நாட்டில் ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் போலிகள் ஆக்கிரமித்துள்ளது. அது மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறதா? அதன் விளைவு மக்களின் வாழ்க்கை போராட்டமா? – சமூகநலன் பத்திரிகைகள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் இந்தியா முழுவதும் ,இது தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் இதே நிலைமைதான் இருந்து வருகிறது.

அதாவது நாட்டின் ஜனநாயக தூண்களான நீதித்துறை, பத்திரிக்கை துறை, காவல்துறை, நிர்வாகத் துறை, இந்த நான்கிலுமே இன்று போலிகள் அதிகரித்துள்ளது. இது முக்கிய துறைகள்.

இந்தப் போலிகள் உடன் ஒரிஜினல் போட்டி போட வேண்டியிருக்கிறது. போலிக்கும், ஒரிஜினலுக்கும் அர்த்தம் தெரியாமல் ,இன்று பத்திரிக்கை துறையில்! பல போலி பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள் போர்வையில் போட்டி போடுகிறார்கள்.

அதை சொல்லக் கூட தகுதி இல்லாமல் இந்த கார்ப்பரேட் முதல் சாதாரண பத்திரிகைகள் வரை குதிரைக்கு கண்ணை கட்டி விட்டது போல, செய்திகளை பத்திரிக்கையில் நிரப்பி, பக்கங்களாக மக்களிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு செய்தி என்பது நிகழ்வுகள் மட்டுமே! அது மாற்றத்திற்கான பத்திரிகைகள் அல்ல.

மேலும்,மாற்றத்திற்கான பத்திரிகைகள் எது? என்பதை செய்தித் துறை தேர்வு செய்ய வேண்டும். எல்லாம் பத்திரிகை ஆகிவிட முடியாது. எல்லோரும் பத்திரிகையாளர்களாக ஆகிவிட முடியாது. பத்திரிகை என்பது மக்களை மாற்றும் சக்தி! அவர்களுக்கு உண்மையை புரிய வைக்கக்கூடிய சக்தி பத்திரிக்கை!

இந்தத் துறையில் இன்று இந்த யூடியூப் களும், whatsapp செய்திகளும், பல போலி பத்திரிகைகளும், ஏதோ அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் காப்பி அடித்து, இதுதான் பத்திரிகை என்றும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமும், தன்னை பத்திரிகை என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

மேலும்,பத்திரிக்கை என்பது RNI மட்டுமே பத்திரிகை அல்ல, எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கை ?என்று கூட தெரியாமல், பத்திரிகையை கணக்கு காட்டி ,சமூகத்திற்கும் ,செய்தி துறைக்கும், ஏமாற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகைகள் ,பல செய்தியாளர்கள், மற்றும் சங்கங்கள், பல இப்படி எல்லாம் இந்த துறை !இன்று போலிகளோடு போட்டி போட வேண்டிய நிலைமைக்கு இருந்து வருகிறது.

மேலும்,மக்களிடம் அங்கீகாரம் பெறுவது தான் பத்திரிக்கை. ஆனால், RNI வந்துவிட்டாலே பத்திரிகை அங்கீகாரம் மத்திய அரசு கொடுத்து விட்டது. அங்கே அதிகாரிகள் செய்தியை பற்றியோ, அதன் தரத்தை பற்றியோ ,எதைப் பற்றியும் அங்கே ஆய்வு செய்யப் போவதில்லை.

ஆனால், எத்தனை நாள் பத்திரிகை அடித்தார்களா? எத்தனை பத்திரிக்கை அடித்து வெளிவந்துள்ளதா? இணையதளத்தில் மாதந்தோறும் அதை ஏற்றுவிட்டார்களா? இப்படி ஒரு கோட் வேர்ட் போட்டு, பத்திரிகையில் தீர்மானிப்பது செய்தி துறைகளின் தவறு.

அதனால்தான் இன்று, மக்களுக்கு உண்மை தெரியாமல் ,போலி அரசியல்வாதிகளும், அரசியலில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,உண்மையான அரசியல்வாதிக்கும், போலிக்கும், அர்த்தம் தெரியாமல், மக்கள் அரசியல் என்று இன்றைய கம்ப்யூட்டர் உலகம் அதை படித்துக் கொண்டிருக்கிறது. எந்த விஞ்ஞான உலகத்தில், மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அதே விஞ்ஞான உலகத்தில் போலிகளால், இன்றைய செல்போன்கள் ஆக்கிரமித்து ,ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும்,விஞ்ஞானம் வளர்ச்சியில்லாத காலத்தில், அதாவது, செல்போன்கள் இணையதளங்கள் இல்லாத காலத்தில், அரசியலில் அதிகம் போலிகள் இல்லை. ஆனால், விஞ்ஞானம் கைகளில் வந்த போது தான் ,அதிக போலிகள் அரசியலில் உருவெடுத்துள்ளது.

இன்று youtube ஐ பார்த்து, அரசியலை முடிவு செய்கிறார்கள். யூட்யூபில் சாப்பாடு போட்டால், சாப்பிட முடியுமா? அது வயிறு நிறையுமா? சொல்லக்கூடிய விஷயங்கள் உண்மையா !பொய்யா? என்பதை தெரிந்து கொள்வதற்கு மக்களிடம் அதற்கான புரிதல், இல்லாமல் இருப்பது தான், இந்த ஏமாற்றங்களுக்கு முக்கிய காரணம்.

மேலும்,அரசியல் எதனால் மக்களுக்கு ஏமாற்றம் என்பதைப் பற்றி மக்கள் சிந்திப்பதில்லை. அவரவர் சுயநலத்திற்கு அரசியல் இருந்தாலே போதும் என்று தான் நினைக்கிறார்கள். அவரவர் நன்மைக்கே அரசியல் இருந்தால் அதுதான் அரசியல் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்க (மக்கள்) செய்கின்ற தவறு.

இன்று போலிகள்! அரசியலில் ஆக்கிரமித்து விட்டார்கள்.அதனால்தான் இந்த போலிகள் மக்களுக்கு எதையாவது கொடுத்து வாக்குகளை வாங்குகிறார்கள். அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள். அதை கைப்பற்றுவதற்கு குறுக்கு வழியில் அதாவது அது பேச்சாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம், உணவாக இருக்கலாம், உடையதாக இருக்கலாம்.

ஏதோ ஒன்று கொடுத்து, அரசியல் பற்றி தெரியாத மக்களிடம், இவர்கள் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள். இந்த நிலைமை ஏதோ ஒரு அரசியல் கட்சியில் அல்ல, பல அரசியல் கட்சிகளில் இந்த நிலைமை இருக்கிறது. இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை ,பத்திரிக்கை துறைக்கு இருக்கிறது.

ஆனால்,உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிகைத்துறை! எவன் காசு கொடுக்கிறானோ, அவனுக்கு இவர்கள் பத்திரிக்கையாகி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவும் பத்திரிகை என்று, செய்தித்துறை அங்கீகரித்து, அதன் வளர்ச்சிக்கு மக்களுடைய வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதாவது செய்தி துறை! உங்களுடைய தவறுகள் என்ன என்பதை பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கு அரசியலைப் பற்றியும் தெரியாது . எல்லாம் குறுக்கு வழியில், வந்து செய்தித் துறையில் அதிகாரியாகி விட்டார்கள்.

எப்படி பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம், பத்திரிக்கை துறையில் வந்து விட்டார்களோ ,அதே போல் தான் செய்தி துறையிலும் ,அதிகாரிகள் வந்திருக்கிறார்கள். இன்று எத்தனையோ பி. ஆர் .ஓ .களுக்கு இந்த உண்மைகளே தெரியாது.

ஏதோ பத்திரிக்கையில் செய்தி போட்டால், அதை கட்டிங் போட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்புவார்கள் .அவ்வளவு தான். இவர்களுக்கு பத்திரிக்கை பற்றி அரசியல் கட்சிக்காரர்கள் அனுபவம் தான் ,இந்த பிஆர்ஓ களுக்கு இருக்கிறது.

அதனால்தான் பத்திரிகையின் தரம், செய்தியின் தரம் ,இது பற்றி எதுவுமே தெரியாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல,எந்த முட்டாள் சர்குலேஷன் சட்டத்தை கொண்டு வந்து, செய்தி துறையில் அங்கீகாரத்தை கொடுப்பான்? பத்திரிக்கை என்றால்! செய்தியா? இல்லை, சர்குலேஷனா ?எது முதன்மையானது?செய்திக்கும், சர்குலேஷனுக்கும், என்ன சம்பந்தம்?

பணம் இருந்தால்! ஒருவன் எத்தனை லட்சம் ?கோடி ?பிரதிகள் வேண்டுமானாலும், அச்சு அடிக்கலாம், ஆனால், தரமான செய்திகளை, உண்மையான செய்திகளை கொடுக்க முடியுமா? அப்படிப்பட்ட தரமான செய்திகளை கொடுக்க முடியாததால், இன்று யூட்யூப் களும் பத்திரிகை என்று இந்த பத்திரிகை துறையை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது.

மேலும்,அரசு செய்தியை கூட யூடியூபில் போடுகிறார்கள். அதாவது இமிடெட் என்று சொல்வார்கள், காப்பியடிப்பது இங்கே போட்டி போட முடியாது. இந்த செய்தியை காப்பி அடித்தாலும், அவர்களால் இதை செய்தியாக சொல்ல முடியாது. நிகழ்வுகளை காப்பியடித்து வேண்டுமானால், போட்டுக் கொள்ளலாம்.

ஆனால், இப்படிப்பட்ட கட்டுரைகளை காப்பி அடித்து போட முடியாது. அதற்கும் திறமை வேண்டும். அப்போதும் இதையே போட முடியாது. எனவே, பத்திரிக்கை துறையில் போலிகள் போட்டி போடுவதற்கு! மத்திய மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளும் ஒரு முக்கிய காரணம். இதன் விளைவு, அரசியலில் ஊழல் அதிகரித்தது.

அப்படிப்பட்ட கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு இவர்கள் சலுகை, விளம்பரங்களை கொடுத்து, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். மேலும்,ஆட்சியாளர்கள் ,அதிகாரம் மிக்கவர்கள், சொல்வதை தான் அவர்கள் செய்ய வேண்டும், இருப்பினும், உயர் அதிகாரிகள் இந்தத் துறையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். அது கொண்டு வராதது சமூகத்திற்கு இன்று பாதிப்பு.

மேலும், பத்திரிக்கைத்துறை! மக்களின் பொதுநலமாக இருந்ததை, இன்றைய ஆட்சியாளர்களின் சுயநலத் துறையாக மாற்றிவிட்டார்கள். அதாவது, நாங்கள் தான் பெரிய பத்திரிக்கை பெரிய தொலைக்காட்சி என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள்,

அதாவது,கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சி நிறுவனங்கள், அரசியலுக்குள் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். என்பதை இதற்கு முன்னே இணையதள செய்திகளின் மூலம் மக்கள் அதிகாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்துப் போராட வேண்டிய பத்திரிகை! இந்த சலுகை, விளம்பரங்களுக்காக இன்று அவர்கள் சொல்வது பத்திரிகை ஆக்கிவிட்டார்கள். இது தலைமைச் செயலகத்தில் ஒரு செயலாளர் செய்தித் தறையில் இருந்து ஒரு பத்திரிக்கைக்கு தலைப்புச் செய்தியை இவர்கள் சொல்வது தான் தலைப்புச் செய்தி என்று தெரிவித்திருக்கிறார். அப்படி என்றால் ,நோகாமல் பணம் சம்பாதிப்பதற்கு பத்திரிக்கை துறையா?

அதன் விளைவு ,நாட்டில் ஊழல் அதிகரித்தது, அரசியல் கலாச்சாரம் முற்றிலும் வன்முறையாகவும், போலிகளும், ரவுடிகளும், ஊழல்வாதிகளும், இன்று ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இதைதான் சிஸ்டம் கெட்டுப் போய் இருக்கிறது என்று ரஜினி , மற்றும் சமூக ஆர்வலர்கள், சொன்னது. இன்று பத்திரிக்கை துறையில்! உண்மையை வெளிப்படுத்துவதற்கு பதிலாக, ஊழலை மறைமுகமாக ஊக்குவிப்பதற்கும், ஊழல்வாதிகளை மக்களிடம் நல்லவர்களாக நியாயப்படுத்துவதற்கும் ,கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் இருக்கிறது. இதுவே இன்று!

நாட்டில் youtube கள் !பத்திரிகை போர்வையில், பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் போலிகளுக்கும், ஒரிஜினலுக்கும், இன்று உண்மை தெரியாமல் பத்திரிக்கை துறை போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு யூ டியூப் ஒருவரின் ஊழலை நியாயப்படுத்துகிறது. இன்னொன்று அதை மறுக்கிறது. இதில் எது உண்மை? மக்களுக்கு குழப்பம். மேலும்,

அதேபோல் காவல்துறையில்! பணியாற்றக்கூடிய காவலர்கள், இன்று ரகசியமாக அரசியல் கட்சியினருடன் உறவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கு காவல்துறை! பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ, அவர்களை விட்டு விட்டார்கள்.

ஏனென்றால், அவர்களால் பணம் கொடுக்க முடியாது. செல்வாக்கு மிக்கவர்கள், அதிகாரம் மிக்கவர்கள், பணக்காரர்கள் ,இவர்களுக்காக சட்டத்தை வளைக்க காவல்துறையில் இருப்பதுதான் ,இன்று நாட்டில், போதைப் பொருள் கலாச்சாரம் வன்முறை கலாச்சாரம், ரவுடிசம், இது எல்லாம் அதிகரித்திருப்பதற்கு காவல்துறையும், முக்கிய காரணம்.

மேலும்,இப்படிப்பட்ட கூட்டத்தை அரசியலில் கொண்டு வந்து, அவர்களும் அரசியல்வாதிகள் என்று அரசியல் கட்சிகளில் நிரப்பி வைத்திருக்கிறார்கள் . இவர்களுக்கு என்ன சமூக சேவை ?செய்ய தகுதி இருக்கிறது? என்று கூட தெரியாதவர்களுக்கு எல்லாம்,

உடம்பைப் பார்த்து, அரசியல் கட்சிகளில் ,பொறுப்புகளை கொடுத்து, இவர்களும் கட்சி என்று திருமாவளவன், ஜெகன் மூர்த்தி, அதிலும் ஜாதி கட்சிகள் மிக மோசமானவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு எல்லாம் பொறுப்புகளை கொடுத்து, சாதாரண பைக் கூட இல்லாதவர்களை எல்லாம், இன்று காரில் கொடி கட்டிக் கொண்டு போகும் அளவிற்கு, அவர்களுடைய நிலைமை என்றால்! நாட்டில் எப்படி எல்லாம் கட்ட பஞ்சாயத்து, இந்த அரசியல் கட்சியின் மூலம் வளர்ந்துள்ளது? என்பதற்கு காவல்துறை தான் பதில் சொல்ல வேண்டும்.

இப்படி அரசியலுக்கு தகுதி இல்லாமல், பத்திரிக்கைக்கு தகுதி இல்லாமல், காவல்துறைக்கு தகுதி இல்லாமல், இருப்பது போல, இன்று நீதித்துறையில் போலிகள் அதிகரித்துள்ளது. அதாவது, கோட்டுப் போட்டவன் எல்லாம் வழக்கறிஞர் என்று பேசிக்கொள்கிறார்கள்.

எப்படி பத்திரிக்கை துறையில்! ஐ.டி. கார்டு இருப்பது போலவே, இதிலேயும் கவுன் போட்டு திரிபவர்கள், எல்லாம் வழக்கறிஞர் ஆகி விட்டார்கள். இவர்கள் எத்தனை வழக்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள்? அப்போது தானே நீ வழக்கறிஞர் .அதுதானே உன் தகுதி!

அதற்கு தகுதியே இல்லாத போது ,நீ எப்படி வழக்கறிஞர் ?என்று பேனர் வைத்துக் கொள்கிறாய்? எத்தனையோ கிராமங்களில் பார்க்கிறேன். அது காசு கொடுத்து வாங்கி வந்த பட்டமா? அல்லது படித்த பட்டமா ?எதுவுமே தெரியாமல், மக்களுக்கு பிளக்ஸ் பேனரில் தன் போட்டோ போட்டு, வழக்கறிஞர் என்று ஊருக்கு நடுவிலே வைக்கிறார்கள்.

மக்கள் எல்லோருக்கும் எல்லா உண்மையும் தெரிந்து விடாது. தெரியாதவர்கள், இவர்களிடம் மாட்டிக் கொண்டால் என்ன ஆவது? எத்தனையோ வழக்கறிஞர்கள் இன்று சீனியர்களிடம் வழக்குகளை கொண்டு போய் கொடுக்கும், புரோக்கர்களாக இருக்கிறார்கள்.

ஒரு வழக்கை எப்படி? நீதிமன்றத்திலே சமர்ப்பிப்பது ?அதாவது பைல் செய்வது என்று கூட தெரியாதவர்கள் எல்லாம், இன்று வழக்கறிஞர்கள். நான் சிறுவயதில் காஞ்சிபுரத்தில், நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அது கிரிமினல் வழக்கல்ல, அது ஒரு சிவில் வழக்கு! அப்போது, திருவள்ளூர் மாவட்டமும், காஞ்சிபுரம் ஒன்றாக இருந்த நேரம், நீதிமன்றத்திலே ஒரு வழக்கறிஞர் உள்ளே வருகிறார். அப்போது அந்த வழக்கறிஞருக்காக, நீதிபதியே எழுந்து நிற்கிறார் என்று பேசிக் கொள்கிறார்கள். இதை ஏன்? சொல்கிறேன் என்றால், வழக்கறிஞர்கள்! அந்த காலத்தில் எப்படி இருந்தார்கள்? என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த செய்தி.

அவர் ஒரு முஸ்லிம், அந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வந்தால், நீதிபதிகளே எழுந்து நிற்பார்கள் என்று கோர்ட் வட்டாரத்தில், அப்போது பேசிக் கொண்ட செய்தி. இப்போது புரிகிறதா? இதனால்தான், மக்களுக்கு வாழ்க்கையில் போராட்டம்! அது மட்டுமல்ல,

நீதிமன்றத்தில், அரசியலில் கொள்ளை அடித்து விட்டு, வழக்கு நடத்துபவர்கள், அதிக வாய்தாக்கள் போட்டுக் கொண்டிருக்கும் நீதிபதிகளால், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியுமா?

இப்படி ஜனநாயகத்தின் தூண்களில்! போலிகள், ஒரிஜினலோடு இன்று போட்டி போட்டுக் கொண்டிருப்பதால், சமூகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் உருவெடுக்கிறது? எவ்வளவு பிரச்சனைகளோடு, மக்கள் வாழ்க்கையோடு ,போராட வேண்டி இருக்கிறது?

மேலும்,எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, மற்றும் கம்யூனிஸ்டுகள், காக்ரோச் கூட்டம், திமுக, ஜாதி அரசியல் கட்சிகள், போன்ற பல அரசியல் கட்சிகளின் போலி அரசியல்! மக்களின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய போராட்டத்திற்கு முக்கிய காரணம்.

இதன் விளைவு நாட்டில் ஊழல். மக்கள் உழைத்து முன்னேற வேண்டும் என்பதற்கு பதிலாக, அரசியல் இன்று ஊரை ஏமாற்றி ,அடுத்தவனை ஏமாற்றி ,முன்னேற வேண்டும் என்ற குறுக்கு வழி நோக்கத்தை கொண்டு வந்துள்ளதே, இந்த போலி அரசியல்! போலிகளை ஒழிக்க வேண்டும் என்றால்!

மக்கள் இனியாவது விழித்துக் கொள்வார்களா? மக்களுக்காக ….!என்றும் மக்களுடன் ….! மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *