தேர்தல் நெருங்கும் வேலையில் ! கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு தேர்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு விட்டது .ஒவ்வொரு தேர்தலிலும், இந்த கருத்துக் கணிப்புகள் பொய்யாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சிக்கும் மெஜாரிட்டி என்பது இருக்காது. மேலும், குறைந்த வாக்கு சதவீதத்தில் தான் வெற்றி பெற முடியும்.
இங்கே பிஜேபி கூட்டணி, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என்று இந்த கூட்டணிகளை வைத்து கணிக்கும், கணிதம் துல்லியமாக சொல்ல முடியாது. காரணம் மக்களின் மனநிலை, இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளது. நகர மக்களின் மனநிலை வேறு, கிராம மக்களின் மனநிலை வேறு, அதிலும் கிராமத்தில் பாதி மாற்றம் தெரிகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் மன மாற்றம் கணிக்க முடியாத ஒன்று .
மேலும், ஒரு பகுதியில் குறிப்பிட்டு சிலரை கேள்வி கேட்டு பார்த்து அவர்கள் எதற்கு வாக்களிப்பார்கள்? என்ற நிலைமை தான் இந்த கருத்துக்கணிப்பு . தமிழ்நாட்டில் உள்ள ஏழு கோடி மக்களையும், யாராலயும் கணிக்க முடியாது. அது கடவுள் ஒருவரால் தான் கணிக்க முடியும் . தவிர, மக்களின் மனம் தேர்தல் நெருங்கும் இரு தினங்களுக்கு முன் அது எப்படி மாறுகிறது? என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. அதனால், இந்த தேர்தல் கணிப்புகள் எல்லாம் ஒரு அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது .
ஒருவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கணிப்பு வெளியிட்டால், அந்த அரசியல் கட்சியிடம் இருந்து கணிசமான தொகையை வாங்கிக் கொள்கிறார்கள். இன்னொரு கட்சிக்கு அதேபோல் வேறு ஒரு பத்திரிக்கையோ, தொலைக்காட்சியோ, கருத்துக்கணிப்பு வெளியிட்டு மறைமுகமாக பணத்தை கொள்வதாக தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.ஆக கூடி இவர்களுடைய கருத்துக்கணிப்பு என்பது நம்ப முடியாத ஒன்று.
படித்தவர்களின் மனநிலை வேறு, படிக்காதவனின் மனநிலை வேறு, விவரமறிந்தவனின் மனநிலை வேறு, இப்படி ஒவ்வொன்றும் ஒரு,ஒரு கோணத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்து தேர்தல் கணிப்பு வெளியிடுவது என்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. மேலும், தற்போது பெண் வாக்காளர்களின் மனநிலை எப்படி உள்ளது? இதையெல்லாம் பாகுபடுத்தி ஒரு கருத்துக்கணிப்பு ஆய்வு நடத்தி .தேர்தலில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் ? என்பது சொல்ல முடியாத ஒன்று. மேலும், பொதுமக்கள் எதைப் பற்றியும் கவலைப்பட போவதில்லை. ஆனால், அரசியல் கட்சிகள் தான் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பெரும் பரபரப்பையும், டென்ஷனையும் தலையில் தூக்கி, சுமந்து கொண்டு இருப்பார்கள்.
எனவே, கருத்துக்கணிப்பு வைத்து மக்கள் மனம் மாறி விடுவார்களா? அல்லது இதை வைத்து இவர்கள் சொல்லும் அரசியல் கட்சிக்கு மக்கள் வாக்களித்து விடுவார்களா? எதுவுமே நடக்காது. அப்படி என்றால், இது எதற்கு? அரசியல் தேர்தல் பத்திரிக்கை வியாபாரமா? தேர்தல் ஆணையம் இதற்கு தடை விதிக்குமா ?