
நாட்டில் மக்களிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தவும், போராட்டம் என்ற பெயரில் வன்முறைகளை தூண்டி விடவும், உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்பவும், இதற்கெல்லாம் இயக்கம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல நூற்றுக்கணக்கான இயக்கங்கள் இருக்கின்றன .
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இயக்கங்கள், ட்ரஸ்டுகள் இருக்கின்றன. இதன்மூலம் இந்த இயக்கங்களுக்கு பணம் சப்ளை எப்படி வருகிறது? உள்நாட்டில் இருந்து வருகிறதா? அல்லது வெளிநாட்டில் இருந்து வருகிறதா? வெளிநாட்டில் இருந்து கொடுப்பவர்கள் எதற்காக? இங்கு இருக்கின்ற இயக்கங்களுக்கும், டிரஸ்டிகளுக்கும், கொடுக்க வேண்டும்?

ஒருவேளை இங்கிருக்கும் மக்களுக்கு அவர்கள் உதவி செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த நாட்டின் சமூகம், பொருளாதாரம் பாதிக்க இவர்கள் வெளிநாட்டு நிதி உதவி மூலம் நக்சல் கலாச்சாரத்தை அல்லது தீவிரவாத கலாச்சாரத்தை மறைமுகமாக இந்த இயக்கங்கள் மூலம் செயல்படுத்துகிறார்களா? என்பது குறித்து விரிவான ஆய்வறிக்கையை மத்திய அரசின் ஒவ்வொரு உளவு அமைப்புகளும், ஆய்வுக்கணக்கை எடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கொடுக்க வேண்டிய காலகட்டம் தற்போது வந்துள்ளது.

மேலும்,அது பத்திரிக்கையாக கூட இருக்கலாம், தொலைக்காட்சியாக கூட இருக்கலாம், அதனுடைய செய்தி பின்னணி என்ன? என்பது குறித்து அதையும், மத்திய அரசின் உளவு அமைப்புகள் ,உள்துறை அமைச்சகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேலும்,நாட்டில் போராட்டம் என்ற பெயரில், அந்தப் போராட்டத்திற்கும், மக்களுக்கும் எந்தப் பயனும் இல்லாமல், இவர்களுடைய சுயநலத்திற்காக போராடுகிறார்கள். ஒரு போராட்டம் என்றால்! அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இல்லையென்றால் அது மக்களுக்கான அதன் பயன்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும்,போலியான போராட்டங்கள் நாட்டில் மக்களுக்கு எதிரானது. மக்களின் அமைதிக்கு எதிரானது. வன்முறையை தூண்டுவது, அல்லது ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களின் மனசை திருப்புவது, அதில் உண்மை இருந்தாலும் பரவாயில்லை, உண்மையே இல்லாமல், பொய்களை சொல்லி மக்களிடம் போராட்டம் செய்வதற்க்கு பணம் எங்கிருந்து வருகிறது?

மேலும்,பணம் இல்லாமல் ஒருவரும் போராட்டம் நடத்த மாட்டார்கள். பணம் இல்லாமல் ஒருவரும் வெளியே வர மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பணம் தான். இந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு தான், ஒவ்வொருவரும் போராட வருகிறார்கள்.
மேலும்,தற்போதைய இந்தக் கூலிக்கு மாரடைக்கும் கும்பல், சமூகப் போராட்டம் போல், மக்களை போலியாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு பின்னால் ,அரசியல் கட்சிகள் இருக்கலாம். அல்லது வெளிநாட்டு சதிகள் இருக்கலாம் .அல்லது தீவிரவாத அமைப்புகள் இருக்கலாம்.
இது இல்லாமல், நாட்டில் இப்படிப்பட்ட இயக்கங்களும், டிரஸ்ட்களும் ,இந்தியாவில் மக்களிடம் போலியான சமூக சேவை முகத்தை காட்டிக்கொண்டு, ஏமாற்றி வருகிறது.

இதில் முக்கியமாக தற்போது இந்திய அளவில் பேசப்பட்டு வரும் காக்ரோச் கூட்டம், நேஹா போரா கூட்டம், தமிழ்நாட்டில் மே 17 இயக்கம், மக்கள் அதிகார இயக்கம், தொண்டு நிறுவனங்கள் பெயரில், போராடும் கூட்டங்கள், இவை அத்தனையும் தமிழ்நாட்டிலும், இந்திய அளவிலும், ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் வந்துள்ளது.

இவர்களுடைய போராட்டங்கள் மக்களுக்காக என்று சொன்னாலும் ,காங்கிரஸ் கட்சி இதனுடன் இணைந்துள்ளது .அதேபோல், கெஜ்ரிவால் ,மம்தா பானர்ஜி போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து இருக்கிறார்கள். இதனால் நாட்டு மக்களுக்கு என்ன நன்மை? என்பதை இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும்,தேர்தல் ஆணையரை நீக்குங்கள், எஸ் ஐ ஆர் ஒழிக்கப்பட வேண்டும். இது என்ன சுயநலமா? அல்லது பொது நலமா? மக்கள் அந்த அளவுக்கு அரசியலைப் பற்றி எந்த புரிதலும் இல்லாமல், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்தப் போராட்டக்காரர்களின் போராட்ட நோக்கமாக இருக்கிறது.

மேலும்,எஸ் ஐ ஆர்(SIR ) என்பது என்ன? தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம்? தவிர,13 கோடி வாக்காளர்களின் பெயரை டெல்லியில் இருந்து கொண்டு,ஞானேஷ் குமார் நீக்கிவிட்டாரா? அப்படி நீக்க முடியுமா?
அப்படி நீக்கியதால் ,எதிர்க்கட்சிகள் தோற்று விட்டோம் என்று சொல்வது நியாயமா? மேலும்,இறந்தவர்கள் பெயரையும் , ஊரில் இல்லாதவர்கள் பெயரையும், வைத்து வாக்காளர் பட்டியல் என்று நீக்காமல், அதை அப்படியே விட்டு விட முடியுமா?

அதை வைத்து எதிர்க்கட்சிகள் கள்ள ஓட்டு போட்டு ஜெயிப்பதற்கு வசதியா? அதுதான் இந்த போராட்டத்தின் உள் நோக்கமா? எதற்காக இந்தப் போராட்டத்தின் நோக்கம்? இந்தப் போராட்டத்தை நியாயப்படுத்தும் பத்திரிகை தொலைக்காட்சிகள் இந்த உண்மை ஏன் மக்களிடம் வெளிப்படுத்தவில்லை? இதுதான் நான்காவது தூண் மக்களை ஏமாற்றவா? இல்லை சர்குலேஷன் சட்டத்தை ஏமாற்றவா?

மேலும்,உச்சநீதிமன்றமே! இவர்களின் போராட்டத்தைப் பற்றி வேதனை தெரிவித்து இருக்கிறது. தவிர, நாட்டில் பணம் கொடுத்தால், எந்த வேலைக்கும் தயார் என்ற நிலைமைக்கு எப்படியும் பேசவும் ,எப்படியும் போராட்டம் நடத்தவும், மக்களை ஏமாற்ற சமூகப் போராட்டங்கள் என்ற போலி முகவரிகள், அரசியல் கட்சிகளுக்கு பின்னால், இந்தியாவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டும் ,அந்நிய சக்திகளுக்கு எதிராக இந்த போலி முகவரிகள் ,தமிழ்நாட்டிலும் ,இந்தியாவிலும் இருப்பதை களை எடுக்க வேண்டும்.

இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது ?யாரெல்லாம் நன்கொடை கொடுத்திருக்கிறார்கள் ?அவர்களின் முகவரி என்ன? எதற்காக கொடுக்க வேண்டும்? ஏன் கொடுக்க வேண்டும்? இவர்களுக்கும், அவர்களுக்கும் என்ன உறவு? இந்த போராட்டத்தின் மூலம் அவர்களுக்கு என்ன பயன்?

இது அத்தனையும் உளவுத்துறை அமைப்புகள்,உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் . இந்த ஆய்வு உளவுத்துறை அமைப்புகள், தனியார் உளவுத்துறை அமைப்புகள், ஆய்வு செய்து கொடுக்கும்போது தான், இவர்கள் உண்மையான முகம் !நாட்டு மக்களுக்கு முழுமையாக தெரிய வரும் என்பது உறுதி.