
தேர்தல் நெருங்குவதால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்க கூட்டங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்திற்கு நடுநிலையான பொதுமக்கள் அதிகம் வருவதில்லை. அந்தந்த கட்சிக்காரர்கள் மற்றும் கூலிக்கு வருகின்ற கூட்டம் ,இதுதான் இன்றைய அரசியல் கட்சி கூட்டம். மேலும், எந்த ஒரு

அரசியல் கட்சியும், கட்சியினரும் தங்களுடைய சுயலாபத்திற்காக தான் கட்சிக்கு வருகிறார்கள். பொதுநல நோக்கத்திற்காக வந்த கட்சிக்காரர்கள் ஒவ்வொரு கட்சியிலும் ஒரு சதவீதம் தேர்வார்களா? என்பது சந்தேகம்.

மேலும்,எப்படி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மக்கள் நலனுக்காக ஒரு சதவீதம் கூட தேருமா? என்ற நிலையில் இருக்கிறதோ ,அதே நிலையில் தான் இன்றைய அரசியல் கட்சியினர் இருக்கிறார்கள். தவிர,

பத்திரிக்கையும், அரசியலையும் வியாபாரம் (பிசினஸ்) ஆக்கி விட்டார்கள். இதில், எத்தனை கோடி செலவு செய்தால் ,நாம் ஜெயிக்க முடியும்? இது ஜனநாயகத்திற்கும் ஆபத்து ,மக்கள் நலனுக்கும் ஆபத்து.
மேலும் ,மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதில் இருந்து வெளியில் வரவேண்டும். மக்களின் சுயநலம்தான் என்று ஊழல்வாதிகள் கருப்பு பணத்தை தேர்தல் நேரத்தில் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த கருப்பு பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? வந்தால் பதவி! வராவிட்டால் கவலை இல்லை. இப்படிதான் துணிந்து இந்த அரசியல் வியாபாரத்தில் அரசியல் கட்சிகள் களத்தில் நிற்கிறது.

எந்த ஒரு அரசியல் கட்சிகாரனும் பணம் வாங்காமல் வாக்களிப்பது இல்லை. அப்படி இருக்கும்போது மக்கள் தங்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கட்சிக்காரர்களை புரோக்கர்களாக பயன்படுத்தி, இன்றைய அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கிறது. பொதுமக்களின் கதவுகளை எந்த நேரம் தட்டலாம்? யாரெல்லாம் நமக்கு வாக்களிப்பார்கள்? என்று தேர்வு செய்து தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி தேர்தல் என்பது வியாபாரம் ஆக்கி ,அதில் மக்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சிகள். மேலும்,

தற்போது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் எத்தனை எம்எல்ஏக்கள்? எம்பிக்கள்? கடந்த அதிமுக ஆட்சியிலும் ,தற்போது உள்ள திமுக ஆட்சியிலும் வழக்கு நிலுவையில் உள்ளது ?எத்தனை வழக்கு போடப்பட்டுள்ளது? புகார்கள் பதியப்பட்டுள்ளது எத்தனை? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அந்த கட்சியின் வழக்கறிஞர் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதிலளிக்கவில்லை .அதனால், அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க தகவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டும்,தகவல் கொடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ,இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உண்மையிலே இந்த விஷயத்தில் தமிழக வெற்றி கழகத்தை பாராட்டத்தான் வேண்டும் . தமிழக வெற்றி கழகம் மக்களின் நாடித்துடிப்பை பார்த்து தான் இச்செயலில் ஈடுபட்டு உள்ளது. விஜய்க்கு அரசியல் தெரிகிறதோ, இல்லையோ ஆனால் ,கூட இருக்கின்ற ஐஏஎஸ் ,ஐபிஎஸ் மற்றும் அரசியல் ஆலோசகர்கள் இந்த ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள்.

இது அதிமுக ,திமுக எதிர்க்கட்சிகள் இடையே அரசியல் செய்ய தமிழக வெற்றி கழகம், அரசியல் அஸ்திரமாக கையில் எடுத்து இருக்கிறார்கள் . இன்னொரு முக்கிய விஷயத்தையும் பிஜேபிக்கு தெரிவிக்கிறேன். இன்றுவரை மாநில நிர்வாகிகளுக்கு இந்த உண்மை தெரியுமா? தெரியாதா ?என்பது எனக்கு தெரியவில்லை.
அது என்ன என்றால்! அண்ணாமலை குறுகிய காலத்தில் மக்களிடம் அவர் யார் என்பதை வெளிப்படுத்த முக்கிய காரணமே ,திமுகவின் ஊழலை எதிர்த்து போராடிய அரசியல் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தவிர,அண்ணாமலை திமுகவின் பைல் One, Two என்று அறிவிப்பை வெளியிடுவார். அந்த பரபரப்பு தான் பிஜேபியை பட்டித் தொட்டி எங்கும் போய் சேர்த்தது. கூட்டம் வந்தது. அந்தக் கூட்டம் ஓட்டாக கன்வெர்ட் ஆகுமா ?ஆகாதா? அதுவும் அவர்களுக்கு தெரியாது. இதுதான் அண்ணாமலையின் பாப்புலாரிட்டி .(popularity ) எனவே, தற்போதைய அரசியல் கட்சிகள் மீது மக்கள் எதற்காக நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள் என்பது இப்போதாவது புரிந்ததா?