைய ஏஜென்ட் வேலை . மேலும்,

திரும்பத் ,திரும்ப இந்த ஊடகங்களுக்கும் ,மக்களுக்கும் மக்கள் அதிகாரம் சார்பில் ஒரு உண்மையை தெரிவிக்கிறேன். இது பலமுறை மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது .இருப்பினும் இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய முக்கிய கடமை. இங்கே உள்ள அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, நானும் நான்காவது தூண், நானும் பத்திரிகை, நானும் தொலைக்காட்சி என்று சொன்னால் ,அதை ஏற்க முடியாது.

அதற்கு பதிலாக எந்தெந்த கட்சிக்கு யார், யாரெல்லாம் பேசுகிறார்களோ, அவர்களின் ஏஜென்டுகளாகவே மக்கள் இவர்களை பார்க்க வேண்டும். இங்கே ஆளுங்கட்சி தரப்பில் என்ன தவறு ?எதிர்க்கட்சிகளின் தரப்பில் என்ன தவறு ?இதை சுட்டி காட்டுவது தான் பத்திரிகையின் வேலை மற்றும் அதன் கடமை

ஆனால், மக்களிடம் பொய்யான செய்திகளை ஊடகங்கள் பெயரில் மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அது தொலைக்காட்சி, பத்திரிகைகளும் உள்ளே இருக்கிறது .சோசியல் மீடியாக்களும் உள்ளே இருக்கிறது. அவரவர்க்கு வேண்டிய அரசியல் கட்சிகள், என்ன சொல்கிறார்களோ, அவர்களுடைய ஏஜென்ட்களாக செயல்படுவது பத்திரிகைகளின் வேலை அல்ல.

அவர்களுக்கு செய்தித்துறை மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பது மக்களை முட்டாளாக்கும் வேலை. எனவே, இதையெல்லாம் மத்திய அரசு சரி செய்ய வேண்டும். மக்கள் அதுவும் வருங்கால இளைய தலைமுறைகள், இந்த உண்மைகளை எல்லாம் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த அரசியல் கட்சிகளின் பேச்சில் உண்மைகள் எது ?பொய் எது? என்பது உங்களுக்கு தெளிவாக புரியும். இந்த குழப்பத்திலிருந்து நீங்கள் வெளிவர முடியும்.

இவர்கள் பேசியே பிரைன் வாஷ் செய்யக்கூடியவர்கள். அதாவது மூளைச்சலவு செய்து கொண்டிருப்பார்கள். அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல், எது நாட்டு மக்களுக்கு தேவையான ஊடகங்கள்? தேவையான கருத்துக்கள்? என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் .

அதேபோல் ,எந்த அரசியல் கட்சிகள் மக்கள் நலனுக்காக செயல்படுகிறது? என்பதை ஆய்வு செய்து இன்று தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் உண்டு. என்பதை மனதில் வைத்து இந்த உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நன்றாக பேசுவதை வைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சியினரை ஏற்கக் கூடாது.

நன்றாக யார் செயல்படுபவர்கள்? அதை தான் ஏற்க வேண்டும். வாயிலே கதை சொல்பவர்களை எல்லாம், அரசியல் என்று தீர்மானிக்கின்ற அரசியல்! அவர்களால் மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

மேலும்,இது ஒரு பக்கம் இப்படி என்றால், சினிமாவை பார்த்துவிட்டு அரசியல் என்று ஏமாறுகிறார்கள். சினிமா! சினிமாவாக ,இருக்கட்டும் .அரசியல் அரசியலாக இருக்கட்டும். இது வேறு,அது வேறு, அதேபோல் பத்திரிகைகள் பத்திரிகைகளாக இருக்கட்டும். மக்கள் மக்களாக இருக்கட்டும். மா …க்களாக இருக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *