நாட்டின் குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் வரவேற்கத்தக்க ஒன்று. மேலும், இது மதம் சார்ந்தது அல்ல, நாட்டு மக்களின் நலன் சார்ந்தது – மக்கள் அதிகாரம் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டு நலன் கருதி,நாட்டு மக்களின் நலன் கருதி, கொண்டுவரப்பட்ட சட்டம் தான் இந்த குடியுரிமை திருத்த சட்டம் சிஏஏ .

இந்த சட்டம் ,இங்கே நாட்டு மக்களாக வசித்துக் கொண்டிருப்பவர்கள் நாம்தான் இங்கு பெரும்பான்மை மக்கள். நம்முடைய சுதந்திரம் ,பேச்சுரிமை ,கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை முறை, வாழ்க்கைக்கு தேவையான சூழ்நிலைகள், அனைத்தும் இங்குள்ள மக்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான ஒரு விஷயம்.

இதை அரசியல் எதிர்க்கட்சிகள் ஓட்டுக்காக அரசியல் செய்கிறார்கள். அந்நிய தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு இங்கே முக்கியத்துவம் என்றால்! இங்கே பாரம்பரியமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த கலாச்சாரம் ,வாழ்க்கை முறை, இங்குள்ள மக்களுக்கு இது கேள்விக்குறியாக்கும். இங்குள்ள மக்களுக்கே இன்னும் அடிப்படைத் தேவைகள், வசதிகள் , வேலை வாய்ப்புகள்,செய்து கொடுக்க முடியாத அரசாங்கமாகத்தான் இன்று வரை இந்த அரசாங்கம் இருந்து கொண்டிருக்கிறது.

 இதில் நம்முடைய உழைப்பின் வரிப்பணம் தான் மக்கள் நலனுக்காக போய் சேருகிறது. நம்முடைய வரிப்பணம் தான், நாட்டு நலனில் இந்த வரிப்பணங்கள் செயல்முறைப்படுத்தப்படுகிறது .அப்படி இருக்கின்ற சூழ்நிலையில், அந்நிய தேசத்திலிருந்து வந்த மக்களுக்கு இந்த வரிப்பணம் ஒரு பக்கம் வீணடிக்கப்படுவது, ஏற்றுக் கொள்ள முடியாது. அடுத்தது, இந்த வெளிநாட்டு சக்திகள் இவர்களை இறக்கி, நாட்டில் குழப்பத்தையும், கலகத்தையும் விளைவிக்க, இது ஒரு முக்கிய காரணமாக அமையும்.

அடுத்தது வந்தவர்கள் அத்தனையும் அதிகப்படியாக முஸ்லிம்கள், கிறிஸ்த்துவர்கள் வேறு சில மாதங்களில் இருந்து வந்தவர்கள் . இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் ,இவர்களுக்கு எதிராக இந்த சக்திகள் ஒன்று திரண்டு பிற்காலத்தில் இந்த நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளாக மாறினால் என்ன செய்ய முடியும்? இவர்கள் எல்லாம் அவர்களிடத்தில் மண்டியிட வேண்டிய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படும் .

அது மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள். அதனால், இது மிக மிக மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய முக்கிய கருத்து. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள், இவர்களுக்கு எதிராக இந்த சக்திகள் ஒன்று திரண்டு பிற்காலத்தில் இந்த நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளாக மாறினால் என்ன செய்ய முடியும்? இவர்கள் எல்லாம் அவர்களிடத்தில் மண்டியிட வேண்டிய சூழ்நிலைக்கு நாடு தள்ளப்படும். அது மட்டுமல்ல ,ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள். அதனால் ,இது மிக மிக மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய முக்கிய கருத்து.

அதுமட்டுமல்ல, இளைய தலைமுறைகள் சினிமா என்ற ஒரு மாயையில் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும், இந்த கருத்து அனைத்து இளைஞர்களும் குறிப்பாக நீங்கள் தான் வருங்கால அரசிய லை நிர்ணயிக்க போகிறீர்கள். அதனால், அவசியம் நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும். இது நமது தேசத்தை பிளவுபடுத்தும் சக்தி என்பதை உணருங்கள்.அதுமட்டுமல்ல, இளைய தலைமுறைகள்  குறிப்பாக ,உழைப்பவர்கள் நாட்டில் முன்னுக்கு வர முடியவில்லை. அவர்களால் அவர்கள் குடும்பத்தை காப்பாற்றுவதே கேள்விக்குறியாக இருக்கிறது.

விலைவாசி உயர்வு, மக்களின் தேவைகள், அனைத்தும் இன்னும் இந்த மக்கள் நிறைவடையவில்லை .அப்படி இருக்கின்ற இந்த சூழ்நிலையில், இங்கு வந்து சேர்கின்ற மக்களுக்கு இந்த அரசாங்கத்தால் என்ன அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க முடியும்? அல்லது அவர்களை வைத்து இந்த அரசியல் கட்சிகள் ஓட்டுரிமை கொடுத்து, நம்மளை எல்லாம் பின்னுக்கு தள்ளி விடுவார்கள். அதனால், அவசியம் நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் .இது நமது தேசத்தை பிளவுபடுத்தும் சக்தி என்பதை உணருங்கள். இச்சட்டத்திற்கு எதிராக போராடும் அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் ,அனைவரும் இந்த நாட்டை பிளவுபடுத்தி விடுவார்கள்.

இந்த அரசியல் கட்சிகள் மதரீதியாக பிளவுபடுத்துகிறார்கள் என்று பிஜேபியை குற்றம் சுமத்துகிறது .இது விஜய் போன்ற அரசியல் கட்சி ஆரம்பித்து ,இந்த நாட்டை பிளவுபடுத்த கொடுத்துள்ள ஒரு அறிக்கை தான் இது. இந்த அறிக்கையை விஜய் திரும்ப பெற வேண்டும். அவர் ஒரு நல்ல ஆரோக்கியமான அரசியலை, தமிழ்நாட்டில் கொடுப்பார் என்று தான் எதிர்பார்த்தோம். ஆனால், இது ஆரம்பமே தவறாக உள்ளது. இதனால், தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன நன்மை ? என்பதை எதிர்க்கட்சிகள், விஜய் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் .

மேலும் ,இந்த சமூக நலனுக்காக ,இந்த தேச நலனுக்காக போராடுகின்ற நடுத்தர வர்க்கத்தினர் நடத்துகின்ற பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இந்த தமிழ்நாட்டு அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம் இதுவரை என்ன செய்துள்ளது? என்பதை இவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். எங்களுக்கே இதுவரை எந்த ஒரு சலுகையும், விளம்பரமும் கொடுக்காமல் இருக்கும் இவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு இவர்களால் என்ன செய்து விடுவார்கள் ?

தவிர ,தகுதியற்ற பத்திரிகைகளையும்,தகுதியற்ற பத்திரிகையாளர்களையும் இவர்கள் அரசியல் செய்வதுபோல் பேசிக் கொண்டிருக்க நாங்கள் ஒண்ணும் முட்டாள் பத்திரிகையாளர்கள் அல்ல. மேலும், இந்த பத்திரிகைகளை நாங்கள் வியாபார நோக்கத்தோடும், அரசியல் கட்சிக்கு ஆதரவோடும் இதை செயல்படுத்தவில்லை .இது முழுக்க முழுக்க தேச நலனிலும், சமூக நலனிலும் அக்கறை கொண்டது .அதனால் தான், எங்களால் முடிந்த அளவுக்கு எங்களுடைய சொந்த பணத்தில் இந்த பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களால் முடிந்த அளவுக்கு மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்கிறோம். இது எந்த அரசியல் கட்சிக்கும் எதிராகவோ அல்லது அமைப்புகளுக்கு எதிராகவோ, ஆதரவாகவோ, நடத்தப்படும் பத்திரிகை அல்ல, அதனால் ,உண்மையை மக்களிடம் சொல்வது தான் எங்களின் முக்கிய நோக்கம் .மேலும் ,எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக

,நீங்கள் சொல்லலாம் எல்லா மக்களுக்கும், இங்கே சமூக உரிமை கொடுக்கிறோம் என்று வாய்ஸ் கொடுக்கலாம் செயலில் எங்களுக்கே இன்னும் சமூக உரிமை பத்திரிகைகளில் கிடைக்கவில்லை. ஆனால், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு மட்டுமே உங்களை பாராட்ட ,நீங்கள் எவ்வளவு ஊழல் செய்தாலும், அதை எல்லாம் மக்களிடம் நல்லவர்களாக காட்டிக் கொண்டு இருக்க ,சலுகைகளும் , விளம்பரங்களும் ,கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். இந்த உண்மை இந்த நாட்டு மக்களுக்கு தெரியாது .இதை மக்கள் அதிகாரம் தான் மக்களிடம் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

 எங்களுக்கே இந்த நிலைமை என்றால் !மக்களுக்கு என்ன நிலைமை? இங்கிருக்கின்ற மக்களுக்கு என்ன நிலைமை? இதிலே அந்நிய தேசத்து, மக்களுக்கும் இங்கே இடம் இருக்கிறது என்றால்! வேறு நாட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரும் இங்கு வந்து உட்கார்ந்து கொண்டால்! இந்த மக்கள் எங்கே போவார்கள்? பைத்தியக்காரர்கள் போல், உங்களுக்கு வசதி வாய்ப்புகளை தேடிக்கொண்டு, நீங்கள் கோடிகளில், சம்பாதித்து விட்டு ,அரசியல் கட்சிகளிலும், அதேபோல் சினிமாவில் கோடிகளை சம்பாதித்து விட்டு, எப்படி வேண்டுமானாலும் அறிக்கை விடுகிறீர்கள்.எப்படி வேண்டுமானாலும் பேசுகிறீர்கள். விஜய் சினிமாவில் பல கோடிகளை சம்பாதித்து வைத்து விட்டு இன்று கட்சிக்கு வந்திருக்கிறார் .அவருக்கு கவலை இல்லை.

 ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் கனவுகளில் கூட கோடிகளில் உழைத்து சம்பாதிக்க முடியாது .அரசியல் கட்சிகளில் எளிதாக கோடிகளை சம்பாதிக்கிறார்கள். உழைப்பவன் கோடிகளை பேசிவிட்டும். காதுகளில் கேட்டு விட்டோம். தான் போக முடியும். அதனால், இந்த நாட்டு மக்கள் மிக, மிக சிந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஒரு சிறிய கிராமத்தையே இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்வோம். ஒரு கிராமத்தில் ஆயிரம் பேர் வசிக்கிறார்கள் என்றால், வெளியில் இருந்து வந்தவர்கள் 1500 பேரோ அல்லது 500 பேரோ என்று வைத்துக் கொண்டால் ,அந்த கிராமத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள் ?இது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, இங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரம் அனைத்தும் கேள்விக்குறியாகும் என்பதில் அனைவரும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

இது தவறான வழியில் நம்மை அரசியல் எதிர்க்கட்சிகள் முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை நாம் அனைவரும் அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு, இந்த தேசத்தின் முக்கியத்துவமும் ,இந்த தேச நலனில் முக்கியத்துவமும் மட்டுமே, நமது சிந்திக்கும் நோக்கமாக இருக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் மக்கள் நலனிலும், இந்த தேச நலனிலும் அக்கறை கொண்டு, இச்செய்தியை வெளியிடுகிறேன்.

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *